மனித உடலில் இருக்க வேண்டிய குரோமோசோம்களின் அளவு மாறுபடுவதால். ஆணாகப் பிறந்தவர்கள் பெண் தன்மை உடையவர்களாகவும், பெண்ணாகப் பிறந்தவர்கள் ஆண் தன்மை உடையவர்களாகவும் மாறுபடுகின்றனர். இதுபோன்ற மாற்றங்கள் குழந்தைகளின் சிறுவயதிலிருந்தே வெளிப்படுகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களைச் சரியான முறையில் வழிநடத்திடல் வேண்டும். இல்லையேல் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
இன்றைய காலம் என்பதில் இயங்கும் மக்கள் நேற்றைவிட இன்று முக்கியம், இன்றைவிட நாளை முக்கியமென்று, தன் சந்ததிகளின் முன்னேற்றத்திற்காக அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் எனச் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சந்ததிகளே தவறான பாதைக்குச் சென்றால் எப்படி இருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இயங்கும் உலகில் நாம் நம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பணத்தைத் தேடி அழைந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கைக்கு பணம் தேவைதான் அதே போன்று குழந்தைகளின் எதிர்காலமும்.
குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது அந்த நிலையில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குழந்தைகளுக்கு அதிகத்தேவை. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்ற பழமொழியைப் போலத்தான். குழந்தைகளின் மனதில் குழந்தைப் பருவங்களில் வளருகின்ற பழக்கங்களே அவர்களின் உடல் வளர்ச்சியோடு சேர்ந்து பரிணமிக்கின்றன. தனது குழந்தை பிறப்பில் ஆணா? பெண்ணா? என்பதை உறுப்புகளை வைத்து மட்டுமே தெரிந்து வைத்திருப்பதைவிட, குழந்தைகள் வளர்ச்சியில் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக வளர்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆண் குழந்தை பெண்ணாகவும், பெண் குழந்தை ஆணாகவும் மாற்றம் அடைகிறது என்றால் அதை எந்தப் பெற்றோர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகச்சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஒரு முறை நகர்புற வீதியில் நடந்து சென்றபோது ஒருவர் பட்டினியால் வாடுவதைக் கண்டேன். அவரின் முகத்தைப் பார்த்தபோது தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் என்னுடைய முகம் அவருக்கு நினைவில் இல்லை. ஏனென்றால் அவர் ஒரு நடனக் கலைஞர். அவரிடம் நானே அறிமுகமாகி அவரின் பசியைப்போக்க முன்வந்தேன். தேனீரும், இரண்டு ரெட்டித் துண்டுகளும் வாங்கிக் கொடுத்தேன். அவர் தேனீரை மட்டும் குடித்தார். ரொட்டித் துண்டை மறுத்தார். பின்னர் சிகரெட் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். பேசி கொண்டிருந்த வேளையில் நிறைய விசயங்கள் மலர்ந்தன. அப்போது அவரின் பாட்டி மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார். பின்னர் தங்கை பாட்டியுடன் உதவிக்கு சென்றிருப்பதாகச் சொன்னார். அதன்மூலம் அவரின் வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் நான் குறி சொல்வேன் நீங்கள் என் வீட்டிற்கு வந்தால் உங்கள் மனக்கஷ்ட்டம் தீரும் என்றார். அவர் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எனக்குள்ளாய் இருந்த ஆராய்ச்சிப் புத்தி அவரை நம்புவதைப்போன்று நடிக்கச் சொன்னது, வீட்டிற்கு சென்றோம்.
வீடு நகர்புறத்தின் ஓரமாக நின்றிருந்தது. கதவைத் திறந்தார் தீக்குச்சிகளும், சிகரெட் துண்டுகளும் நிறைந்து கிடந்தது. பாழடைந்த வீடாகக் காட்சியளித்தது. என்ன நண்பா வீட்டில் சாமி இருப்பதாகவும், நீங்க குறி சொல்வதாகவும் சொன்னிங்க என்றேன். வீட்டிற்குள் வா சொல்கிறேன் என்று கதவைச் சாத்தி தாழ்பாளைப்போட்டு என்னைக் கட்டிலில் தள்ளினார். அவரை அடித்துவிட்டுத் தப்பினால் இறந்துவிடுவாரோ என்ற பயம் என்னை கோழையாக்கியது. அழகான பெண் இந்த அந்தப்புறத்தில் தனித்கிருக்கையில் என் காதலா உங்களுக்கு என்ன வேலை வாருங்கள் லீலையைத் தொடரலாம் என்று சட்டைபட்டனை கழட்டியபடி நெருங்கினார். தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டுமென்றேன். எடுக்கச் சென்றார் ஒரு நிமிட இடைவெளியில் கதவைத் திறந்து வெளியேறினேன். ஒரு ஆணுக்குள் இருந்த அந்த பெண் தன்மையை என்னால் அன்றுதான் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
ஒரு நாள் நகர்புரத்திலிருந்து பேருந்து ஏறி ஊருக்குச் செல்லும்போது பின்னால் இருக்கையில் இடம் கிடைத்தது. ஒரு கோவிலில் பூசாரியாக இருப்பதாகச் சொல்லி அறிமுகமானவர் என்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டார். இருவரும் பேசிக்கொண்டே வந்தோம் அவர் என்னை உறசிக்கொண்டே அமர்ந்திருந்தார், அவரும் ஆண், நாமும் ஆண் என்ற மோலோட்டமான சிந்தனையில் வந்த என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்கு வரலாம். நான் அங்குதான் இருப்பேன் என்று கூறினார், தொடையில் கைவைத்து தடவினார், அதை நான் பெரிதுபடுத்தவில்லை அவர் கண்களில் பிழை தெரிந்தது. சற்று நகர்ந்து அமர்ந்தேன் கடைசி இருக்கையில் நாங்கள் இருவர் மட்டுந்தான். தொடைக்கு மேலாக கை நகர்ந்தது. நான் எழுந்து முன் இருக்கைக்குச் சென்றுவிட்டேன்.
இன்னொருநாள் ஊருக்குச் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினேன். என் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ஏதோ சிந்தனையோடு வந்து கொண்டிருந்தார். நான் அவரை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஊர் நெருங்க ஆரம்பித்தது. இரவு நேரம் ஆட்டோவில் மூன்றுபேர் அமர்ந்திருந்தோம். அந்தப் பெரியவர் திடீரென்று தொடையில் கை வைத்தார். நான் தூங்குவதுபோன்று சோர்ந்திருந்தேன். அவரும் தூக்கத்திலிருப்பார், தெரியாமல் கைபட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் விழிப்பாகத்தான் இருந்தார். கை அசைவுகளின் நோக்கம் தவறாக இருந்தது. எழுந்து பார்த்தேன் நீயெல்லாம் ஒரு பெரியாழா என்று கேட்க, வாய் முற்பட்டது. என் விழிகளின் முறைப்பைக்கண்ட அவர் நகர்ந்தமர்ந்தார். ஊர் வந்ததும் இறங்கி திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார்.
பின்னொரு நாளில் ஒருவர் என்னைவிட வயதில் 5 வயது மூத்தவராக இருந்தார். என்னிடம் அதிக மரியாதை காட்டினார். உங்கள் துறைசார்ந்த புத்தகங்கள் வேண்டும் என்றார். நான் நூலகத்திற்கு அழைத்துச்சென்று பல நூல்களைக் அறிமுகம் செய்தேன். நண்பர்களாகப் பழகினோம். அலைபேசிக்கு அழைப்பார். குறுஞ்செய்திகள் அனுப்புவார் நானும் பதிலளிப்பேன். ஒரு நாள் ஆண்களுக்கான உடலுறவு குறித்துப் பேசினார். நான் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்று கூறிவிட்டேன். பின்நாட்களில் அடிக்கடி அலைபேசியில் அழைத்த அவரின் அழைப்புகளை நான் தவிர்க்க அந்த நட்பு அன்று முதல் முடிவுக்கு வந்தது. ஒரு கல்லூரி மாணவன் முகநூலில் வந்து பேசிப்பழகினான். சரியாக பத்து நாட்கள்கூட இல்லை. குறுஞ்செய்தியில் பேசியவன் நீங்க அழகா இருக்கிங்க அப்படி இப்படி என்றான். கடைசியாக என் அலைபேசி எண்னையும் பெற்று என்னை உடலுறவு செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்றான்.
புதிய நண்பர்களின் அறிமுகத்தின்போது அதிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. வருகின்ற நண்பர்களும் அவர்களைப் போன்று இருந்துவிடுவார்களோ என்று உள்மனதிற்குள் ஐயமாகவும் இருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய நண்பர்களை தவிர்க்க வேண்டிய கட்டாயச் சூழலும்கூட ஏற்படுகிறது. விரும்பி அலைபேசி எண்களைக் கேட்பவர்களுக்குக்கூட எண்களைக் கொடுப்பதற்கு தயக்கமாக இருக்கிறது. அதே சமயத்தில் சந்தேகத்திற்குரியவர்களிடம் எண்களைத் தவறாகவும் கூற வேண்டியதாக இருக்கிறது
சமீபத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் அம்பளப்புழா அரசு கல்லூரியில் நடைபெற்ற உலக மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசிப்பதற்காக நானும் என் நண்பர் கோ.ஏழுமலையும் சென்றிருந்தோம். மாநாடு முடிந்து திரும்பிக்கொண்டிருந்தோம். தமிழ்நாட்டை வந்தடைந்தோம் இரவுநேர பயணம் சற்று அதிக களைப்பாக இருந்தது. அவர் ஒரு இருக்கையில் நான் ஒரு இருக்கையில் என பிரிந்து அமர்ந்திருந்தோம். நல்ல களைப்பு நல்ல தூக்கம் என் இருக்கையில் ஒரு இளைஞன் அமர்ந்தான். அரைத்தூக்கத்தில் விழித்தேன். அவன் கரத்தில் கொட்டிக்கிடந்த புகையிழை நாற்றம் என் உறக்கத்தை சீர் குழைத்தது. கண்டுங்காணாமல் கண்மூடினேன்.
கண் அசர்ந்தேன் என் தொடையில் அவன் கரம் விழித்தேன் எடுத்துவிட்டான் கனவுபோல என்று மீண்டும் கண்மூடினேன் சற்று தூங்கியதும் அருகில் ஒட்டியவன் கையைத் திடீரென்று இனப்பெருக்க உறுப்பில் வைத்தான். சட்டென்று எழுந்தேன் அவன் கையைத் தட்டிவிட்டு முட்டாப்பயலே என்று கடிந்துவிட்டு நகர்ந்தேன். திருதிருவென முழித்தவன் உறங்குவதுபோல் நடித்தான். பார்க்க பாவமாக இருந்தது அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். முன் இருக்கையில் மாறி அமர்ந்தேன். அந்த நேரத்தில் நான் தூங்கும்போது என் பையிலிருந்த பணத்தை அவன் திருடியிருந்தால்கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். இந்த வயதில் இவனுக்கு இப்படி ஒரு கோளாரா? இத்தனை ஆண்டுகளாய் அவனின் பெற்றோர்கள் நம்பிக்கையோடு வளர்த்தெடுத்த விதை சோடையாகிப்போனதே என்று நினைக்கையில் மனம் அதிக வேதனைக்குள்ளானது. என் நண்பனை எழுப்பினேன், பேருந்து நின்றது இறங்கி ஓடி ஒழிந்து விட்டான் அந்த இளைஞன்.
ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் மீது நீங்கள் செலுத்தும் அக்கரையைப் போலவே அவர்களின் பாலுணர்வு விசயத்திலும் சற்று கவனம் செலுத்துங்கள். ஆண்கள் திருநங்கைகளாகப் போய்விட்டால் அது வேற விசயம். ஆண்களாகவே இருந்து கொண்டு ஆண்களிடமே வேறு பழக்கம் வைக்க விரும்புவதுதான் வருத்தமாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு ஆண் அவனைவிட பலமுடையவனிடம் கொஞ்சுகிறான். அவனைவிட பலம் குறைந்தவர்களை தாக்கி அவன் தேவையைப் பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்த மாட்டான் என்பதில் என்ன நம்பிக்கை
இருக்கிறது. எனவே இச்சமூகத்தில் ஆண்களுக்கு ஆண்களாலேயே பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது எனக்கூறலாம்.
No comments:
Post a Comment