Thursday, 31 March 2016

கவனம்

சந்தைக்குச் செல்லும் வழியில் ஒரு முடக்குச் சந்து சற்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி அவ்வழியாய் ஒரு இளைஞன் ஏதோ ஒரு வேலை விசயமாகச் சென்றான். தன் முன்னிருந்த டீக்கடை வாசலில் தடர்பட்டு நின்றான். அங்கு அமர்ந்திருந்த ஒரு இளைஞனைப் பார்த்து இவர எங்கயோ பார்த்த ஞாபகமா இருக்கே! என்று யோசித்தான் அப்போதே தன் சிந்தையில் சட்டென்று வந்து நின்றது, பழைய ஞாபகம் ஆமா இவரு நம்ம ஊரு திருவிழால அம்மன்வேசம் போட்டு ஆடுன கனேசன்தான ஆமா அவரேதான் சரி கேப்பம்.
டீக்கடையின் ஓரமாய் படிக்கட்டுகளில் அழுக்குப்படிந்து சட்டையோடு பசியில் வாடியபடி அமர்ந்து எதையோ மிகுந்த ஆர்வமாக வரைந்து கொண்டிருந்தவனை சரவணனின் குரல் தட்டி எழுப்பியது. அண்ணா! அண்ணா! வணக்கம் நீங்க கனேசன்தான என்றதும் குனிந்திருந்த முகம் நிமிர்ந்தது ஆமா, நீங்க யாரு? நான் பக்கத்து ஊர்தான் நல்லா இருக்கிங்களா? உங்களப் பாத்து மூனு வருசத்துக்கு மேல ஆகிருச்சு. இம் நான் நல்லாதா இருக்கேன். ஆனா நான் உங்கள பாத்ததில்லயே! ஆமாணா உங்களுக்கு ஞாபகம் இருக்காது ஏன்னா? நீங்கதா பெரிய நடனக் கலைஞராச்சே!
என்னா சொல்றிங்க? எனக்குப் புரியல, நீங்க ஒரு மூனு வருசத்துக்கு முன்ன கண்டமனூர் திருவிழால அம்மன் வேசம் போட்டு ஆடுநிங்கலே ஞாபகமிருக்கா? ஆமா இருக்கு, கொஞ்சம் இருங்க நான் ஆத்தாட்ட கேட்டுச் செல்றேன் என்று கண்மூடியவன், அம்மா நான் இவங்க ஊருக்கு உன்வேசத்துல ஆடப்போனதா சொல்றாருமா நீ சொல்லுமா எனக்கு ஞாபகமில்ல என்று தன் கரம் பற்றியிருந்த அம்மன் படத்தைப் பார்த்து கேள்வி கேட்டான். சில நிமிடத்தில் அவனாகவே பதில் சொன்னான். ஆமா வந்தனாம் என் ஆத்தா சொன்னா நான் ஆடும்போது அங்க என் கையில இருந்த ஈட்டி களன்டு விழுந்துச்சா? அப்றம் அங்க ஒரு சின்னமேடையில ஏத்தி என்ன ஆட வச்சிங்களா? நான் மறந்தாலும் ஆத்தா சரியாச் சொல்ராள் என்று அந்தப் படத்திலிருந்த அம்மனின் கண்ணத்தைக் கிள்ளி முத்தமிட்டான்.
இவன் சொன்ன இரண்டுமே தவறு இவஎன்னாடா லூசு மாதிரி பேசுறான் என்று யோசித்த சரவணன் மறுப்பு தெரிவிக்காமல் ஆமா என்று முடித்து. சரி இவ்லோ கெரக்கமா இருக்கிங்க என்னாச்சு உங்களுக்கு? ஒன்னுமில்லங்க நான் ஒரு அனாத என்னப் பாத்துக்கிற யாருமே இல்ல அய்யோ அண்ணா அப்பிடிலாம் சொல்லாதிங்க உங்களுக்கு எங்க ஊர்ல எவ்லோ ரசிகர் இருக்காங்க தெரியுமா? நிஜமாவா சொல்றிங்க? நான் என்ன உங்ககிட்ட பொய்யா சொல்லப்போறேன். அப்பனா என்ன உங்க ஊருக்கு கூட்டிட்டுப் போங்க உங்க வீட்டுல விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, பாப்பம் என்றதும் இம் சரிணா எங்க ஊர் திருவிழாக்கு வாங்க உங்கள கூட்டிட்டுப்போறே அவ்ளோதான. எதும் சாப்டுரிங்களாணா? இல்லப்பா நான் அப்பிடிலாம் யார்ட்டயும் கை நீட்டி வாங்கி சாப்பிட மாட்டேன். வேனுன்னா ஒரு டீ மட்டும் வாங்கித்தா சாப்டுறேன்.
                        டீ என்னா பிரட்டே சாப்புடுங்கணா என்று இரண்டு பிரட்டை எடுத்துக் கொடுத்ததும் அய்யோ எனக்கு இதலாம் வேனாம்ப்பா நான் யார்ட்டயும் இப்பிடிலாம் வாங்கி சாப்டதில்ல நானா ஒலச்சுச் சாப்புடனுன்னு இருக்கேன் என்ன கட்டாயப்படுத்தாதிங்க நான் சாப்புட்டு இன்னிக்கோட ஏழு நாளாச்சு என் நாக்கப் பாத்திங்களா? இந்த நாக்குள என் ஆத்தா குடியிருக்கா இந்த நாக்குலதான் நான் நெறய பேருக்கு அருள் வாக்கு சொல்லிட்டு இருக்கேன். நான் அப்பிடி எதாதும் வேரவங்ககிட்ட வாங்கிச் சாப்பிட்டா அப்றம் என் ஆத்தா என்ட்ட பேசமாட்டா வேனுன்னா ஒரு சிகரட் வாங்குங்க என் பசிக்கு அது போதும். சிகரட்டையும் டீயையும் குடித்து பசியாத்தினான்.
அண்ணா வேர ஏதாதும் சாப்புடுறிங்களா? இல்லங்க இதே போதும் என்மேல இவ்ளோ அக்கரை காட்டுனதுக்கு ரெம்ப நன்றி. அண்ணா பெரிய வார்த்தலாம் சொல்லாதிங்க. சரி உங்க பேர் என்ன? என்பேர் சரவணன். ஆஹா சரவணன் நல்லபெயர் என் அப்பன் முருகனின் பெயர் என் ஆத்தாலே எனக்கு உங்கள உதவச் சொல்லி நேர்ல அனுப்பிருப்பான்னு நெனக்கிறேன். உங்ககிட்ட பணம் இருந்தா எனக்கு ஒருகிலோ தக்காளிப்பழம் மட்டும் வாங்கிக் தாங்க வீட்டுல போய், நல்ல சாப்பாடு சமச்சு சாப்பிட்டுக்கிறேன் நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆகிருச்சு.
இம் வாங்கித் தாரேன்ணா அப்படியாவதும் சாப்புட்டு உங்க பசிய ஆத்துங்க. உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு சரவணா. அப்பிடிலாம் சொல்லாதிங்கணா! உங்கள மாதிரியான கலைஞர்கள எனக்கு ரெம்ப பிடிக்கும் அப்பிடியா? பரவாலயே உங்ககிட்ட பணமிருந்த எனக்கு இன்னொரு உதவி பண்ண முடியுமா? இம் சொல்லுங்க முடுஞ்சா பன்றேன். எனக்கு எங்கதெருவுல ஒரு அக்கா பட்டுச்சேல குடுத்தாங்க அந்த சேலய சந்திரமுகி மாதிரி ஒரு டெய்லர்ட்ட தைக்கச் சொல்லிருக்கே அத வாங்கனும் ஒரு ஐநூறுரூபா வேனும் இந்த உதவி மட்டும் பண்ணுங்க போதும் அப்ரம் நான் மறுநாளே! சென்னைக்குப்போயி எதாதும் ஒரு கலைக்குழுவுல சேந்து ஆடி பணம் சம்பாரிச்சு நல்ல பெரியாழா வந்துருவேன்.
இப்போதைக்கு என்னால முடியாதேணா! நான் படுச்சுட்டு இருக்கே வேலை வாங்கிட்டா கண்டிப்பா உங்கள மாதிரியான கலைஞர்களுக்கு உதவி செய்வேன். ஆமா கையில இருக்க அட்டையில என்னா அம்மன் படமா வருஞ்சு சேத்து வச்சிருக்கிங்க எதுக்கு? ஆமாங்க சரவணா என் பசிய மறக்க இதுதான் சரியான வழி அம்மன் படமா வருஞ்சுட்டே இருந்தா எனக்குப் பசியே தெரியாது. இந்தப் படத்த வருஞ்சு என்னாணா பன்னுவிங்க? நான் எந்த அம்மன மனசுல நெனச்சாலும் உடனே வருஞ்சுருவேன். இந்தப்படங்கள யாராதும் விரும்பிக் கேட்டா மட்டும் தருவேன்.
அதும் என் வீட்டுக்கு வந்து கேட்டா மட்டுந்தான் தருவேன். அதும் ஏ ஆத்தா சொல்லனும் இல்லனா தரமாட்டேன். அப்பிடி சில பேருக்கு தந்திருக்கேன் அவங்க காணிக்கையா தர பணத்த வாங்கி செலவுக்கு வச்சுக்கிருவேன். என்கிட்ட படங்கள் வாங்கிட்டுப்போயி வீட்டுல வச்சு வழிபடுரதால நல்லது நடக்குறதா சிலர் சொல்றாங்க. உங்களுக்கு ஆத்தா நல்லது பன்னிருகளா?
இம் பன்னிருக்காளே! நிறையப் பன்னிருக்கா ஒரு நாள் என்னாள கரன்ட்பில் கட்ட முடியல வயர்மேன் வந்து பீஸ் கட்டய பிடுங்கிட்டுப் போயிட்டாரு என்கிட்ட பணமில்ல அன்னிக்கு இராத்திரி ஆத்தாட்ட வேண்டி அழுது பூஜையறையிலலேயே படுத்திருந்தேன். கொஞ்ச நேரத்துல தட்டி எழுப்புனா உனக்கு காலையில பணம் வரும் அழுகாதடான்னு சொல்லிட்டு மறஞ்சுட்டா அதே மாதிரி விடியமின்ன ஒருத்தர் கதவ தட்டுனாரு எழுந்து தெறந்தேன். முன்னூறு ரூபாய குடுத்தாரு எதுக்குன்னு கேட்டேன் ஒரு நாள் உங்ககிட்ட சாமி படம் வாங்கிட்டுப்போனே தம்பி இப்ப ஏங்குடும்பம் நிம்மதியா இருக்குன்னு சொன்னாரு இப்பிடித்தா ஆத்த எனக்கு கஷ்ட்டம்னா வந்து உதவுவா.
இம் அப்பிடியா பரவாலயே! வேனுனா உங்களுக்கு எதும் கஷ்டம்னா சொல்லுங்க என் வீட்டுக்கு கூப்பிட்டுப்போயி சாமி பாத்து சொல்றேன். ஆனா ஒன்னு என் வீட்டுக்கு வரனுன்னா நல்லா சுத்தமா இருக்கனும். அண்ணா நீங்க வேர நாசுத்தமாதான் இருக்கேன். நீங்க கரக்டா சொல்லுவிங்களா? இது ஆத்தா குடியிருக்க நாக்கு பொய்வாக்கு சொன்ன நான் விளங்க மாட்டேன். வீட்டுல குறி சொல்லும் போது பேசுறது நாயில்ல என்மேல இருக்குர ஆத்தாதான் எரங்கிவந்து பேசுவா. அப்பிடியா? பரவாலயே! நிஜமாத்தா சொல்றிங்களா? நம்பாட்டி என் வீட்டுல வந்து பாருங்க ஆத்தா உக்காந்திருக்க திசையப்பாத்த நீங்களே அசந்து போவிங்க.
எனக்கும் கொஞ்சநாளா மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு அதுக்கு வழியிருந்தா சொல்லுங்க! உங்களுக்கு என்னா கஷ்ட்டம் சரவணா கருப்பாயிருந்தாலும் கலையா சிவகார்த்திகேயன் மாதிரி அழகாதான இருக்கிங்க உங்களச்சுத்தி நிறைய பொன்னுங்க வருவாங்க நிஜமாவே சொல்றேன் சரவணா நானே இப்ப ஒரு பொன்னா இருந்தா உங்கள இந்த நிமிசத்துலயே கல்யாணம் பன்னி சந்தோசப்படுத்தியிருப்பேன்.
அண்ணா! நீங்கவேர காமெடி பண்ணாதிங்க எனக்கு ஒரு பொன்னாலதா கவல எங்க ரெண்டுபேத்துக்கும் சண்ட வந்துட்டே இருக்கு நிம்மதியே இல்ல அதான் கேக்குரேன். அப்பிடியா? காதலுக்கெலாம் ஆத்தா குறிசொல்ல மாட்டாளே. சரிணா என் எதிர்காலம் எப்பிடியிருக்கும்ன்னு சொல்லுவாளா? இம் ஏன் சொல்ல மாட்டா? கண்டிப்பா சொல்லுவா ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு என் வீட்டுல ஆத்தா மின்னாடி உக்காந்துதான் குறி சொல்லுவேன். அதும் ஆத்தா வீட்டுக்கு கூப்பிட்டு வரச் சொன்னா மட்டுந்தான் யாரையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போவேன். இம் உங்க ஆத்தாட்ட கேளுங்க என்றதும். கண்ணை ஒரு நிமிடம் மூடித்திறந்தான்.
எழுச்சம் பழமும் வெத்தலைபாக்கும் வாங்கிட்டு கௌம்புங்க போகலாம் என்கிட்ட ஆட்டோக்கு பணமில்ல சரவணா நீங்கதான் டிக்கட் போடனும். ம்… வாங்கணா! நா வச்சிருக்கேன் சரி நடங்க போகலாம் சற்று தொலைவு கடந்ததும் ஆட்டோ வந்துவிட்டது. இந்த ஆட்டோல ஏறுங்க போகலாம். அண்ணா அம்மன் கோவில்ட்ட நிப்பாட்டுங்க ம்சரிப்பாநிறுத்தம் வந்துருச்சு எறங்கலாம்பா பாத்து எறங்குங்க, இந்தாங்கணா இருபதுரூபா சரியா இருக்கா? இருக்கு சார்.
ஆட்டோவிலிருந்து இரங்கியதும் ஒரு நிமிசம் சரவணா நான் சொல்றத கேளுங்க சொல்லுங்கணா! எங்க வீட்டுக்குப் போகும் போது யாரும் உங்கள எதும் கேப்பாங்க நீங்க எதும் பேசாதிங்க நான் பேசிக்கிறேன். ஏன்ணா? அத நான் அப்புறமா சொல்றே சரியா? சரிணா.
வீட்டுக்குச்செல்லும் வழியில் நரைத்த தலையோடு ஒரு பாட்டி இது யாருப்பா கனேசா என்றாள். மாஸ்டர் பாட்டி என்ன டான்சுக்கு கூப்பிட வந்துருக்காரு அப்பிடியா சரிப்பா போங்க போங்க. இதுதான் எங்க வீடு உள்ள வாங்க என்றதும். என்னாணா? வீட்டுல அம்மன் சன்னிதி இருக்கு அது இதுன்னு பயங்கரமா சொன்னிங்க எதையுமே கானம் இங்க யாருமே இல்லயா? பாலடஞ்ச வீடு மாதிரி இருக்கு ஏன் இப்பிடி சிகரட் தீக்குச்சியா நெறஞ்சு கெடக்கு? அதலாம் பேச நேரமில்ல சரவணா இங்க வா இப்பிடி உக்காரு. பரவாலனா வாசப்படிட்டயே உக்கார்றேன் சேர் எதாதும் இருக்கா? சொன்னா புருஞ்சுக்க சரவணா உள்ளவா இந்த கட்டிலில் உக்காரு நான் ஆத்தாட்ட கேட்டுச் சொல்றேன். அப்ரம் போய் எழுமிச்சம் பழமும் வெத்தலையும் வாங்கிட்டு வா சரியா? என்று பேசிக்கொண்டே வாசலின் அருகே சென்றவன் வெளியில் கிடந்த செருப்புகளை உள்ளே எடுத்து வைத்தான் அண்ணா விடுங்க வெளியவே கிடக்கட்டும் என்றதும்.
அட இங்க நாய்த்தொல்ல அதிகம்பா அப்ரம் செருப்பு காணாமப் போயிரும் என்று சொன்னபடி கதவைச் சாத்தி உள்புறமாக தாழ்ப்பா போட்டான் ஏன் கதவ பூட்டுரிங்க திறந்து வைங்க காத்து வரட்டும் என்றதும். இந்த பகுதியில இருக்கவங்க ரெம்ப மோசமானவங்க இங்க பூஜை நடக்குறத பாத்துருவாங்க நீ அமைதியா இரு என்றான். ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று உணர்ந்த சரவணன் தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமே என்று வருந்தியபடி சிரித்துக் கொண்டே யோசித்தான். இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது பலநாள் பசியில் இருக்கும் இவனை ஓங்கி அடித்தால் இறந்து விடுவானோ! இவனை மீறி எழுந்தால் பக்கத்திலிருக்கும் ஈட்டியை எடுத்து நமைத் தாக்கி விடுவானோ என்று யோசிக்கும் போதே கனேசன் தன் நிலையிலிருந்து மாறுபட்டு காமஇச்சைக்குள் செல்ல ஆரமித்தான்.
சரவணனைப் பார்த்து யாரும் இல்லாத இந்த அந்தப்புறத்தில் அழகான பெண் நானிருக்கையில் அழகியவனே உனக்கென்ன வேலை எழுந்துவா கட்டியனைத்து உருண்டு புரண்டு விளையாடி இன்பம் காணலாமென்று பேசியபடி தன் சட்டைப் பட்டன்களைக் களட்டிவிட்டு கட்டிலிலிருந்தவனை கட்டியணைக்க நெருங்கினான். இதைச் சுதாரித்த சரவணன் அண்ணா எனக்கு தண்ணீர் வேண்டுமென்றான் ஒரு நிமிசம் இரு என்று பக்கத்திலிருந்த சொம்பினை எடுக்க முற்பட ஒரு நிமிட இடைவெளியில்  விரைந்து எழுந்து பூட்டியிருந்த கதவின் தாழ்பாளை திறந்து வெளியேறினான். உள்ளே இருந்த செருப்பை வெளியிளெடுத்தான்.
என்னாச்சு சரவணா எங்க போர என்று பின்தொடர அந்த வேளையிலும் வெளியில் நின்று யோசித்த சரவணன் இப்படியே ஓடினால் யாரும் நமைத்தவறாக எடுத்து விடுவார்கள் இல்லையென்றால் இவனேகூட எதாதும் களவுசாட்டி கூச்சலிட்டால் சிக்கலென்று புரிந்து கொண்டவன். பக்கத்துக் கடையில வெத்தலயும் எழுமிச்சம்பழமும் வாங்கிட்டு வரேன் பொறுங்கணா என்று சொல்லிக் கிளம்பினான். சரவணா அதலாம் தேவையில்ல வா… இங்க வா… நான் சொல்றதக்கேளு ப்ளீஸ். என்று சத்தமிட இதோ வரேன் என்று எட்டு வைத்து நகர்ந்தவன். ஒரு ஆட்டோவிலேறி கிளம்பினான்.  


No comments:

Post a Comment