Thursday, 31 March 2016

வளர்ப்பு செய்த மாற்றம்

என்னாடி பொண்ணி எத்தன மாசமா இருக்கவ இதுதா ஒம்பதாவது மாசம் பட்டக்கா. அப்றம் உங்க பிள்ளைங்கெல்லாம் நல்லா இருக்காங்களாக்கா? இம் அவகளுகக்கென்னா கொற நல்லா இருக்காங்கடி என்னா நாலும் பொட்டப்புள்ளயா பொறந்துருச்சுக அந்த ஒரு கொறதா எங்களுக்கு மத்தபடி ஆண்டவ புன்னியத்துல வேற எந்தக் கொறயும் இல்ல பொண்ணிஆமா நாவாட்டுக்க ஏம்பொளப்பு பத்தியே பேசிட்டுப் போயிட்டு இருக்கே ஒனக்கு எத்தன பிள்ளைக டிஎனகக்கு மூனு ஆம்பளப் பயங்கக்கா நாளாவதாவது பொட்டப்புள்ளயா இருக்கும்னு நெனக்கிறே எங்க வீட்டுக்காரருக்கும் அவுக அப்பா அம்மாவுக்கும் பொட்டப்புள்ளமேல ரெம்பப் பிரியமா எங்க அத்தகூட சொன்னாக எங்களுக்குத்தான் பொட்டப்புள்ள பாக்கியமே இல்லாமலே போயிருச்சு நீயாவது எனக்கொரு அழகான பேத்திய பெத்துக்குடுமான்னு கேக்குறாக
நம்ம கைலயா இருக்கு ஆண்டவ பாத்து கொடுக்குற பிள்ளையத்தான நம்ம பெத்துக்க முடியும் மொதலயே ரெண்டு பசங்க போதுன்னு சொன்னேக்கா பாவிப்பய அந்த மனுசே எனக்கு பொட்டப்புள்ள வேனும்னாலே வேனும்ன்னு அடம்பிடுச்சு இப்ப நாளாவது பிள்ள வரைக்கும் இழுத்தடுச்சுட்டாரு இது என்னா கொளந்தையா இருக்கப்போகுதுன்னு தெரியலக்காநான் இப்பிடித்தான்டி ஆம்பளப்புள்ள வேனும் வேனும்ன்னு எதிர்பாத்து எதிர்பாத்து நாலயும் பொட்டப்புள்ளயா பெத்து தொளச்சுட்டே பாத்துக்கே ஒரே வாக்குல பிள்ளைகளயாவும் பெத்துக்கிட்டே போனா நம்ம உடம்பு என்னத்துகு ஆகுறது.
என்னையப் பாத்தயா எப்பிடி ஓடாத்தேஞ்சு போயி கருவாடா இருக்கேன்னு ஆம்பளகளுக்கென்னா வலிக்கவா போகுது ஒத்தப்புள்ளயப் பெத்தெடுக்குரதுக்குள்ள நம்ம படுரபாடு நமக்குத்தானெ தெரியும். அட ஆமாக்கா மொத பிரசவத்துலயெல்லாம் எனக்கு உசுரு போயி உசுரு வந்குச்சு. இந்த தடவ பாரு பொட்டப்பிள்ளயா இருந்தாலுஞ்சரி ஆம்பளப்பிள்ளயா இருந்தாலுஞ்சரி பெத்துட்டு ஒரே வேலையா குடும்மக்கட்டுப்பாடு செஞ்சுருடி அதா உடம்புக்கு நல்லது நீ என்ன பொம்பள மாதிரியாவா இருக்கவ உன் நாத்துநாலப்பாத்தயா எப்பிடி ரெண்டு பிள்ளைய பெத்துப்போட்டுட்டு நல்ல கொலுகொலுன்னு வெள்ளப்பண்ணி மாதிரி கொலுத்துப்போயிருக்கா நா சொல்ரம்புட்டு சொல்லிட்டே அதுக்குமேல உன் இஷ்டம் பொண்ணி
ஆமாக்க அப்படித்தா பன்னனும் இந்த தடவ பொட்டப்புள்ளதா பொறக்குமுன்னு நம்புரே நம்மூரு பூசாரிவேற சொல்லிருக்காரு அப்றம் எங்க அத்தையும் மாமாவும் இந்த தடவ பொட்டப்புள்ள பொறந்தா மாரியாத்தா கோவிலுக்கு கெடா வெட்டி சோறுபோடுறதாக வேண்டியிருக்காங்க அடேங்கப்பாஇதுவேயா பரவாலயே பொட்டப்பிள்ள மேல உங்கவீட்டுக்காரகளுக்கு அவ்வளவு பாசமா நம்ம என்னா நெச்சாலும் நடக்குறதுதா நடக்கும் பொண்ணி நான் கெளம்புறேன் கிரகனூர் பஸ் வந்துருச்சு டவுனு வரைக்கும் போயிட்டு வரேன் என்னா அடியாத்தே பஸ்சுக்கு வர அவசரத்துல சிலாப்புல இருந்த காச எடுக்காம மறந்துட்டு வந்துட்டனே
பொண்ணி ஒரு அம்பது ரூவா இருந்தா குடு நான் போய்ட்டு வந்து திருப்பித்தரேன். பொறுக்கா எடுத்துவரேன் இந்தாக்கா இது என் சருவாட்டுக்காசு இத திருப்பித்தரும்போது ஏம் புருசேங்கண்ணுல பட்டுராம குடுக்கா சரிபுள்ள எனக்குத்தெரியாதா என்னா அம்பது ரூவா சிருவாடு சேக்க நம்ம படுரபாடு, சரி பொண்ணி போய்ட்டு வரேன் சரி பட்டக்கா பாத்து போயிட்டு வா
                        ஏடிபங்கசம் பட்டக்கா இருக்காகளா டி? இருக்காங்கக்கா என்னாவா இன்னிக்கு இம்புட்டு தூரம் வந்துருக்க அட ஆமாடி சும்மா தா வந்தே வீட்டுலயே ஒத்தையா இருக்க ஒருமாதிரியா இருந்துச்சு அதா வந்தேன். மாமா எங்க போய்ட்டாக அவுக தினாமு வேளைக்கு போயிருவாகடி கோ அதானாலத்தா உனக்கு பொழுது போக மாட்டிங்குதா.? ஆமாடி நீயும் நாளைக்கு கல்யாணம் பண்ணிப்பாரு எப்பிடி பொழுது போகுதுன்னு தெரியும் நா என்னா வேனாமின்னா சொல்ரேக்கா வாரவெங்கெ பூராம் பத்துப்பவுனு குடுங்க இருவது பவுனு குடுங்கன்னு கெராக்கி பன்னிட்டுப் போயிர்ராங்கநம்மென்னா செய்றது அடியாத்தே உனக்கு ஓம்பகுமானம்.
அந்த அக்காவீடு எது டிஇந்த மஞ்சவீடா ஆமாக்கா அந்த வீடுதான் கதவத்தட்டு வெளிய வருவாக அடியேகிறுக்கு பங்கசம் நீ வாட்டுக்க வேறவுக வீட்டெக்கேன காமிச்சு விட்டுராதடிஅந்த வீதாக்கா நம்பி கதவத்தட்டுக்கா வருவாக. எக்கா பட்டக்கா எக்கா டொக்டொக்டொக்எவடி யவ கதவப்போட்டு இந்தத்தட்டு தட்டுறவ பொறுடி வரேன் கதவக்கேன ஒடச்சுப்போடாத அடிப்பாதகத்தி எப்படி வந்த பொண்ணி நல்லா இருக்கயா வீட்டுக்குள்ள வரவேண்டியதானே வாசப்படியிலேயே நின்னுட்டவ?. உள்ள இந்தா கண்ணி குடி...  இந்த நாற்காலிள ஒக்காரு நாம்போயி கடையில காப்பித்தண்ணி எதும் வாங்கிட்டு வரேன்.
ஏக்கா அதெல்லாம் ஒன்னும் வேனாக்கா சும்மா இரு பொண்ணி என்னிக்குமே வராதவ வந்துருக்க நான் போனதும் வந்துருரேன். எங்ககா பிள்ளைகளக் காணம் பக்கத்தூரு கனவாப்பட்டி அவக பெரியப்பா ஊரு அங்க ஏதோ காளியாத்த கோவில் திருவிழாவாம். அங்க போயிருக்காலுக நீ போகலயாக்கா இந்த ஆடு மாடுகள வச்சுக்கிட்டு எங்க போறாப்புல இருக்கு. சரி மாமா எங்கக்கா போய்ட்டாரு, நீவேற வீட்டுல தனியா இருக்கச் சொல்லுற, மாமா காட்டுக்குப் போயிருக்காருடிஇப்ப வந்துருவாரு நீ அப்பிடிலாம் ஒன்னும் பயப்புடாத பொண்ணி உங்க மாமா உத்தம புத்திர என்னயக்கட்டுன இந்த நாள்வரைக்கும் வேர எந்தப் பொம்பளயவும் ஏரெடுத்துக்கூட பாத்தது கெடயாது. சரி நேரமாகுது சீக்கிரமா போய்ட்டுவா சரி பொண்ணி இரு ஒரு பத்து நிமிசத்துல வந்துருறேன்.   
                        டீக்கடகார அண்னே! இந்த தூக்குல ஒரு அஞ்சு ரூபாய்க்கு டீ ஊத்து என்னாமா ஆச்சரியமா இருக்கு நீ டீ வாங்க வந்துருக்க ஆமானே! வீட்டுக்கு விருந்தாலு வந்துருக்கு, அதே! யாருமா ரெம்ப முக்கியமான ஆழா ஆமானே! அந்த மேலத்தெவுல குடியிக்காலே எங்க சித்தப்பா மக பொண்ணி அவ வந்துருக்கா பாவம் என்னிக்குமே வராதவ இல்லயா?... அதான். இந்தானே இதுல பாத்துருவா இருக்கு எடுத்துக்கோ மீத அஞ்சு ரூபாக்கு பூந்தி குடுத்திரு இம்இந்தாமா இப்பதா சுடச்சுடபோட்டது நல்லாயிருக்கும். பொண்ணி பொண்ணி இந்தா வாங்கிட்டு வந்துட்டே இந்த பூந்திய சாப்புடு ஏக்கா நீ குடுத்த தண்ணியே வயிறு நெறஞ்சுருச்சுக்கா இதெல்லாம் வேனாக்கா அட ஏன்டி வேனான்றவ சாப்புடு சும்மா, இல்லக்கா வீட்டுக்கு தூரமாகிருக்கே அதாக்கா இனிப்பு வேனான்ரே அடக்கிருக்கி அத அப்பயே சொல்லிருக்க வேண்டியதான சொல்ல கூச்சமா இருந்துச்சுக்கா அதான் சொல்லாம மறச்சே நீயும் விடுறதா இல்ல என்னா செய்ய சொல்லவேண்டியதாகிப் போச்சு. நானும் பொம்பல தானடி ஏங்கிட்ட சொல்றதுல என்னா கூச்சவேண்டி இருக்கு சரி விடு போனா போகட்டும் அப்றமா உங்க மாமா வந்து குடுச்சுக்கட்டும்
                        ஆமா கேக்க மறந்துட்டே பிரசவமாகிட்டபோல மன்னிச்சுக்கோ பொண்ணி உன்ன பாக்ககூட வரமுடியல இந்த ஆடு மாடுகளோட நான் படுரபாடு தெனாமும் போதும் போதும்ன்னு ஆகிப்போகுது என்னாசெய்ய, சரிக்கா அதனால என்னா நான் பிரசவமாகி மூனுமாசத்துக்கு மேலயே ஆகிருச்சுக்காஆமா என்னா புள்ள பெத்தவஅந்தக்கொடுமைய ஏக்கா கேக்குர நாலாவதும் பையனாப் பெறந்துட்டா என்னா செய்வ. நான் என்னமோ வேனுமின்னே ஆம்பலப்பயல பெத்து எடுத்தமாதிரி அந்த மனுசெ எப்பப் பாத்தாலு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டே இருக்கு வீட்டுல எப்பப் பாத்தாலு சண்ட சத்தமாவே இருந்துச்சுக்கா இந்த பத்துநாளாத்தாக்கா கொஞ்சம் நிம்மதியா இருக்கம். எங்க அத்த ஒரு கிளிஜோசியக்காரர்ட்ட நாளவதா பிறந்தவனுக்கு ஜோசியம் பாத்துச்சாம் இவ பெறந்த ராசிக்கு உங்க வீட்டுல இலட்சுமியே குடிவந்துட்டா  பொட்டப்புள்ள பெறந்திருந்தா கடன்பட்டு இந்த ஊரவிட்டு குடும்பத்தோட வேற ஊருக்குப் போயிருப்பிங்கன்னு சொல்லிட்டாராம். அப்றந்தா எங்க அத்தையும் மாமாவும் எங்கிட்ட சந்சோசமா பேசிக்கிருவாங்க வீட்டுக்காரரும் சண்ட சத்தம் எதுவும் போடுறதில்லக்கா.
                        இப்ப என்னா நாலாம் ஆம்பலப்பய இல்லாம பொட்டப்புள்ளய ஆம்பளப்பய மாதிரி வளக்குறேன் நீயும் பொட்டப்புள்ளயில்லாத குறைக்கு ஆம்பளப்பயல பொட்டப்புள்ள மாதிரி செல்லமா வள அதுல யாவதும் உங்க அத்த மாமா உம்புருசே எல்லாரும் சந்தோசமா இருக்கட்டும் அவ்ளோதான. ஆமாக்கா அவுக ஏக்கத்த அப்பிடித்தான் போக்கனும் இனி என்னா செய்ய. குடும்பக்கட்டுப்பாடு பன்னிட்டயா இல்லயா? நா பிள்ளையப்பெத்த உடனே டாக்டர் அம்மாகிட்ட சொல்லிட்டேக்கா அதே மாதிரி அந்தம்மா ஒருநாள் வரச்செல்லி குடும்பக்கட்டுப்பாடு பன்னிவிட்டுட்டாங்க அதனாலதான் எங்க வீட்டுல சண்ட வரக்காரணமே ஒருவழியா எல்லாப்பிரச்சனையும் முடுஞ்சுச்சுக்கா இப்பத்தா கொஞ்சம் நிம்மதியாகிருக்கேன். சரிக்கா நான் கெளம்புரே வீட்டுக்காரரு வர்ர நேறமாகிருச்சு அந்தாலு வரும் போது நான் வீட்டுல இல்லனா காத்து கத்துன்னு கத்தித் தொழச்சுரும். சரி பொண்ணி போயிட்டுவா இந்தா நான் உங்கிட்ட வாங்குன அம்பது அப்றம் உனக்கு பிரசவச்செலவுக்கு தர வேண்டியது ஒரு நூறு ரூபா மொத்தம் நூத்தி அம்பது ரூபா இருக்கு வச்சுக்கோ பொண்ணி வேனாக்கா நான் நெறய பணம் வச்சுருக்கேன் பரவால்ல பொண்ணி வச்சுக்கோஉங்க வீட்டுல எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு, சரிக்கா கண்டிப்பா சொல்றெ.
                        இப்பா… சரியான வெயிலு என்னா இந்த அடியடிக்குது பங்குனிமாச வெயிலு நல்லா பள்ளக் காட்டிக்கிட்டுதா அடிக்குது. காலு என்னா இந்த சுடு சுடுது சும்மா கெடந்த வீதியப் பூராம் சிமென்ட் ரோட்டப் போட்டுவிட்டு இப்ப கண்டு வைக்கக் கூட இடமில்லாம போச்சு தெருவுல நடக்க முடியலயே செருப்பு போடாம வந்தது தப்பாபோச்சேஒரு வழியா வீடு வந்துருச்சு ஏம்மா பையெ இந்தத்துடி துடிக்கிறான் இவ்ளோ நேர எங்கபோயிருந்த? பட்டக்கா வீட்டுவரைக்கும் போயிருந்தே, அய்யையோ ரெம்ப அழுதுட்டானாத்தே இல்ல இல்ல நான் வந்து தூக்கிட்டே நல்லவேளைக்கு நான் வல்லயின்னா கத்திக் கத்கி தொண்டத்தண்ணியெல்லாம் வத்திபோயிருக்கும். வெளிய போரபுள்ள ஒருவார்த்த சொல்லிட்டுப் போக வேண்டியதானெ நல்லா தூங்க வச்சுட்டு சீக்கிரமா வந்துரலான்னு போனேத்தே வர நேரமாகிருச்சு. அதுக்குள்ள எந்துருச்சுட்டயா அவனக் கொண்டாங்க பால்குடுக்கலாம்
                        அழுகய நிறுத்திட்டானா பாத்தயா அவுக ஆத்தான்னு அவனுக்குக்கூட தெரியுது. இன்னவரைக்கும் அழுதுகிட்டே இருந்தயா இப்ப நீ வந்து தூக்கவும் அழுகைய நிறுத்தீட்டயா பாத்தயா? இல்லத்தே பசிச்சிருக்கும்போல இங்க பாருங்க பாலெ என்னா வேகமா சப்பிக் குடிக்கிறான்னு. ஆமா பிறந்து மூனு மாசம் ஆகிப்போச்சு பிள்ளைக்கு இன்னும் பேரு வைக்காம இருக்கிங்க ஒரு பேரு வைக்கவேண்யதுதானெஆமாத்தே பேர் வைக்கனும் நான் என்னா வேனான்னா சொன்னே உங்க புள்ளகிட்ட சொல்லுங்க ஒரு நல்ல பேரு வைக்கட்டும்.
                        நீ என்னா பேரு வைக்கலான்னு இருக்க பொண்ணி நான் என்னாத்தே பேரு வைக்கப்போறே நீங்களும் உங்க மகனும் சேந்து ஒரு பேர் வைங்க நானும் அந்தப் பேரயே வச்சுக்கூப்புடுறேஅப்ப பொறு தனசேகர வரட்டும் இன்னிக்கே ஒரு நல்ல பேர வச்சுருவம்.
                        பொண்ணிபொண்ணிசொம்புள புழுச்சதண்ணி கொண்டு வாஇந்தா உங்க மகனே வந்துட்டாருத்தே! இம்வாப்பா தனசேகரா உன்னப்பத்தித்தா பேசிட்டு இருந்தோ உடனே வந்துட்டயேப்பா உனக்கு ஆய்ஸ்சு நூறுப்பா என்னா இன்னிக்கு சீக்கரமா வந்துட்டெ கான்ராட்டு வேலைக்கா போயிருந்தே, இல்லமாய் மொதலாளி வீட்டுல மகளுக்கு சடங்கு வச்சுருக்காரா அதான் சீக்கிரமா வேலவிட்டுட்டாரு.
என்னா டிதண்ணிய எடுத்துவர இவ்லோ நேரமா? இந்தா வந்துட்டேங்க, பித்தாளச் சொம்ம குமாரு எடுத்து விளையாண்டுட்டு இருந்தா, மறந்து கொள்ளப் பக்கமா போட்டுட்டு வந்துட்டா அதத் தேடி எடுக்க நேரமாகிருச்சுங்க இந்தாங்க குடிங்கஉப்பு சரியா இருக்கா? போதுமா இன்னும் கொண்டுவரவாங்க போதும் போதும் துணிய மாத்துங்க தண்ணி இருக்கப்பயே தொவச்சுப் போட்டுர்றெ இருக்கட்டு மாட்டுக்கு தண்ணிக்கு விட்டுட்டு அப்பறமா மாத்திக்கிறே.
                        ஏன்டா தனசேகரா பையெ பெறந்து மூனுமாசத்துக்கு மேல ஆகப்போகுது ஒரு நல்ல பேரா வச்சுர வேண்டியதானெ. அட ஆமாமா நாவேர மறந்தே போனே! சரி பாட்டின்ற முறையிலே நீயே ஒரு நல்ல பேர வச்சுரு. நல்லா பொட்டப்புள்ள மாதிரி மூக்கும் முழியுமா அழகா இருக்கா. கடைசியா கடக்குட்டியா வேற பெறந்துருக்கா செல்லமா குட்டின்னு வச்சுரலாமா? நீ என்னாப்பா சொல்ற உங்க அம்மா வச்சா சரித்தா என்னாமா பொண்ணி உங்க அத்த வச்ச பேரு நல்லாஇருக்கா இம் நல்லா இருக்கு மாமா அத்த வச்ச பேரு மெதமாவா வப்பாங்க நல்ல பேருதா இதே இருக்கட்டுந்த்தே. ஏம்மா நீயே அவங்காதுல மூனுதடவ சொல்லுமா!
இம்சொல்லிடுறே அழகு பேராண்டி ஆசப்பேராண்டி பாட்டியப்பாருங்க குட்டி, குட்டி, குட்டி போதுமா இதுதான் இனிமேல் உம்பேரு சிரிப்பப்பாரு நல்லா பொட்டப்புள்ள மாதிரி ச்சீ, நாய் சிரிக்காத, ஆமா நீ எங்கப்பா வேலைக்குப் போயிருந்தே அத ஏன்டா கேக்குற அந்த மேட்டுப்பட்டி கனேச இருக்கான்ல அவந்தோட்டத்துக்கு உழுக வரச் சொல்லிருந்தயா நானு காலங்காத்தாலயே போயிட்டே, அது சரியான கட்டாந்தரடா என்னா செய்ய வேற வழியில்லாம அறக்குழி நெலத்தெ உழுதுவிட்டுட்டு வந்தே, பாவம் மாடுக இன்னிக்கு சரியான வேல மாட்டுக்கு தண்ணிக்கு விடும்போது கொஞ்சம் தவுடயு பின்னாக்கையும் சேத்துப் போட்டு விடுப்பா.
சரிப்பா, சம்பளம் சேத்துக்கேக்க வேண்டியதானே! அடேங்கப்பா அவபெரிய வித்தாரக்காரெ சம்பள சேத்தலாந் தரமாட்டான். சரிப்பா அப்போ நீங்க மெல்ல வேலபாருங்க ஆமாப்பா நாளைக்கெல்லாம் அப்பிடித்தா செய்யனும். குட்டி இங்க வாடாக்குட்டி தாத்தாட்ட வா, ஏம் பேரனத் தூக்கிக் கொஞ்சுனாத்தேப்பா அழுப்பெல்லாம் பஞ்சாப் பறந்து போகுது. சரிங்க மாமா உங்க பேரனக் கொஞ்சுனது போதும் போய் குழிங்க வென்னித் தண்ணி ஆரப்போகுது. நீங்க குழிக்கவும் உங்க மககெ வேர குழிக்கனும். இந்தா போரேம்மா இந்தாடி சுப்புத்தாயி உம்ரேனப்புடி குழச்சுட்டு வரேன்.
                        ஐந்து ஆண்டுகள் நடந்து முடிந்தது குட்டிக்கும் ஐந்து வயது ஆகிவிட்டது. என்னங்க இந்த வருசம் செல்வமும் தங்கமும் எங்க அம்மா வீட்டுலயே படிக்கட்டும் குமாரு கூட குட்டிய நம்மூரு பள்ளிக்கூடத்துல சேத்து விட்டுருவமா? ஆமா பொண்ணி நாங்கூட மறந்துட்டே இந்த வருச குட்டிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டுறலாம். எனக்கு இன்னிக்கு வேல இருக்கு அதனால நீயே போய் பேருசேத்து விட்டுட்டு வா. சரிங்க அடுப்பங்கற அலமாறியில நேத்து கரிக்கொளம்ப சுண்டவச்சு வச்சுருக்கே அத மறந்துராம சாப்புட்டுப்போங்க நேரமானா கெட்டுப்போகும். சரி பொண்ணி நீ நேரத்தோட போயிட்டு வா நான் வேலைக்குக் கெளம்புறேன்.
                        ஏழே குமாரு வாடா போகலாம் குட்டி போவமா அம்மா கையப்புடுச்சுக்கோ நடந்து வா! பள்ளிக்கூடம் போவம் குமாரு தம்பி நடக்குறதப் பாருடா பூ வச்சு பொட்டு வச்சு கொலுசு மாட்டி பொட்டப்புள்ள மாதிரி அழகா இருக்கான்லெ ஏங்கன்னே பட்டுரும்போல இங்க வாடி குட்டி அம்மா உன்ன தூக்கி வச்சுக்கிறேன். இல்லனா ஊர் கண்ணு பட்டுரும் ஓடியா ஓடியா தங்கப்பிள்ள! எரக்கிவிடுமா அவன பள்ளிக்கூட வந்துருச்சு சரி போடா குமாரு அம்மா தம்பிய பள்ளிக்கூடத்துல சேத்திட்டுப் போறேன்.  சரிமா டாட்டா
                        சார் ஏம்பிள்ளக்கு அஞ்சு வயசு ஆகிருச்சுங்க சார் ஒன்னாங்கிளாசுல பேர்சேக்கனும் அப்பிடி சேத்துருவம் எந்த ஊர்ல இருந்துமா வரீங்க? இந்த ஊர்தாங்க சார் இந்த ஊர்னா இந்த ஊர் பேரச்சொல்லுமா? தெம்மாவூர் சார் பாப்பா பேர் என்னா? பாப்பா சொல்லு பாப்பா இல்ல சார் பையங்க என்னாமா கிண்டல் பன்றயா பொம்பளப்பிள்ளயப்போயி ஆம்புளப்பயன்னு சொல்ற சார் உண்மையிலேயே தாங்க சார் இந்த டவுசரத் தெரந்துகூடப்பாருங்க அப்ரம் எதுக்குமா பொம்பளப்புள்ள மாதிரி கண்மை போட்டுவிட்டு பொட்டு வச்சு பூவச்சு கொலுசு மாட்டி சிங்காரிச்சிருக்க? எங்க வீட்டுல பொட்டப்புள்ள இல்ல சார் அதான் இவன பொட்டப்புள்ளயா மாதிரி செல்லமா வளக்குறொ கோ! அப்பிடியா!
பாத்துமா ஆம்பளப்பய பொம்பளப்புள்ளயாவே மாறீராமஅப்பிடிலாம் மாற மாட்டாங்க சார் எங்க வம்சத்துல யாருமே அந்த மாதிரி இருந்ததில்ல. அப்பிடியா சரி உங்க புள்ள எப்பிடியோ வளங்க வளக்குறது வளக்குறிங்க நல்லபடியா வளத்தா சரித்தா. சரி பேர் சொல்லுங்க குட்டி சார் கை எட்டுதா இங்க வாடா உங்கையெ மடக்கி காதத்தொடு பாக்கலாம். இம்... போதும் போதும்சரிமா பேர் சேத்தாச்சு நாளைக்கிருந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிடுங்க சரிங்க சார் ரெம்ப நன்றிங்க சார். இருக்கட்டுமா இதுக்கெதுக்குமா நன்றி சொல்லுற இது எங்க கடமமா!... சரி வறேங்க சார் இம்பாக்கலாம்மா போயிட்டுவாங்க.
                        வீடு வந்துருச்சு எரங்குடா குட்டி இடுப்பு வலிக்குது. என்னாமா பொண்ணி பள்ளிக்ககூடத்துல சேத்து விட்டுட்டயா? ஆமாத்தே சேத்துவிட்டுட்டே, அந்த வாத்தியாரு திட்டுராருத்தே, எதுக்குமா? குட்டிக்கு பொட்டு வச்சு பூவச்சு கண்மைபோட்டு கொலுசு மாட்டிவிட்டு அழகு பாக்குரமில்ல அதுக்குத்தான். அந்த வாத்தியாருக்கென்னா வேல. ஏத்தே கொலுச அவுத்துருவமா? ஆமா அது எதுக்கு இருக்கு அதயும் வித்து நீயும் உம்புருசனும் சேந்து வாய்ல போடுங்க சரியாப்போகும் வேலயத்த வேலயப் பாக்காம போயி வேற வேல எதுமிருந்தா பாரு பொண்ணி.
                        குமாரு தம்பியப் பள்ளிக்கூடத்துக்கு கூப்புட்டுப்போடா கம்மாயில நிறையா தண்ணி கெடக்கு கரஓரமாவே சாக்ரதயா கூப்பிட்டுப்போடா கூப்புட்டுப்போயி ஒன்னாவகுப்புல ஒக்கார வச்சுரு சரியா? சரிமா அவனக் கௌப்பிவிடு கூப்பிட்டுப்போறே, அடியே குட்டி எங்கடி போற இம்பூட்டு அழகா கௌம்பி பள்ளிக்கூடத்துக்குப் போரெ மாமா, நீ வரலயா? நான் வரனும் போ, எதுக்குடா ஏந்தம்பிய வாடி போடின்னு கூப்புடுர அவனப்பாத்தா உனக்கு எப்பிடித் தெரியுது? என்னாடா குமாரு கோவிக்குர எனக்கு அத்த பையந்தான அதா கிண்டல் பன்னுனே தப்பா எதும் எடுத்துக்கிறாதடா குமாரு. சரிடா இராமையா நீ யாரு எங்க மாமா மகந்தானே உன்ன எதுக்குடா நான் கோவிக்கப்போறேன். இனிமேல் ஏந்தம்பியெ அப்பிடிக் கூப்புடாத சரியா சரிடா குமாரு
                        குமாரு இங்க தூங்க வரியா இல்ல தாத்தா பாட்டி கூட தூங்கப் போறயாடா? நான் வரலமா தாத்தா பாட்டி கூடயே தூங்குறேசரிடா கதவ பூட்டிரவா இம் பூட்டிக்கோமாஎன்னா பொண்ணி இன்னிக்கு ரெம்ப அழகா இருக்கவ அப்பனா இத்தன நாளா நான் அழகா இல்லயா? அட அப்பிடியில்ல ஏம் பொண்டாட்டி எப்பயுமே அழகிதா, குட்டி தூங்கிட்டானா இல்ல இன்னும் தூங்கல முழுச்சுட்டுத்தான் இருக்கா சீக்கிரமா தூங்கவை என்னா உங்களுக்கு அம்புட்டு அவசரம். அவசரமெல்லாம் ஒன்னுமில்ல சும்மாதான் வெளிய காத்தாட செத்த ஒக்காந்துட்டு வாங்க நான் தூங்க வச்சுட்டு கூப்புடுறே சரி குட்டி தூங்க வைக்கிறேன்னு நீ தூங்கிராதா உன் மல்லிகப்பூ வாசம் அப்பிடியே என்ன கயிறு கட்டி இழுக்குது உங்கிட்ட சரி சரி அப்பிடியே காஞ்சமாடு கம்மந்தட்டயில பாஞ்ச மாதிரி பாஞ்சுராதிங்க எதாருந்தாலும் இவ தூங்குனதுக்கப்புரமா பாத்துக்கலாம்.
அவசரப்பட்டாலே உனக்குப்பிடிக்காதே சரி நான் திண்ணையில ஒக்காந்திருக்கே கூப்புடு சரியா போக கூப்புடுரே. என்னாடா இது ஒருமணி நேரமாச்சு இன்னுங்கூப்புடாம இருக்கா, என்னா செய்றான்னு எட்டிப்பாப்பம், என்னடா தனசேகரா தூங்கலயா? இந்தா தூங்கனும்மா ஒரே புழுக்கமா இருந்துச்சு அதா அப்பிடியே காத்து வாங்கிட்டுப் போகலான்னு வந்தேம்மா! சரிடா சீக்கிரமா போய் தூங்கு பொண்ணி ஒத்தையில இருக்கப்போறா சரிமா போறேன். நீயும் தூங்கு, பொண்ணிபொண்ணிஇன்னும்மா அவந்தூங்கல, அட சும்மா இருங்க இப்பத்தா அவந்தூங்குறான் நீங்க போடுற சத்தத்துல அவ எந்துருச்சுரப்போறான். சரி இங்க வாயே! ஒன்னு சொல்லுறே நீங்க என்னா சொல்லுவிங்கன்னு எனக்குத் தெரியும் பொறுங்க தீபத்த அமத்திட்டு வரேன்.
                        குட்டிக்கு பத்து வயதாகிவிட்டது ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இராமையா அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். பவுடர் பூசி எப்போதும் அழகாக இருக்கும் குட்டியின் மீது இராமையாவுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது சில நேரங்களில் அவனது இடுப்பைக்கிள்ள மேனியைத்தடவ மார்பைக்கிள்ள கட்டிப்பிடிக்க இப்படியுமாய் திரிந்தான். குட்டியும் கூச்சப்பட்டு விலகி ஓடுவது கூச்சத்தில் கண்மூடிக்கொள்வது கட்டிப்பிடித்து உருள்வதற்கு இடம்கொடுப்பது இப்படியாய் இராமையாவின் குறும்புகளுக்கு அதிக இடம் கொடுத்துவிட்டான்.
                        பள்ளியில் குட்டி பெண்களோடுதான் அதிகமாக சேர்ந்து விளையாடுவான் தண்ணிகுடிக்க குழாய்க்குப் போனாலும் சேந்து போவான். பெண்களைப்போல பொட்டு வைப்பது புவுடர் பூசுவது சிமிட்டிப்போசுவது எனத் தன்னை மாற்றம் செய்து கொண்டே வந்தான், ஆண்களோடு சேர்வதை தவிர்த்தும் வந்தான். ஒரு நாள் பள்ளி விடுமுறையில் ஐஸ்ஒன் விளையாடினர் ஏழுபேர் இருந்த குழுவில் குட்டியை கட்டாயமாக சேர்த்துவிட்டான் இராமையா. குழுவில் இருந்த ஒருவன் எல்லையைத் தொடப்போக எல்லோரும் ஓடி மறைந்தனர்.
குட்டியும் இராமையாவும் தூரமாக ஓடிப்போயி ஒரு பழைய வீட்டில் ஒழிந்தனர். அது ஆள்நடமாட்டமில்லாத வீடு சற்று வெளிச்சம் மங்கியிருந்தது குட்டியை நிற்கவைத்து கட்டிப்பிடித்த இராமையா குட்டியை கெடுத்துவிட, எங்கே தம்பியக் காணமென்று தேடிவந்த குமார் அந்த வீட்டிற்குள் வர என்னடா செய்றிங்க என்று அறட்டியதில் இருவரும் வெளியில் ஓடிப்போக ஏந் தம்பிய என்னடா செஞ்ச என்று நெஞ்சுச்சட்டையைப் பிடித்து ரெண்டு அறை அறஞ்சு தள்ளிவிட்டான் இராமையாவை.
                        அந்த விசயம் எப்படியோ வீட்டில் தெரிய இரு வீட்டுக்கும் பெரிய சண்டை வந்து ஓய்ந்து விட்டது. கொஞ்ச நாள் கழித்து இராமையா பேச முற்பட்டான். குட்டி பேசாது ஒதுங்கிச் சென்று விட்டான். பின்பு குட்டிக்கும் வகுப்பறைத் தோழன் சடையனுக்கும் உறவு ஏற்பட்டது. பல முறை தவறு செய்து சில முறை அகப்பட்டனர். இந்த விசயம் தனசேகரனின் காதுக்குச் சென்றது பொண்ணியும் சின்னப்பயனுக்கு என்னா தெரியும் பெருசுபடுத்தாதிங்க விடுங்கன்னு தட்டிக்கழித்து விட்டாள். பள்ளியில் பெரும்பாலும் பெண்களோடே சேர்ந்து திரியும் குட்டியின் பழக்க வழக்கத்தை மாற்றும்படி குமார் கட்டாயப்படுத்தினான் அது குட்டிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே குமாருடன் பேசுவதை சுத்தமாகவே நிறுத்திவிட்டான்.
                        பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றான். அங்கும் அதே பழக்கம் தொடங்கியது. சிலர் இவனின் போக்குகண்டு வீட்டில் செல்லிவைத்தனர். இவன் வீட்டுப் பேச்சைக் கேட்ப்பதாக இல்லை. தனக்கு பிடித்த ஆண்களோடு பழகினான். வீட்டில் அப்பா, அம்மா திருமணம் செய்து வைக்கலாமென்று எடுத்த முடிவு பிடிக்காமல்போக. ஒரு நாள் மதியம் வீட்டில் யாருமில்லாதபோது தன் தேவைகளையெல்லாம் எடுத்து பையில் வைத்துக்கொண்டு கிளம்பினான்தன் ஊரைவிட்டு வெகுதூரத்திற்கு அப்பால் சென்றவன் அங்கு தன்போல் உள்ளவர்களிடம் சேர்ந்தான். பொண்ணியும் தனசேகரனும் தேடியலைந்தனர் கிடைக்கவில்லை குட்டியை எண்ணி பொண்ணி அழுகாத நாட்க்களில்லை.
                        குமாருக்கு இராணுவத்தில் வேலை கிடைத்திருந்தது விடுமுறைக்காக ஊருக்கு வந்து விடுமுறை நாட்களை கழித்துவிட்டு கிளம்பினான். செல்வமும் தங்கமும் இரயில் ஏத்திவிட்டுத் திரும்பினர். இரயில் சென்னையைத் தொடுவதற்கு முந்தைய நிறுத்தத்தில் நின்றது அரைத்தூக்கத்திலிருந்த குமார் முழித்தான். ஒரு பச்சை தாவணியனிந்த பெண் சில்ர இருந்தா குடுங்க என்று ஆண் பெண் களந்த குரலில் கேட்க உற்று கவனித்த குமார். ஏழே குட்டி குட்டி இங்க வாடாத் தம்பி என்று கத்திக் கூப்பிட பயணிகளெல்லாம் திரும்பிப் பார்த்தனர். என்னை மண்ணிச்சிருங்க அண்னே நான் தப்புப் பண்ணிட்டேன் என்று குமாரின் காலைப் பிடித்து அழுதவன். இரயில் கிளம்பியதும் கீழே இறங்கிவிட்டான். குமார் இறங்க முற்பட்டான் ஏறிய கூட்டம் இவனை உள்ளே தள்ளியது இரயில் கிளம்பிவிட்டது.    



No comments:

Post a Comment