முன்னுரை
தமிழ்நாட்டில் 42 வகைப் பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகமான பழங்குடிகள் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ‘பளியர்கள்’ எனும் இனக்குழு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வினக்குழுவின் பூர்வீகம் பற்றிய தொன்மை வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. (சி.நல்லதம்பி, ப.24, 2011). தமிழ் நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குருமன்ஸ் என்ற இரண்டு சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியில் (மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில்) கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் மலபார், வயநாடு, மைசூர் ஒட்டிய பகுதிகளில், இனவரைவியல் ஆய்வுகளின்படி, ஆலுகுரும்பா, பாலுகுரும்பா, பெட்டகுரும்பா, தேனு குரும்பா, முள்ளுக் குரும்பா, ஊராளிக் குரும்பா, முடுகர் என ஏழு விதமான பழங்குடிக் குழுக்கள் இருக்கின்றன. (அ.சந்திரமோகன், ப.8, 2015). தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் இரண்டு வகையான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் ‘பளியர்கள்’ என்றும் மற்றொரு பிரிவினர் ‘முதுவர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆதிகாலங்களில் இருந்து மலைப்பகுதிகளையே பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாக இருக்கிறது. (கொ.சதாசிவம், ப.1, 2015). தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் போதுமான விழிப்புணர்வுகள் இன்றி மலைப்பகுதிகளிலும், மலையொட்டிய கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அரசின் சலுகைகள் அவர்களுக்கு எத்தனை சதவிகிதம் இருக்கிறது அவற்றில் அவர்கள் எப்படிப் பயன் பெறுவது என்பது கூட தெரியாத விளிம்பு நிலை மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இதை தெளிவாகப் புரிந்துகொண்ட தரைவாசி மக்களில் பலர் போலிப்பழங்குடியின சான்றிதழ்களைப் பெற்று பழங்குடியின மக்களின் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
மிகவும் பிற்பட்டோர் (MBC)
மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் 17 மற்றும் 61 ஆவது இடத்தில் குறிப்பிட்டுள்ள குரும்பர், குருபா, குரும்பக் கவுண்டர் எனப்படுவோர், ‘குருமன்ஸ்’ பழங்குடி எனச் சான்றிதழ் வழங்கக் கோருகின்றனர். அக்காலத்தில் அதாவது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் குரும்பா என்பதை குருமன்ஸ் என்று உச்சரித்து, பதிவு செய்ததை, இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். (நீலகிரியில் உள்ள தொகுத்தவர்களைத் தோடா எனவும் கோத்தர்களை கோத்தா எனவும் சோளர் பழங்குடியினரை சோளகா/ சோளிகா எனவும் பிரிட்டிஷ்காரர்கள் உச்சரித்தனர், அதே போன்றே அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலிலும் பெயர்களைப் பதிவும் செய்தனர்).
குரும்பக் கவுண்டர்
குரும்பர்-குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் ஆடு மேய்ப்பதை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட மிகவும் பிற்பட்ட சாதியினராவர். இவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களில், சமவெளிப் பகுதிகளில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். 5 இலட்சத்திற்கும் கூடுதலாக மக்கள் இது வரையிலும் போலியாக எஸ்.டி., (ST)
பழங்குடியின குருமன்ஸ் என்ற சாதிச் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்களுடைய சாதிச் சான்றிதழ்கள் பழங்குடியின/ ST என்றிருந்தபோதிலும், இரத்த உறவுகள், மண உறவுகள், சமூக உறவுகள், பண்பாடு அனைத்திலும் மிகவும் பிற்பட்ட சாதியினரான குரும்பக் கவுண்டர் சாதியைச் சார்ந்ததாக இருக்கிறது. இவர்கள், குரும்பக் கவுண்டர் சாதியின் ஒரு அங்கமே ஆவர்.
பளியர்கள்
மலைப்பகுதிகளிலேயே வாழ்ந்து பழகிவிட்ட பளியர்இன மக்கள் இன்றும் மலைப் பகுதிகளுக்குச் சென்று மலைப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அங்கிருந்து கொண்டு வரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சாரனத்தி வேர், முறுங்கை இலை, பெரண்டை, துளசி, ஆவாரம் பூக்கள், வெள்ளறிக்கலச்செடியின் வேர்,
சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைப் பொருட்களைச் சேகரித்து வைத்து அதை தங்கள் பகுதிகளுக்கு வரும் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்து அதிலிருந்து வரும் வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்.
முதுவர்கள்
பழங்குடியினப் பிரிவில் முதுவர்களும் அடங்குவர். தேனி மாவட்டத்தில் போடி ஒன்றியத்தில் குரங்கனி ஊராட்சிக்குட்பட்ட முதுவர்குடி எனும் மலைகிராமத்தில் 30 குடும்பத்தைச் சேர்ந்த முதுவர்இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பரம்பரையாக அந்த மலையிலேயே வாழ்ந்து வந்தவர்கள். மலையில் தங்களுக்கான நிலங்களில் விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்கின்றனர்.
பழங்குடி (ST) மக்கள் தொகை வளர்ச்சி
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த பழங்குடியின மக்கள் தொகை 7,94,697 (1,1 சதவிகிதம்) ஆகும். இவர்களில், ஒன்றை இலட்சத்திற்கு மேற்பட்டோர் பழங்குடிகள் அல்லாதவர்கள் பழங்குடியினச் சான்றிதழ் வைத்திருப்போர் என்பதுதான் அதிர்ச்சிக்குறிய விசயமாகும். 1971 சென்சஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515 மட்டுமே ஆகும். ஆனால், 1981 கணக்கெடுப்பில் 5,20,226 என உயர்ந்து விட்டது. அதாவது 1971-1981-ற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகை (அதிர்ச்சிகரமான வகையில்) 67 சதவிகிதம் உயர்ந்து விட்டது. 1981-91 பத்தாண்டுகளில், மக்கள் தொகையில் 10 சதவிகிதமும், 1991–2001 பத்தாண்டுகளில், தமிழகப் பழங்குடியின மக்கள் தொகையில் உயர்வு 13 சதவிகிதம் மட்டுமேயாகும். 1971-81, பத்தாண்டுகளில் உயர்ந்த 67 சதவிகித எண்ணிக்கையில், 50 சதவிகிததிற்கு மேற்பட்டவர்கள், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் பழங்குடிகள் அல்லாதவர்கள்; பழங்குடியினச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆவர். கல்வி மற்றும் வேலைவாய்பில் பல்வேறு உயர் பதவிகளை அபகரித்துக் கொண்ட இந்தப் பழங்குடிகள் அல்லாதவர்கள் உண்மையான பழங்குடிகளின் இட ஒதுக்கீட்டிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.
போலிப் பழங்குடிகள்
பழங்குடிப் பட்டியலில் உள்ள 36 வகையான சாதிகளில், பெரும்பான்மையான பழங்குடி இனங்களில் பழங்குடிகள் அல்லாதவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் பழங்குடிகள் அல்லாதவர்களே பழங்குடிச் சாதிகளாக இருப்பது காட்டு நாய்க்கன், குருமன்ஸ், கொண்டா ரெட்டி, மலைக்குறவன், மலைவேடன் போன்ற சாதிகளின் பெயரில். கிட்டத்தட்ட 20 சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் பழங்குடிகள் அல்லாதவர்களாக உள்ளன.
2007-08-ல் பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா கமிட்டி (2004) அறிக்கைகள் போன்றவை புள்ளி விபரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடி அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரிப்பதாகவும், பின்வரும் பழங்குடியினர் விசயத்தில், அவர்களின் மக்கள் தொகையில் திடீரென்று எழுச்சி/வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதாகவும், பூரியா கமிட்டி அறிக்கை சுட்டிக்காட்டியது. அப்பட்டியலில் 1961-1991 வரை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2001 கணக்கெடுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்காக, சில போலிப் பழங்குடிகள்
லோக்கூர் கமிட்டியால், 1965-ல் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்ட பழங்குடியான கொண்டாரெட்டி 1961-ல் வெறும் 8 பேரிலிருந்து 1991-ல் 30,391 ஆக உயர்ந்தது. மாநில கூர் நோக்கு குழுவின் கெடுபிடிகளால் 2001-ல் 19,653-ஆகக் குறைந்தது. அதேபோல, மலை வேடன் மற்றும் மலைக் குறவன் சாதி எண்ணிக்கையிலும் சிறிது சரிவு ஏற்பட்டது. குருமன் சாதியைப் பொறுத்த வரையில் தொடர்ந்து எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. உண்மையான குறும்பா பழங்குடிகள் நீலகிரிப் பகுதியில் 1961-ல் 1,174 பேர், 2001-ல் 6,823 என்ற எண்ணிக்கையில்தான் இருந்துள்ளனர். முற்பட்ட சாதியான ரெட்டி, ரெட்டியார் பழங்குடியின கொண்டா ரெட்டியாகவும், பிற்பட்ட வகுப்பினரான நாய்க்கர், நாய்க்கன் மற்றும் நாயுடுக்கள் பழங்குடியின காட்டு நாய்க்கன் ஆகவும், பிற்பட்ட சாதி ஊராளிக் கவுண்டர் பழங்குடி ஊராளியாகவும், பிற்பட்ட வகுப்பு குச்சடிகார் பழங்குடி குறிச்சான் ஆகவும், பிற்பட்ட வகுப்பினரான குரும்பா, குரும்பர், குருபா, குரும்பக் கவுண்டர் பழங்குடி குருமன்ஸ் ஆகவும், போலிகள் பல்கிப் பெருகியுள்ளதை மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறைகளும், அமைச்சரகங்களும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.
பழங்குடிச் சான்றிதழ்கள்
இன்றும் விளிம்பு நிலை மக்களாகவே வாழும் பழங்குடியின மக்களுக்காக தரைவாழ் மக்கள் அனுதாபப்பட்ட காலங்கள் மாறி இன்று அவர்களின் (எஸ்.டி) பங்கைத் திருடுபவர்களாகவும், மனச்சாட்சியே இல்லாத மக்களாகவும், பிறச் சாதிகளைச் சேர்ந்த படித்தவர்களும் மாறிப்போன அவலங்கள் நம் தமிழகத்தில் அரங்கேறுகிறது, இதுபோன்ற வன்மையான செயல்முறைகள், சமூக நீதியின் பிறப்பிடமாகப் போற்றப்படும் நம் தமிழகத்திற்கே பெரும் அவமானத்தைத் தேடித்தருகிறது. மேலும், தமிழகத்தில் அருகி வரும் தொல் பழங்குடியினர் (Particularly Vulnerable Tribal Groups- PVTG) எனக் கருதப்படும் காட்டு நாயக்கன், இருளர் போன்ற பழங்குடிப் பிரிவுகளிலும் பழங்குடிகள் அல்லாதவர்கள் நுழைந்து பழங்குடிச் சான்றுகளைப் பெற்றுள்ளனர்.
குரும்பா/ குரும்பக் கவுண்டர்கள்- பழங்குடி குருமன்ஸ் அல்ல
மத்திய பழங்குடியின அமைச்சரகம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பல்வேறு காலகட்டங்களில் மேற்கண்ட ஆய்வுகள் மற்றும் உண்மையான பழங்குடியின அமைப்புகளால், மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட புகார்கள் ஆகியவற்றின் பின்னணியில், பின்வரும் முக்கிய குழுக்கள் ‘குரும்பர்-குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் பழங்குடி குருமன்ஸ் அல்ல’ என்ற அறிக்கைகளை வழங்கியுள்ளன.
1. தமிழ்நாடு அரசாங்கம் பழங்குடியினர் நலத்துறை (சென்னை) இயக்குநர் தலைமையில் மாவட்ட கலெக்டர்களையும், தருமபுரி, அரூர் வட்டார வருவாய் அதிகாரிகள் திருப்பத்தூர் சப்-கலெக்டர் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவானது, ஆய்வு செய்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் சாதிகள், மிகவும் பிற்பட்ட சாதியினர் குரும்பரே என்றும் குருமன்ஸ் பழங்குடி அல்ல என்றும் திட்ட வட்டமாகத் தெரிவித்தது. (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை 66, தேதி 05/08/2011)
2. குரும்பா, குரும்ப கவுண்டர், குரும்பன், குரும்பச் சாதிகளை தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி குருமன்ஸ் சாதியோடு ஒரே மாதிரியானதுதான் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை மக்கள் தொகைப் பதிவாளர் (Registrar General of India) நிராகரித்ததை, தேசிய பழங்குடியின ஆணையம் தனது 24.11.2014-ம் தேதி குறிப்பேட்டில் (மினிட்ஸ்) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
3. சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் பலவும் குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகளாக ஏற்கவில்லை.
(அ) ‘குரும்பன் மற்றும் குரும்பக் கவுண்டர்களுக்கு பழங்குடி குருமன்ஸ் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்ற தமிழக அரசாணை எண் 388 (06/05/1977) க்கு எதிராக டாக்டர். அம்பேத்கர் சமூக நல சங்கத்தினர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் டபுள்யூ பி எண் 2401/1977) இத்தகைய ஆணைகளை இந்திய குடியரசு தலைவர்தான் பிறப்பிக்க முடியும், தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என தீர்ப்பு வழங்கி அரசாணை 388-ஐ ரத்து செய்தது.
(ஆ) குருமன்ஸ் குலசங்கத் தலைவர் கே.எல்.கரிபிரான் எதிர் தமிழக அரசு வழக்கில் (11933/1983, 3238/1984) 08/07/1994-ல் வழங்கிய தீர்ப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் குரும்பா மற்றும் குருமன்ஸ் பழங்குடிகள், வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் பழங்குடியினர் என்று கூற முடியாது என்று தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
(இ) P.கர்தான் என்பவர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்த குரும்பா மற்றும் குரும்பக் கவுண்டரை மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் அரசாணை எண் 96 (08/09/2008) பிறப்பிக்கப்பட்டு குரும்பக் கவுண்டர்கள் மிகவும் பிற்பட்ட சாதியினர் ஆயினர். அதே P.கர்தான் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் சில மாதங்கள் கழித்து, குரும்பக் கவுண்டர்களைப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வழக்கு (WP No 1819/2010) தொடுத்தார்.
உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 05/10/2010-ல் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவரே மேல்முறையீடும் (WP Civil Appeal No 176/2011) செய்தார். இந்த மேல் முறையீட்டையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
பழங்குடிகள் அல்லாதவர்கள் பழங்குடிகளாக உருவான முறை
பழங்குடிகள் அல்லாதவர்கள் விவகாரத்தில், உண்மையின் தன்மையை மெய்பித்து மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனையில், உயர் பதவியில் இருந்த சிலர் ஏராளமான போலிப் பழங்குடிச் சான்றிதழ்களுக்கும் போலிகள் நீடிப்பதற்கும் வழிவகுத்தனர்.
போலிச் சான்றிதழ்களுக்கு தடை
திரு. அண்ணாமலை அவர்கள் அரசு செயலராக (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை) பொறுப்பேற்ற பிறகு, போலிச் சான்றிதழ்களுக்கு தடை விதித்தார். கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். பின்னர் உண்மையான பழங்குடி மக்களுக்கே அதிக பரிசீலனைக்குப் பிறகுதான் சான்றிதழ் வழங்கப்பட்டது.
உண்மையான பழங்குடிகள்
உண்மையான பழங்குடிகள் அவர்களின் பூர்வீக இடங்களான மலைப்பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டு கீழிறக்கப்பட்டு தரைவாழ் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, தங்கள் பாரம்பரியங்களை கடைபிடிக்க முடியாதவர்களாகவும். தங்கள் நிலங்களை இழந்தவர்களாகவும், தங்ளின் பூர்வீகமான மலைக்குள் செல்லக்கூட அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டு அதிகமான சிரமத்தில்
இருக்கிறார்கள்; மலையையே நம்பி வாழ்ந்த அம்மக்கள் இன்று மலைப் பகுதிகளை இழந்துவிட்டு நிற்கிறார்கள். அவர்கள் மலைப்பகுதிகளைவிட்டு அரசு நமைக் கீழே இறக்கிவிட்டதே என்று நினைத்து ஏங்குகிறார்களே தவிர அரசினுடைய சலுகைகளை அவர்களினுடைய இடஒதுக்கீடடை முறையே மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர்களாக இல்லை. ஆனால் இந்தப் பழங்குடிகள் அல்லாதவர்களோ மத்திய, மாநில அரசுப் பணிகளில் உயர்நிலை அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான பழங்குடிகளின் வாழ்க்கை நிலை குறித்து கீழே காண்போம்
(I) தொழில்
ஒரு காலத்தில் வேட்டையாடுவதையும், தேன் எடுப்பதையும், மரம் வெட்டுவதையும் முக்கியத் தொழிலாக வைத்திருந்த இம்மக்கள் காலப்போக்கில் வேட்டையாடும் தொழில், மரம் வெட்டும் தொழில் ஆகியவைகளை விட்டுவிட்டு இன்று தேன் எடுக்கும் தொழிலை மட்டுமே தங்கள் குலத் தொழிலாக வைத்திருக்கின்றனர். ஷாம்பூ தயாரிக்கப் பயன்படும் இன்டா பட்டை, நன்னாரி வேர்களைச் சேகரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
(II) பொருளாதாரம்
அன்றாட வாழ்விற்கு தேவையான பொருட்களைத் தேடுபவர்களாகவும், அவைகளை விற்று அன்றாடப் பசியை தீர்த்துக் கொள்பவர்களாகவும், நாளைய வாழ்விற்கு பணத்தை சேகரித்து வைக்காதவர்களாகவும், நாளைய வாழ்க்கையின் மீது அக்கரை இல்லாத அன்றாடங்காட்சி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
(III) அரசியல்
பல்வேறு அரசியல் கட்சிகளின் பழங்குடியினப் பொறுப்பில் இருப்பவர்கள் போலிப் பழங்குடியினர்களாகவே இருக்கின்றனர். ஆகவே நிறைய சலுகைகள் முறையாக மலைப்பகுதிகளில் வாழுகின்ற உண்மையான பழங்குயின மக்களுக்குச் சென்றடைவதில்லை.
(IV) கல்வி
கல்வியின் மீது அதிக அக்கரை இல்லாத மக்களாகவே உண்மையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். கல்வியைப் பற்றி அவர்களிடம் பேசும்போது, இன்றைய உணவிற்கே வழியில்லாத எங்களுக்கு கல்வியால் என்ன தரமுடியும் என்று கேட்கின்றனர். இதிலிருந்தே அவர்களின் அறியாமைகள் வெளிப்படுகின்றன. அப்படியிருந்தும் தமிழகத்தின மலைவாழ் பகுதிகளில் சில இடங்களில் பலர் படித்து முன்னேறி வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
(V) வேலைவாய்ப்பு
நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகித இடஒதுக்கீடும், பழங்குடியினர்களுக்கு 1 சதவிகித இடஒதுக்கீடும் வழங்ப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் போட்டிகளே இல்லாமல் இருந்த இடஒதுக்கீட்டு முறைகளில் இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்தால் வெகுவான போட்டிகள் நிலவுகின்றன. இதில் பழங்குடியினருக்கான பதவிகளைப் பூத்தி செய்ய சில இடங்களில் ஆட்கள் இல்லாமலும் இருந்தது. இதை அறிந்து கொண்ட தரைவாழ் மக்களில் பலர் போலிப் பழங்குடியின சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு விரைவில் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால் உண்மையான பழங்குடியின மக்களான மலைவாழ் மக்கள் அரசு வேலைக்குச் செல்ல முடியாமல் விளிம்பு நிலையில் நின்றுகொண்டு தவிக்கின்றனர். மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்கள் பழங்குடியினர்களாகவும், தரைவாழ் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் அல்லாதவர்கள் அரசு சலுகைகளைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
முடிவுரை
பழங்குடிகள் அல்லாதவர்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கும் முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசு நேர்மையான மாவட்ட ஆட்சித் தலைவர்களை நியமித்தும் தனிக்குழு அமைத்தும் அதன் மூலம் உண்மைத் தன்மைகளை அறிய, நேரடியாக பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைவாழ் பகுதிகளுக்கும், போலிப் பழங்குடியின மக்கள் வசிக்கும் தரைவாழ் பகுதிகளுக்கும் சென்று தீர களஆய்வு செய்து முடிவெடுக்கும் நிலையில் யார்? உண்மையான பழங்குடிகள். யார்? பழங்குடிகள் அல்லாதவர்கள்; என்ற உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அதுவே தமிழகத்தில் வாழுகின்ற பழங்குடியின மக்கள் முன்னேற்றம் பெறுவதற்கும், ஒட்டுமொத்த இந்தியாவில் வாழுகின்ற பழங்குடியின மக்கள் விழிப்புணர்வை பெறுவதற்கும் வழிவகையாக அமையும்.
தகவல் குறிப்புகள்:
1. அ.சந்திரமோகன் (2015). நீதி தவறிய நீதி மன்றங்களும், நெறி தவறிய அரசியல்வாதிகளும். http://www.facebook.com/arun.nathan.12> பக். 7-11.
2. சி.நல்லதம்பி, (2011). தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், புலம், ப.24.
3. கொ.சதாசிவம், பெ.பழனிச்சாமி (2015). தமிழ் நாட்டில் தேனி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள், http://www.tamil.wikkypedia> பக் 1-7.
5. Jeyaprakash.K, Ayyanar.M, Geetha.KN, Sekar.T (2011). Traditional uses
of medicinal plants among the tribal people in Theni District (Western Ghats),
Southern India, Asian Pacific Journal of Tropical Biomedicine, pp 20-21, from journal
homepage:www.elsevier.com/locate/apjtb
6. Prem Nazeer. C (2015). Tribals in Tamil
Nadu with Special Reference to Tribes of Pachamalai Hills, from http://www.iiste.org/journals/, pp 50-53.
தமிழ்நாட்டில் பழங்குடி அல்லாதோர் ,
ReplyDeleteபழங்குடியினருக்கு வழங்கும் சலுகைகளை தமிழ்நாட்டில் எவ்வாறு
சுரண்டப்படுகிறார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்தியம்பிய
பேராசிரியர் திரு.பெரு.பழனிசாமி
அவர்களுக்கு என் ஆழ்மனதின்
வாழ்த்துக்கள்.
என்றும்
எல்.தருமன்
18.பட்டி.
This comment has been removed by the author.
Deleteதமிழ்நாட்டில் பழங்குடி அல்லாதோர் ,
ReplyDeleteபழங்குடியினருக்கு வழங்கும் சலுகைகளை தமிழ்நாட்டில் எவ்வாறு
சுரண்டப்படுகிறார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்தியம்பிய
பேராசிரியர் திரு.பெரு.பழனிசாமி
அவர்களுக்கு என் ஆழ்மனதின்
வாழ்த்துக்கள்.
என்றும்
எல்.தருமன்
18.பட்டி.
குறும்பர் பழங்குடி மக்களின் புரிதல் இல்லாமல் நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள் என்று புரியவில்லை முதலில் நீங்கள் பழங்குடி மக்கள் ஆய்வு செய்து கள
ReplyDeleteஆய்வு செய்து வாருங்கள் இன்றும் தர்மபுரி, கிஷ்ணகிரி, சேலம், பகுதியில் பழங்குடி இல்லை என்றால் கொங்கில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் ஆய்வுகள் பொய்யா உங்களை போன்ற ஆய்வு செய்பவர்கள் மக்களின் வாழ்வியலை புரிதல் இல்லாமல்
நிலங்களில் முதல் நிலம் குறிஞ்சி நிலம் அந்த நிலத்தில் வாழ்ந்தவன் குறவன் என்றால், எப்படி சொல்லுகிறீர்கள் குறவன் போலி பழங்குடி என்று.?
ReplyDeleteகுறவன் பழங்குடி மட்டும் அல்ல குறவன் ஒட்டுமொத்த மலை வாழ் பழங்குடி இனத்தையும் அழிக்க ஆங்கிலயர் ஏற்ப்படுத்திய சட்டத்தால் குற்றப்பழங்குடி சட்டத்தை எதிர்த்து போராடி அதன் காரணமாக குறவன் குற்றப் பழங்குடி என்று பழி சுமந்து வாழ்கை இழந்தவன் குறவன் மலைவாழ் பழங்குடி மட்டும் அல்ல இந்த மண்ணின் உண்மையான பூர்வீக பழங்குடிகளே,
(சிவ நரேந்தர்,7373228702)
நிலங்களில் முதல் நிலம் குறிஞ்சி நிலம் அந்த நிலத்தில் வாழ்ந்தவன் குறவன் என்றால், எப்படி சொல்லுகிறீர்கள் குறவன் போலி பழங்குடி என்று.?
ReplyDeleteகுறவன் பழங்குடி மட்டும் அல்ல குறவன் ஒட்டுமொத்த மலை வாழ் பழங்குடி இனத்தையும் அழிக்க ஆங்கிலயர் ஏற்ப்படுத்திய சட்டத்தால் குற்றப்பழங்குடி சட்டத்தை எதிர்த்து போராடி அதன் காரணமாக குறவன் குற்றப் பழங்குடி என்று பழி சுமந்து வாழ்கை இழந்தவன் குறவன் மலைவாழ் பழங்குடி மட்டும் அல்ல இந்த மண்ணின் உண்மையான பூர்வீக பழங்குடிகளே,
(சிவ நரேந்தர்,7373228702)
பெ.பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏
ReplyDeleteஒருசில இடங்களில் தாங்கள் கூறியது போல் பொய்யான இனசான்று பெற்று மாநில கூர்நோக்கு குழு பொய் என கூரிய பின்னும் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட வருவாய் துறை அதிகாரி, பழங்குடியின இயக்குனர் மற்றும் அரசு பழங்குடியின செயலர் இவர்களுக்கு அதை பற்றிய புகார் கொடுத்தால் கண்டுக்காமல் இருக்கும் காரணம்?????
ஏமாற்ற படும் பழங்குடியின மக்களை பற்றிய காரணங்கள் மிகவேதனையுடன் கூறியுள்ளீர்கள்.இதை தடுக்க வேண்டிய கட்டாய உன்மையான மனமும் ,திறமையும் தைரியமும் உள்ளவர்கள்?????????
பெ.சண்முகம்.மாவார் கிராமம்,நாமக்கல் மாவட்டம்.