Tuesday, 31 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 65-70)


கடைசி உரை இடம்பெறும்:
இந்த புத்தகத்தில் இடம் பெறும் மேற்கண்டவைகள் பற்றிதான் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார். அவரது உரை 4 ஆயிரம் வார்த்தைகளை கொணடதாக இருந்தது. நிறைவு பெறாத அப்துல்கலாமின் புத்தகத்தில் அவரது இந்த கடைசி உரை இடம் பெறும் என ஸ்ரீஜன் பால்சிங் கூறியுள்ளார்.
விடுமுறை நாளில் கேரளாவில் செயல்பட்ட அரசு அலுவலகங்கள்:
கேரள மாநில மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் சனீஷ் கூறுகையில்,தான் இறந்தால் அன்று விடுமுறை விடக்கூடாது. அதற்கு பதில் கூடுதலாக ஒரு நாள் பணியாற்ற வேண்டும் என்ற அப்துல்கலாம் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எங்களுடைய ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்என்று தெரிவித்தார். அப்துல்கலாமின் உணர்வுக்கு மதிப்பு அளித்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரளாவில் அரசு அலுவலகங்கள் விடுமுறை நாளான 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயங்கின. அதன்படி சில கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், மாநில பெண்கள் மேம்பாட்டு நிறுவனம், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவை செயல்பட்டன. அது குறித்து பெண்கள் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் சுனில் கூறுகையில், மக்கள் வழக்கமாக விடுமுறையையே விரும்புவார்கள். ஆனால் மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமுக்காக எங்கள் நிறுவனம் விடுமுறை நாளில் கூடுதலாக 2 மணி நேரம் செயல்பட்டது. இது, அவர் மீது மக்கள் மிகுந்த அன்பை வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது என்றார்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 02.08.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தபால் ஊழியர்கள் அப்துல்கலாமை போற்றும் வகையில் பணிக்குச் சென்றனர்.
அப்துல்கலாமின் டுவிட்டர் தொடரும்:
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பின்தொடரும் பாரத ரத்னா டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாமின் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தின் பெயர் “In memory of Dr.Kalam” என மாற்றப்பட்டுள்ளது. அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இனி அவரின் கருத்துகள், மேற்கோள்கள், அறிய புகைப்படங்கள் ஆகியவை பகிரப்படும் என அப்துல்கலாமின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீஜன்பால்சிங் தெரிவித்தார். மேலும் அவரது டுவிட்டர் கணக்கு மூலம் அவர் வலியுறுத்திய கொள்கைகள், இந்தியாவை பற்றிய அவரது கனவுகள், தொலைநோக்கு சிந்தனைகள் ஆகியவற்றையும் தொடர்ந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
உத்திரபிரதேச மாநில முதல்-மந்திரி அறிவிப்பு:
 மாநிலத்தின் தலைகநரான லக்னோவில், .பி.தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பெயர்,டாக்டர் .பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்என பெயர் மாற்றப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்தார். அந்த பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தில் அப்துல்கலாம் நிவைகாக மிகப்பெரிய அளவில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உத்திரபிரதேச மாநிலத்துடன் ஆழமான பிணைப்பை அப்துல்கலாம் கொண்டிருந்தாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
வெளிநாடு வாழ் கேரள மக்கள் இணைதளம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை கேரள முதல்வர் அறிவிப்பு:
திருவனந்தபுரத்தில் அமெரிக்க வாழ் மலையாளிகள் சங்கங்களின் 4-ம் ஆண்டு விழாவும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு தினமும் நடைபெற்றது. அதில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி கலந்துகொண்டு பேசினார். வருகின்ற சட்டசபை தேர்தலில் வெளிநாட்டில் வாழும் கேரள மக்கள் இணைதளம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிமகன் என்ற முறையில் உரிமைகள் எல்லாம் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கும் உண்டு என்பது உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்துல்கலாம் கற்றதையும், நம்பிக்கையும் எடுத்துரைத்தார், செயல்படுத்தினார். வெளிநாடுவாழ் கேரள மக்களின் சேவையை கேரளத்திற்கு எவ்வாறு பயன்படுத்தி கொள்ளலாம் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் அப்துல்கலாம் என்று பேசி முடித்தார்.
கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல்கலாம் பெயர்:
கேரள சட்டசபை 29.07.2015- அன்று கூடியது அப்போது முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறியதாவது. முன்னாள் ஜனாதிபதி .பி.ஜே.அப்துல்கலாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். ஒரு விஞ்ஞானியாக கேரள மாநிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்துல்கலாம் பணிபுரிந்து இருக்கிறார். எனவே அவரை கவுரப்படுத்தும் வகையில் கேரள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் என பெயரிட முடிவு செய்துள்ளோம். என்று அறிவித்தார்.
இறுதிச்சடங்கு:
இராமேஸ்வரத்தில் 30.07.2105 (வியாழக்கிழமை) நடைபெற உள்ள அப்துல்கலாமின் இறுதிச்சிடங்கில் பங்கேற்க கேரளாவிலிருந்து ஒரு குழு செல்கிறது. அதில் நான், கவர்னர் பி.சதாசிவம், எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுனாநந்தன், மந்திரி பி.ஜே.ஜோசப் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். என்று அறிவித்தார்.
வேண்டுகோள்:
சபாநாயகர் என்.சக்தானும் இராமேஸ்வரம் வர விருப்பம் தெரிவித்தார். ஆனால் சட்டசபை நடந்து வருவதால் அவரால் எங்களுடன் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல்கலாமின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணமாக மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டது. என்றும் சட்டசபையில் கூறினார்.
கேரள மாநிலத்தில் கூட்டுறவு பூங்காவுக்கு கலாம் பெயர்:
கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட கூட்டுறவு வங்கி உருவாக்குகிற கூட்டுறவு இன்ஸ்டிடியூட் மற்றும் ஆராய்ச்சி பூங்காவுக்கு அப்துல்கலாம் பெயரை சூட்டுகிறது. கோழிக்கோட்டில் 04.08.2015 அன்று நடந்த அந்த வங்கியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மகேஷ் கிரி எம்.பி., பிரதமரிடம் கோரிக்கை:
டெல்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு மறைந்த மக்களின் குடியரசு தலைவர் டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என்று கிழக்கு டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினர் மகேஷ் கிரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். அது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது. மறைந்த மக்களின் குடியரசு தலைவர் டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாம் சிறந்த விஞ்ஞானியாகவும், சிறந்த ஆசிரியராகவும், இளைஞர்களின் எழுச்சி மிகு நாயகனாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதும் தாய்நாட்டிற்கே அர்பணித்தார். அப்துல்கலாமிற்கு மரியாதை செய்யும் வகையில் டெல்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும்.
அப்துல்கலாமின் பெயர் சூட்ட கோரிக்கை:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் இயக்குனராக அப்துல்கலாம் இருந்தபோது அவருடைய வழிகாட்டுதல்படி, பாதுகாப்பு துறையில் நாடு தனிச்சிறப்பை மேம்படுத்த மையத்தில் பல ஆய்வு பணிகள் நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அப்துல்கலாம் பெயரை வைப்பது எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பால் அப்துல்கலாமுக்கு செலுத்தப்படும் மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும், என்று தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்துல்கலாம் உருவ படத்திற்கு புதுவை முதலமைச்சர் மலர் அஞ்சலி:
முன்னாள் ஜனாதிபதியின் மறைவையொட்டி புதுவையில் சட்டமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அப்துல்கலாமின் உருவபடத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் சபாநாயகர் சபாபதி, அமைச்சர் ராஜவேலு, பன்னீசெல்வம், தியாகராஜன், எம்.எல்..,க்கள் வைத்தியநாதன், நேரு, மல்லாடிகிருஷ்ணராவ், திருமுருகன், வல்சராஜ், அன்பழகன், பாலன், என்.எஸ்.ஜே.ஜெயபால், தலைமை செயலாளர் மனோஜ்குமார் பரிதா, அரசு செயலாளர் கந்தவேலு உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி அலுவலகம்:
காங்கிரஸ் கட்சியின் கட்சி அலுவலகத்தில் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் காந்திராஜ், முன்னாள் எம்.எல்..,க்கள் நீல.கங்காதரன், பாலாஜி, நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, சாம்ராஜ், கருணாநிதி, தனுசு, வீரமுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை காமராஜ் சாலை:
புதுவை காமராஜ் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அரசு கொறடா நேரு எம்.எல்.., மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் மற்றும் என்.ஆர்.காங்கிரசார் பலர் கலந்துகொண்டனர்.
சமூக அமைப்பு:
இந்திராகாந்தி சதுக்கம் அருகில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், செயலாளர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல் புதுவையின் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போலீஸ் நிலையம்:
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் போலீசார் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பாகூர் போலீஸ் நிலையம்:
பாகூர் போலீஸ் நிலையத்தில் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், விஜயகுமார், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அப்துல்கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பாகூர் கொம்பன் பஞ்சாயத்து அலுவலகம்:
பாகூர் கொம்பன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் உதவி பொறியாளர் தமிழரசன் மற்றும் வருவாய் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
அரியாங்குப்பம்:
புதுவை மாநிலம் வீராம்பட்டினத்தில் புதுச்சேரி பின்தங்கிய மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வீராம்பட்டினம் நாகூர் தோட்டத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல்கலாம் உருவ படத்தில் இயக்க தலைவர் வைரமுத்து மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதில் இணைச் செயலாளர் அண்ணாமலை, கவுரவத்தலைவர் ஆறுமுகசாமி, ஆலோசகர் செஞ்சிவேல், அமைப்பாளர் ஹேமசந்திரன், துணை அமைப்பாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மக்கள் முன்னேற்ற இயக்கத்தினர் புதுவையில் அப்துல்கலாம் நினைவு கூறும் வகையில் முக்கிய சந்திப்பில் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும். அவர் மறைந்த நாளை மாணவர்களும் இளைஞர்களும் அறிவியல் விஞ்ஞானிகளும் நினைவு தினமாக கொண்டாட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில் அப்பகுதி ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மவுன ஊர்வலம்:
புதுவை மாநில பா.. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் 28- ந் தேதி மாலை அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்திற்கு மாநில பொதுச்செயலாளர். சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் தாமோதரர், கேசவலு, முன்னாள் எம்.எல்..,க்கள், எம்..எஸ்.சுப்பிரமணியன், மனோகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் நேரு வீதி, மிஷன்வீதி, மாதா கோவில் வீதி வழியாக கடற்கரை காந்தி திடலை அடைந்தது. அங்கு அவர்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி:
முத்தியால்பேட்டையில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் புதுவை மாநில தலைமை அலுவலகத்தில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அவைத்தலைவர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் சரத் செந்தில், சிறுபான்மை அணி செயலாளர் முகமது இஸ்மாயில், மகளிர் அணி செயலாளர் தீனா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி:
அப்துல்கலாம் மறைவுக்கு கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை கோயம்பேடு காய்-கனி மற்றும் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் சார்பில் அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் கடைபிடிக்கப்பட்டது.
இரங்கல் நோட்டீசு:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி சென்னையில் மாணவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நகர் முழுவதும் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி நோட்டீசுகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு தரப்பினரும் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
மார்க்கெட்டில் அஞ்சலி:
பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பூ மார்க்கெட்டு நுழைவு வாயிலில் அப்துல்கலாம் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர். அப்துல்கலாம் ஆன்மா சாந்தியடைய மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பூக்கள் வாங்குவதற்காக வந்திருந்த சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு உள்ளே சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். சிலர் மனம் உருகி கண்ணீர்விட்டப்படி இரு கைகளையும் கூப்பியவாறு அஞ்சலி செலுத்தினர்.
ஆட்டோ சங்கம்:
கோயம்பேடு பஸ் நிலையம் வெளியே எல்.பி.எப். ஆட்டோ சங்கம் சார்பில் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அலைமோதிய கூட்டம்:
அப்துல்கலாம் மறைவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 30- ந் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அப்துல்கலாம் இறுதிச்சடங்கு:
அப்துல்கலாம் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, சென்னை நகர் முழுவதும் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அமைதி பேரணி:
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி .பி.ஜே.அப்துல்கலாம் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது கடல் நகரமான இராமேஸ்வரம் மக்களின் கண்ணீர் கடலில் தத்தளித்தது. அதன் தாக்கம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நேரத்தில், சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அப்துல்கலாம் உருவப்படத்தை சுமந்தபடி, கருப்பு பேட்ஜ் அணிந்தும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அமைதி பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலை:
சென்னை அண்ணா சாலை சிக்னல் அருகே அப்துல்கலாம் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு போக்குவரத்து போலீசார், வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
தாம்பரம் பெப்ஸ் சிக்னல்:
தாம்பரம் பெப்ஸ் சிக்னல் அருகில் தோழன் அமைப்பினர், அப்துல்கலாம் உருவத் தோற்றம் போன்று உருவப்படத்தை தங்கள் முகத்தில் அணிந்து, 2 மணி நேரம் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு அப்துல்கலாமுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
கோயம்பேடு வியாபரிகள்:
சென்னை கோயம்பேடு பூ-மலர் மாலை வியாபாரிகள், காய்கறிகள்-பழ வியாபாரிகள் அப்துல்கலாம் இறுதிச்சடங்கையொட்டி, 30-ந் தேதி கடைகளை அடைத்தனர். அப்துல்கலாம் உருவப்படம் பொறித்த பதாகைகளுடன், பேண்டு-வாத்தியம் இசை முழங்க மார்க்கெட்டை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மார்க்கெட் வளாகத்துக்குள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு வியாபாரிகள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
வீதிகள்தோறும் அஞ்சலி:
சாலைகள,  தெருக்கள், வீதிகள்தோறும் ஆங்காங்கே அப்துல்கலாம் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து. கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. கண்ணீர் அஞ்சலி, புகழ் அஞ்சலி பேனர்களும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆட்டோக்கள், கால்-டாக்சிகள், மாநகர பஸ்களில் அப்துல்கலாம் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்துல்கலாம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நேரில் செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாக அப்துல்கலாம் இறுதிச்சடங்கு ஊர்வலத்தை பார்த்தனர். அப்போது தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனையில் பலர் மனம் கலங்கினர்.
வீடுகளில் அஞ்சலி:
ஒரு சிலர் தங்கள் வீட்டில் அப்துல்கலாம் உருவப்படத்தை வைத்து, அப்படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியையும், மலர் அஞ்சலியையும் செலுத்தினர்.
குழந்தைகள் உருக்கம்:
சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட நகர், நீலாங்கரை உள்பட முக்கிய கடற்பகுதிகளில் நேற்று அப்துல்கலாம் உருவப்படம் வைக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
மெரினா காந்தி சிலை:
மெரினா காந்தி சிலை அருகே அப்துல்கலாம் உருவபப்படம் பொறித்த பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. உருவப்படத்திற்கு குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மிக உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.
திருவான்மியூர் கடற்கரை:
திருவான்மியூர் கடற்கரையில் நடப்போர் சங்கத்தின் சார்பில் அப்துல்கலாம் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து அதிகாலையில் வைக்கப்பட்டது. அப்படத்துக்கு நடப்போர் சங்கத்தின் தலைவர் அருணாச்சலம் அஞ்சலி செலுத்தினார். ஆண்டுக்கணக்கில் இந்த கடற்கரையில் அதிகாலை நடைபயணம் செய்து வரும் .தி.மு. தேர்தல் பணி குழுச்செயலாளர் கழக குமார் தலைமையில் மத்திய அரசு கணக்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள் விஷ்ணு பிரசாத், சின்ன கருப்பன் மற்றும் மூர்த்தி, அழகேசன், குமார் உள்பட ஏராளமானோர் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அந்த இடத்தை கடந்து சென்ற அனைவரும் 1 நிமிடம் அப்துல்கலாம் உருவப்படத்தின் அருகில் நின்று மவுன அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.
சென்னை புறநகரில் பெரும்பாலான கடைகள் அடைப்பு:
அப்துல்கலாமின் உடல் அடக்கம் 30-ந் தேதி இராமேஸ்வரத்தில் நடைபெற்றதையொட்டி தமிழகத்தில் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் பொதுமக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
கடைகள் அடைப்பு:
சென்னை புறநகர் பகுதி பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் புறநகர் பகுதியில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அமைதி ஊர்வலம்:
கிழக்கு தாம்பரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமையில் வியாபாரிகள் அப்துல்கலாம் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தாம்பரம் அய்யாசாமி தெருவில் இருந்து ஊர்வலமாக வந்த தாம்பரம் பெருநகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பிரபாகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பம்மல் பகுதியில் வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் அமைதி ஊர்வலம் நடத்தி அப்துல்கலாம் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பூர்:
சென்னை பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கொளத்தூர் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. காசிமேடு எண்ணூர் நெடுஞ்சாலையில் மீனவ சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவொற்றியூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பொது வர்த்தகம் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
ஆதம்பாக்கம்:
ஆதம்பாக்கம் பகுதியில் தி.மு. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட பலர் அப்துல்கலாம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஆதம்பாக்கத்தில் தி.மு. இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆலந்தூர் மண்டல மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மடிப்பாக்கம் 188-வது வட்டத்தில் பொதுநல மன்றத்தின் சார்பிலும், பள்ளிக்கரணையில் பொதுமக்கள் சார்பிலும் அமைதி ஊர்வலம் நடந்தது. இதேபோல் ஆட்டோ டிரைவர்கள் சங்கம், பொது நலச்சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அமைச்சர் தியாகராஜன் அஞ்சலி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு பாகூரை அடுத்த கன்னியக்கோவில் கிராமத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டு அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் பாகூரில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் என்.ஆர்.மக்கள் இயக்க தலைவர் தனவேலு. வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் மணவாளன், வட்டார தலைவர் பாவாடை ஆகியோர் தலைமையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம்:             
இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம் சார்பில் காட்டுக்குப்பத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இயக்க தலைவர் அரிகிருஷ்ணன், பொதுச்செயலாளர் சாண்டில்யன், நிர்வாகிகள் ஜோதி, தணிகாசலம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்ற சங்கம்:
கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள லா-பிரான்ஸில் குடியிருப்பு, பூரணாங்குப்பத்தில் பெண்கள் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் அப்துல்கலாம் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் இராணுவ வீரர் நந்தா, கார்த்தி, பச்சையப்பன், சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிதாசன் கல்லூரி:
புதுச்சேரியில் 29-ம் தேதி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். புதுவை நகரம், புறநகர் பகுதியில் முக்கிய சந்திப்புகளில் பல்வேறு சமூக அமைப்புகள், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள் சார்பில் அப்துல்கலாம் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை:
அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி மீனவர்கள் 29-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
சென்னை புறநகரில் மாணவர்கள் அஞ்சலி:
தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் .பி.ஜே.அப்துல்கலாமின் உருவபடத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது அப்துல்கலாமின் பெருமைகளை மாணவர்கள் விளக்கிப்பேசி அவரது கொள்கைகளை பின்பற்றப்போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல், கிழக்குதாம்பரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கிழக்குதாம்பரத்தில் அப்துல்கலாம் படத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் பா.. தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் தேவசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவர்கள் சங்கம்:

ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment