Thursday, 16 March 2017

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், பணமில்லா பரிவர்த்தனையும் வரமா? சாபமா?


பெரு.பழனிச்சாமி
முனைவர்பட்ட ஆய்வாளர், பொருளியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21.
அலைபேசி: 9715793829, மின்னஞ்சல்: palanimku@gmail.com

முன்னுரை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், பணமில்லா பரிவர்த்தனையும் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குமென்று அனைவரும் வரவேற்றனர். அதாவது கருப்புப் பணம் வெளியில் வரும், நாட்டில் இலஞ்சம் ஊழல் ஒழிந்துவிடும் தூய்மை இந்தியா உருவாகிவிடும் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் நடந்த விசயங்கலோ அதற்கு மாறாக இருந்துவிட்டன. மக்கள் தாங்கள் சேகரித்த தங்கள் பணங்களை வங்கிகளில் பெறுவதற்கே நீண்ட நேரம் வங்கிகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. கருப்புப் பணம் வைத்திருக்கும் யானைகளைப் பிடிப்பதற்காக வன விலங்குகளை சூறையாடும் நிலை உருவானது. பணமில்லா பரிவர்த்தனையை பலர் முறையே செய்யத் தெரியாமல் வங்கிகளில் பலர் பிறரின் உதவிகளை நாடி அழைகிறார்கள்.
ரூபாய் நோட்டு:
ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமான அளவில் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு நாட்டின் நோட்டுகளும் வித்தியாசமான அளவில் இருக்கும். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கரன்ஸி என்று கூறப்படுவது பிலிப்பைன்ஸ் நாடு நடந்த 1998-ஆம் ஆண்டு அச்சடித்த 100,000 peso என்ற கரன்சிதான். அதேபோல் ஸ்பானிஷ் தனது நூற்றாண்டு விழாவின் போது அச்சடித்த 180,000 நோட்டுக்களும் அளவில் பெரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் .டி.எம்:
ரூபாய் நோட்டுகளை வங்கிகள் கையால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் உலகின் முதல் .டி.எம் மிஷினை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஷெப்பர்டு என்பவர் கண்டுபிடித்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு லண்டனில் முதல் .டி.எம் உருவாக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 1.7 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்தும் .டி.எம் பணப்புழக்கத்தை அதிகரிக்க வைத்துள்ளது. முதலில் ஆறு இலக்க பின் நம்பர் இருந்தது. இந்த நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட்டதால் பின்னர் அது 4 இலக்க எண்ணாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கரன்சியில் உள்ள டாலர் வடிவம்:
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கரன்சிகளில் டாலர் வடிவங்கள் முதலில் P மற்றும் S போன்ற வடிவங்களில் உருவாகியது. P மேல் பகுதியிலும் S கீழ்ப்பகுதியிலும் இருந்தது. ஆனால் இந்த கரன்சிகள் 1875-ஆம் ஆண்டுகளுக்கு முன்புதான் பயன்பாட்டில் இருந்தது. தற்போதைய அமெரிக்க டாலர்களில் இந்த வடிவம் கிடையாது.
இந்திய கரன்சிகளின் வாழ்நாள்:
இந்தியாவைப் பொறுத்தவரை 5, 10, 20, 50, 100, 500, 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இவற்றில் 5 ரூபாய் நோட்டுகள் அதிக புழக்கத்தில் இருந்துள்ளது. எனவே இதன் வாழ்நாள் ஒருவருடம் மட்டுமே இருந்துள்ளது. அதன் பின்னர் இந்த நோட்டுகள் பழுதாகி மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே வரும். 10 ரூபாய் நோட்டுகளும் அதிக புழக்கத்தில் இருந்ததால் இரண்டு வருடங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும். அதே போல் 10 ரூபாய் ரூ.100 நோட்டு 3 அல்லது 4 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும். மிக அதிக மதிப்பான ரூ.500 ரூ. 1000 நோட்டுகள் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை புழக்கத்தில் இருக்கும்.
ரூபாய் நோட்டுகளில் தலைவர்களின் படங்கள்:
ராணி எலிசபெத் அவர்களின் படம்தான் சுமார் 33 நாடுகளின் கரன்சிகளில் உபயோகப்படுத்தப்பட்டது. இவர்தான் உலகின் அதிக கரன்சிகளில் இடம்பெற்றவர். கனடா 1953-ஆம் ஆண்டு பிரிட்டனின் 9 வயது இளவரசியின் படத்தைப் பயன்படுத்தி $20 கரன்சியை அச்சடித்ததுபிரிட்டனின் ராணி எலிசபெத்தின் படத்தைப் பயன்படுத்தி 26 விதமான கரன்சிகள் அச்சடிக்கப்பட்டது. அவை பெரும்பாலும் இன்று வரை நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான நாடுகள் ராணியின் வயதான தோற்றத்தில் கரன்சிகளை அச்சடித்து வருகின்றன. ஒருசில நாடுகள் மட்டும் பழைய இளமையான ராணியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறது.
அழுக்கடைந்த கரன்சிகள்:
சட்டவிரோதமான நோட்டுகளையும் அழுக்கடைந்த நோட்டுகள் என்று சொன்னாலும் உண்மையான நோட்டுகளும் இந்தியாவின் பல இடங்களில் அழுக்காகி வருகின்றது. ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் கணிப்பின்படி இந்தியாவில் உள்ள பல கரன்சிகளில் வைரஸ், பாக்டீரியாக்கள் உள்படப் பல ஆபத்தானவை ஒளிந்திருக்கின்றன. பல நபர்களின் கைகள் பட்டும், .டி.எம் களில் இருந்து பெறப்பட்டும் வருவதால் இது ஒரு நோய் பரப்பும் கருவியாக உள்ளது.
100 மில்லியன் டாலர் நோட்டு:
ஜிம்பாவே நாடு கடந்த ஜனவரி மாதத்தில் நூறு மில்லியன் டாலர் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அதாவது ஒன்றுக்குப் பின்னர் 14 ஜீரோக்கள் அடங்கிய நோட்டு ஆனால் ஒருசில வாரங்களில் அந்த நோட்டைத் திரும்ப பெற்ற ஜிம்பாவே, அதன் பின்னர் அந்நாட்டு மக்களை அமெரிக்க டாலர், தென்னாப்பிரிக்காவின் ரேண்ட், பிரிட்டிஷ் நாட்டின் பவுண்ட், இந்திய ரூபாய், ஜப்பான் யென், சீனாவின் யான் ஆகிய நோட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதித்தது. பல நாடுகளின் சரன்சியை பயன்படுத்த அனுமதித்தால் அந்நாட்டில் பொருளாதாரம் வலுவாகி பணவீக்கம் 0% வரை சென்றது.
உலகின் முதல் பேப்பர் கரன்சி:
சீனாவில்தான் முதன்முதலாகப் பேப்பர் கரன்சி பயன்படுத்தப்பட்டது. கி.மு. 806-ஆம் ஆண்டிலேயே அந்நாட்டில் பேப்பரிலான கரன்சி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ரூயாய் நோட்டுகள் 17-ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் தோன்றியது. மேலும் 1023-ஆம் ஆண்டு சீனா 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மங்கோலிய தலைவர் குப்லைகான் அவர்களின் புகைப்படத்துடன் கரன்சியை வெளியிட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை:
கருப்புப் பணத்தை மீட்க்கப்போவதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் இரவு திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அவ்வறிவிப்பின் பேரில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் வெளியாகின. 2000 ரூபாய் நோட்டு முதலில் வெளிவந்ததால் சில்லரைத் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. பின்னர் 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தது சில்லரை தட்டுப்பாடு சற்று குறைந்தது. வங்கிகளில் ஒரு வாரச் செலவிற்கு 24.000 ரூபாயும், .டி.எம்-களில் ஒரு நாளைக்கு 2000 ரூபாயும் மட்டுமே எடுக்கலாம் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. ஆனால் முறைப்படியாக எந்த .டி.எம்-களிலும் பணம் வைக்கப்படவில்லை. நிறைய .டி.எம்-களில் பணமில்லை என்றும், பணிசெய்யவில்லை என்றுமே எழுதி வைக்கப்பட்டிருந்தது. .டி.எம்-களில்தான் பணமில்லை வங்களிலாவது அரசு சரி செய்திருக்க வேண்டும். வங்கிளிலும் பணம் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர், .டி.எம்-களில் பணத்திற்கு வரிசையில் நின்று உயிர் நீர்த்தவர்கள் அதிகமானவர்கள். நம் பணத்தை நம்மால் எடுக்க முடியவில்லை என்று பொது மக்களால் .டி.எம்-கள் உடைக்கப்பட்டன. பொது மக்களின் போராட்டங்களும் வலுத்தன ஆனால் எதற்கும் செவி சாய்க்காத மத்திய அரசு தான் போட்டதுதான் சட்டம் என்று சாதித்துவிட்டது. சில நாட்கள் கழித்து 4000 ரூபாய் .டி.எம்-மில் எடுக்கலாம் என்று அறிவித்த அரசு தற்போது 10.000 ரூபாயாகவும் வங்கிளில் ரூ1.00.000 ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறது. ஆனால் வங்கிகளில் கேட்டால் அச்சட்டம் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்கிறார்கள்.
பெரும் பண முதலைகளைப் பிடிப்பதற்காக மத்திய அரசு மீன்களை கொல்வது சரியான செயலான?. பணமின்றி ஏனைய நடுத்தர மக்கள் அவதிப்பட்டார்கள் ஆனால் பணக்கார மக்களோ சொகுசாகத்தான் இருந்தார்கள். மேலும் பல பிரமுகர்கள் .டி.எம்.களில்  நிரப்ப வேண்டிய பணங்களை தங்கள் வீடுகளிலேயே நிரப்பினார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கைத் திட்டம் வியாபாரிகளையும், நடுத்தர மக்களையும், ஏழைகளையும்தான் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது
உலக வங்கியின் கணிப்பு:
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நடப்பு நிதியாண்டில்  இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்திருக்கிறது.
அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு:
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பான AIMO நடத்திய ஆய்வில் சிறு தொழிற்சாலைகள் துறையில் மட்டும் 35 சதவீத வேலைவாய்ப்புகள் இழந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் 50 சதவீத வருவாய் சரிவை சந்தித்துள்ளது. SME பிரிவில் இதன் அளவு இன்னமும் மோசமாக இருப்பதும் AIMO செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பணமதிப்பழப்பு அறிவிக்கப்பட்ட 34 நாட்களில்:
1. சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில், குறிப்பாக இன்பாரஸ்டக்சர் துறைகளில், இருக்கும் நிறுவனங்கள் 35 சதவீத வேலைவாய்ப்பு இழப்பையும், 45 சதவீத வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளது.
2. ஏற்றுமதி துறையில் இருக்கும் நிறுவனங்களில் 30 சதவீத வேலைவாய்ப்பு இழப்பு, 40 சதவீத வருவாய் இழப்பு.
3. உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனங்களில் 20 சதவீத வருவாய் இழப்பு. இங்கு அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படவில்லை. காரணம் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் முன்பு பெற்ற ஆணைகளுக்காக இயங்கி வந்தது.
கணிப்புகள்:
மத்திய பட்ஜெட் 2017 அறிக்கையில் தாக்கலுக்குப் பின் வெளியாக உள்ள மார்ச் மாத காலாண்டு அறிக்கையில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் 40 சதவீத வருவாய் இழப்பைச் சந்தித்திருக்கும். இதுவே ஏற்றுமதி துறையில் 45 சதவீதமும், உற்பத்தித் துறையில் 15 சதவீதம் அளவிற்கு வருவாய் சரிவை சந்தித்திருக்கும்.
பணமதிப்பிழப்பின் பாதிப்புகள்:
1. பணப் புழக்கத்தில் முற்றுப்புள்ளி
2. .டி.எம், வங்கிகளில் பணத்தை எடுக்கத் தடை
3. ஊழியர்கள் தொடர் விடுப்பு அல்லது பணி நீக்கம்
4. ரூபாய் மதிப்பில் தொடர் வீழ்ச்சி
5. நிதி திரட்டுவதில் முட்டுக்கட்டை
6. புதிய கடன் திட்டத்தை ஏற்க முடியாத நிலையில் வங்கிகள்
7. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பாதிப்பு
8. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மத்தியில் பதற்றம்
9. வருவாய் அளிக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாத நிலை
10. ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் தொய்வு
3 இலட்சம் நிறுவனங்கள்:
இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலை பிரிவுகளில் சுமார் 3 இலட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு மிகமுக்கியப் பங்களித்து வருகிறது. இதில் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களும் அடங்கும். இப்பிரிவின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் வருவாய் அளவுகள் சராசரியாக 30 சதவீதம் வரை குறைந்தால் நாட்டின் வளர்ச்சியும் குறையும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. நாட்டின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வாயிலாக உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பாதித்துள்ளது என்று AIMO அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
பணமில்லா பரிவர்த்தனை:
இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துவிட்டது. பணமில்லா பரிவர்த்தனை செய்ய பல வழிகள் இருக்கின்றன. வங்கிகள் தரும் -வேல்ட்கள் மூலம் எளிதாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த -வேலட்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரியவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் முறையான பயிற்சியுமில்லை, போதுமான கல்வியறிவில்லை. எல்லாம் தெரிந்தவர்களாக இருக்கும் பண முதலைகளுக்கு எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை:
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, மின்னணு பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அடுத்து, அதிகமாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும், ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும். இது நுகர்பொருள் துறையில் உள்ள, பெரிய நிறுவனங்கள், மேலும் வலுவாக சந்தையில் காலூன்ற உதவும். அதே சமயம், இந்த வாய்ப்பை, பிராந்திய அளவில், ஒருசில மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்குள் செயல்படும் நுகர்பொருள் நிறுவனங்கள், எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போனகின்றன என்பதுதான் கேள்வி. அவற்றின் வர்த்தகத்தில், 80-90 சதவீதம் மொத்த விலையில் நடைபெறுவதால், சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். நவீன வணிகம், சுயமாக செய்ய முடியாததை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை செய்து விட்டது. இந்தியா வணிகம், ரொக்கப் பரிவர்த்தனையில் இருந்து, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு வேகமாக மாற, வழி செய்திருக்கிறது.
பாரதப் பிரதமர்:
இத்திட்டத்தால் ஏழைகளெல்லாம் நிம்மதியாகத் தூக்குகிறார்கள். பணக்காரர்களெல்லாம் தூக்க மாத்திரை சாப்பிடுகிறார்கள் என்றார் பிரதமர், ஆனால் அது உண்மையில்லை ஏழைகள் .டி.எம், வங்கி என வரிசையில் நின்று கால் கடுத்து பணத்தட்டுப்பாட்டால் உணவின்றி பசியால் வாடி நிம்மதி இழந்து தூங்கினார்கள். ஆனால் பணக்காரர்கலோ நன்கு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூக்க ஒரு தூக்கமாத்திரை மட்டும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.
பணமில்லா பரிவர்த்தனையால் ஏற்படும் தீமை:
ஏழைகள் பணத்தை சேமித்தார்கள், அதை .டி.எம்-களில் எடுத்து செலவழித்தார்கள். ஏதோ நிம்மதியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. அவ்வாழ்க்கையில் திடீரென்று வந்த ஒரு பூகம்பம் சீரழித்ததுபோல் இத்திட்டம், ஏனையோர்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.டி.எம்-கார்டுகளை வைத்தே பணம் திருடும் கும்பல் அதிகமாக வாழும் இச்சூழலில் -வேல்ட்கள் போன்ற ஆன்லைன் சேவைகளுக்காக படிப்பறிவில்லா மக்கள் படித்தவர்களை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் நேரிடும் அப்போது. அவர்களிகன் ரகசிய எண்கள் தெரிந்து வைத்துக்கொள்ளும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு  ஒரு புதிய வழிக்கூறாக இத்திட்டம் அமையலாம்.
கஷ்டப்பட்டு சம்பாரித்த தன் பணத்தை கையால்கூட தொடமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது இன்றைய சமூகம். இந்தியாவில் 100 சதவீதம் மக்களும் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தால் நம்  பாரதப் பிரதமர் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தவிதத் குறையுமில்லை. ஆனால் போதுமான படிப்பறிவற்ற விவசாயிகளைக் கொண்ட நாடான நம் இந்தியா இருக்கையில் புதுமையான திட்டங்களை கொண்டு வந்தால் நடுத்தர மக்கள் சிறமப்படாமல் என்ன செய்வார்கள்? அலைபேசிகளே இல்லாமல் வாழும் இவர்களால் எப்படி அலைபேசி வாயிலாக பணமில்லாப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்? ஒருவேளை அலைபேசி இருந்தாலும் படிப்பறிவில்லா பலரால் எப்படி பணமில்லாப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்?
எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இணைய வசதிகள் கிடைத்து விடுவதில்லை. எந்தவித சேவைகளுமே இல்லாத மலைக்கிராமங்களையெல்லாம் இன்றும் நாம் பல ஆய்வுகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோன்று ஆன்லைன் சேவைகளை இந்தியா தன்னாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கவில்லை, என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நடுத்தர மக்களே அதிகமான பாதிப்பை தொட்டிருக்கும்போது மலைக்கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களுக்கு இத்திட்டம் எவ்வளவுப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்?
முடிவுரை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், பணமில்லா பரிவர்த்தனையும் ஆரம்பத்தில் நடுத்தர மக்களின் மத்தியில் வரமா இருந்தது. ஏனென்றால் இந்நடவடிக்கையால் ஏகப்பட்ட கருப்புப்பண முதலைகள் அரசின் வலையில் சிக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் அன்று இரவே ஏகப்பட்ட கருப்புப் பணங்கள் வெள்ளைப்பணங்களாக நகைக்கடைகளில் மாறின. பலர் வங்கிகளில் மாற்றினர். பலர் பினாமிகளின் பெயர்களில் மாற்றினர். மொத்தத்தில் அவரவர்களின் பணத்தை அவரவர்கள் பத்திரப்படுத்தினார்கள்இத்திட்டத்தால் ஏதோதோ மாற்றங்கள் வருமென்று எதிர்பார்த்த நடுத்தர மக்கள்தான் கடைசியில் ஏமாற்றமடைந்தார்கள். கல்வியறிவும் போதுமான பொருளாதார வளர்ச்சியுமின்று வாழும் மக்களுக்கு இத்திட்டம் ஒரு சாபமாகவே அமைந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் .டி.எம்-களிலும், வங்கிகளிலும் பணத்திற்காகக் காத்திருந்த மக்களையும் உயிரிழந்த மக்களையும் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், முகநூலிலும், வாட்சப்பிலும் பார்க்கும்போது நடுத்தர மக்களுக்கு இத்திட்டம் ஒரு சாபமென்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அடிக்குறிப்புகள்:

1. பிரணாப் முகர்ஜி மக்களைக் காப்பாற்ற வேண்டும், . 1. 2017.

2. பணமதிப்பு நீக்கத்தால்பிராண்டுநிறுவனங்களுக்கு ஆதாயம், Trade Online> g 1. http://business.dinamalar.com/news_details.asp?News_id=37690&cat=1

3. சிவலிங்கம், ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் அறியாத உண்மைகள்..! goodreturns.in, 1-5, 2016.

4. வணிக செய்திகள், நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி கணிப்பு, Tamil News, 2, 2017.

5. வணிக செய்திகள், ஓசைபடாமல் உயர்கிறது தங்கம், Tamil News,   3, 2017.

6. பிரசன்னா VK, வேலைவாய்ப்புகளை இழந்ததுஇந்தியா’. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்மோடி’..! www.goodreturns.in, .1-8, 2017. http://tamil.goodreturns.in/news/2017/01/10/demonetisationimpact

7. மு.சா.கௌதமன், பணமில்லா பரிவர்த்தனைக்கு கைகொடுக்கும் -வேல்ட், விகடன், .1-2, 2017.



2 comments: