Wednesday, 30 March 2016

இப்படியும் ஒருவள்…




கல்லூரியின் தகவல் பலகையில் இலவச கணினி பயிற்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களெல்லாம் ஒரு துறையில் கற்றுப் பழகும் சந்தர்பத்தை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்தது. நவீன காலத்தின் அவசியப்பிடியை உணர்ந்த மாணவ மாணவியர்களெல்லாம் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து முடித்தனர். முதல் நாள் வகுப்பு நடந்து முடிந்திருந்த நிலையில் இரண்டாம் நாள் வகுப்பிற்கு சற்று தாமதமாகவே வந்து சேர்ந்தான் சிவா.
வகுப்பிலிருந்த ஒருவன் ரம்யாவைக் கண்டு கண்சிமிட்ட அவள் கோவமாய் திட்ட முற்பட்டு தன் கண் விழிகளைத் திரட்டி …! என்று முகம் சுழித்து அதட்ட இருவரையும் கண் கூடாக் கண்டுவிட்டான் சிவா. வகுப்பு முடிந்த பிறகு அவளைத் தனிமையில் கண்டு புன்னகைத்தது மட்டுமின்றி அவர் யார்? என்று நேரில் கேட்க, ரம்யா அண்ணன் என்றாள் முத்து  தங்கை என்று சமாளித்தான். இரண்டு மூன்று நாட்க்கள் கடந்த நிலையில் மூவரும் நண்பர்களாகினர். ரம்யா அப்படியொன்றும் அழகாகயில்லை எப்படியோ! சிவாவின் மனதில் இடம் பிடித்துவிட மறுநாள் மறுநாளென்ற பழக்கம் அவள் மீது அவனை அதிக அன்புடையவனாக மாற்றியது.
 ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருங்கிய உறவு நாளடைவில் என்னவாகும் நமக்குத்தான் தெரியுமல்லவா? வழக்கமான காதலாக மாறியது. சிவா அவளின் விழிகளின் பிடியில் மாட்டிக்கொண்டான். எப்போது பார்த்தாலும் இவளது சிந்தனையாக்கத்தின் பெயரிலேயே! வலம் வந்து கொண்டிருந்தான். ஒரு நாள் தன் தோழனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் அரங்கேறயிருக்க விழாவிலிருந்த இருவரும் ஒருபுறம் ஒதுங்கினர். மனம் விட்டு பேசிச்சிரிக்கத் துவங்கினர். காதலின் உச்சத்தில் நின்றிருந்த சிவா, தான் அவள் மீது கொண்ட காதலை வெளிப்படையாக சொல்லிவிட அமைதியானவள். சிவாவின் அருகில் வந்து நின்று, நீங்க தம்மடிப்பிங்களா? தண்ணியடிப்பிங்களா? பொண்ணுங்கள கேவலமான பார்வையாள பார்பிங்களா? நீங்க யாரையாதும் காதலிச்சிருக்கிங்களா? உங்ளுக்கு வேறேதும் பழக்கமிருக்கா? உங்க இலட்சியமென்ன? உங்க வீட்டுல எத்தனைபேர்? என்ன எப்பிடி உங்களுக்குப் பிடிச்சது? என்று கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி சிவாவின் மொத்தப் விபரப் பட்டியலையும் தன் வசப்படுத்திக் கொண்டாள்.
இவனும் உள்ளதை உள்ளபடிச்சொல்லும் கிளிப்பிள்ளையாய் உன்மைகளையெல்லாம் சொல்லிவிட்டான். விழா முடிந்தது அனைவரும் களைந்து சென்றனர். விடுதிக்கு நேரமானதென்று, இவளின் தோழிகளும் அவசர அவசரமாக கிழம்பிக்கொண்டிருந்தனர். அந்த நிமிடங்களில் அவளது அலைப்பேசியை எடுத்து தன் அலைபேசிக்கு அழைப்பு கொடுத்து தன் எண்களை அவளது அலைபேசியிலும் அவளையே பதிவு செய்ய வைத்திருந்தான். கல்லூரிப்பருவத்தை தாண்டியிருக்கும் இவள் வெளியுலகம் தெரியாமலிருப்பாளென்ற மயக்கத்திலிருந்தவனுக்கு உனைவிட நான் விவரமானவள் என்று நிரூபணம் செய்தாள். அன்று இரவு இருவருக்கும் நடைபெற்ற அலைபேசிக் குறுஞ்செய்திகளின் பறிமாற்றங்களின் மூலம்.
வா டா, போ டா, மாங்கா, எறும, கொரங்கு, கருவா என்று திட்டிப்பேசிய வார்த்தைகள் சிவாவின் நெஞ்சில் ரம்யாவை மிகவும் ஆழப்படுத்தியது, இவனும் வாடி, போடி, லூசு, மெண்டல், கலுத, குரங்கு, என்று பேசிய வார்த்தைகள் ரம்யாவின் அடி நெஞ்சையும் சற்று அலுத்தியிருந்தது. மறு நாளென்ற சந்திப்பில் இருவருக்குள்ளும் அதிகமான நெருக்கமிருந்தது. வகுப்பறை முடிந்து பொழுது மயங்கிய நிலையில் மரங்களின் இருளுக்குள் இருவரின் தனிமையான சந்திப்பும் படர்ந்திருந்தது. இருவரையும் விட்டு கொஞ்ச தூர இடைவெளியில் தோழியின் காத்திருப்பு நீண்டிருந்தது. எதையோ பேசவந்த ரம்யா எனைப்பற்றி உனக்கு முழுசாத் தெரியுமா? என்று ஆரம்பித்தாள்.
 ம்சொல்லு தெரிஞ்சுக்கிறேன், என்றதும் நான் காதல் தோல்வியானவள். என் கல்லூரிக் காலத்தில் மணி என்றொருவன் எனைக் காதலித்தான் நானும் காதலித்தேன் எனக்கும் அவனுக்கும் சாதி ஒரு பெரிய இடைவெளியாக இருந்தது. அவனுக்கு திடீரென்று அரசாங்க வேலை கிடைத்துவிட அவங்க மாமா மகள கட்டிக்கிட்டு என்ன  ஏமாத்திட்டான், அதிலிருந்து எனக்கு காதலையும் பிடிக்காது பசங்களையும் பிடிக்காது, காதல் ஒரு தீராத வலி நமக்கு காதல் வேண்டாமென்று தேவையற்ற வார்த்தைகளை வீசி சிவாவின் இதயத்தில் ஒரு பூகம்பத்தை உருவாக்கினாள், அது அவனை அந்த அளவிற்கெல்லாம் சேதாரப்படுத்திடவில்லை. அவளை அதிகமாக நேசித்ததாலோ என்னவோ! மற்றவைகள் ஒரு பொருட்டாக தெரியவில்லை. தேவையில்லாத விசயத்தைப்பேசி இருக்கின்ற நேரத்தை வீணடிக்காத ரம்யா! என்று கடிந்து நகர்ந்து நீ மட்டும் எனக்கு போதும். இதற்குமேல எதுவும் பேசாதே! என்று அவளின் உதடுகளைத் தன் கறத்தால் மயிலிரகு போல வருடினான்.
பிடிகொடுத்து நின்றவள் சற்று நகர்ந்து. காதல்தோல்வியான இரண்டு மாதத்தில் இன்னொருவனைக் காதலிக்க நான் என்னா விபச்சாரியா? என்ற சப்தமான சொல் அவள் கண்ணத்திற்கு பலீர் என்ற ஒரு அரையை பரிசாய்ப்பெற்றுவிட ஆக்ரோசத்தில் கண்ணீர் சிந்தி நிற்க, நீ உனை இப்படி கேவலமான வார்த்தைகளோடு ஒப்பிடுவதை என்னால் ஏற்க முடியாது. என்னைப் புருஞ்சுக்கெடி என்று அவளின் கரம் பற்றி நெருங்க சிறிது நேரத்தில் சாந்தமானால் இருண்டிருந்த பொழுதில் காலதாமதம் அதிகமானதால் அந்த இடத்திற்கு விடுமுறையளித்து விட்டு விடுதிக்கு புறப்பட தயாராகினர்.
அந்த நொடிகளில் இருவரின் கரங்களும் ஒன்றோடொன்றாய் பின்னியிருந்தது. தன் தோழியின் பயணம் முன்னோக்கிய மரஇருளில் தொலைந்திருக்க அந்த நொடிகளில் இணைந்த இருவரின் உதடுகளும் அனல் பறக்க ஒரு அழகான உதட்டு முத்தத்தை சத்தமின்றி நடந்த யுத்தத்தில் பரிமாற்றம் செய்து  கொண்டது. தோழியின் பார்வையில் படாதவர்களாய் விரைந்து வெளிச்சத்திற்கு சென்று விடுதிக்கு கிளம்பினர்.
இவனுக்கு இது தான் முதலனுபவம் என்பதாலோ! என்னவோ! எதையோ துளைத்தவனாக அதையேத்தேடித் தேடி அலைபவனாக அவள் துறையையே சுற்றிச்சுற்றி வந்தான். அவளே இந்த உலகில் உத்தமி பத்தினி என்றுதினம் தினம் இரவில் கவிதைகளை படைக்கும் கவிஞனாக கவிதைகளை வைத்து பாடல் படைக்கும் காவியனாக அவள் சிந்தனையின் ஆக்கத்தில் சிக்கிக்கொண்டு பல இரவுகளில் தூக்கத்தைத் துளைத்தவனாய் விடுதியின் மாடிப்பகுதிகளில் வலம் வந்து கொண்டும் நிலாவைப்பார்த்து சிரித்துக்கொண்டும் ரசித்துக் கொண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல அங்குமங்குமாய் சுற்றிச் சுற்றித் திரிந்தான். அலைபேசிப் பறிமாற்ற குறுஞ்செய்திகளில் மற்றும் பேச்சு வார்த்தைகளில் நடந்த ஏதோ ஒரு முரண்பாடு இருவரின் மனங்களையும் பாதித்திருந்தது.
மறுநாள் பார்த்துப்பேசியதில் இருமனங்களும் ஒன்றுபட்டு விட்டன. தினம் தினம் காலை, மதியம், மாலை இரவென்று அலைபேசியில் இருவரும் பேசுவது வழக்கமான நிகழ்வாகியிருந்தது. ஒருநாள் பேசும்போது தன் காதலை அவளிடம் ஆழப்படுத்தினான். நீ முதல்ல வாழக்கையில உனக்கின்னு ஒரு இடம்தேடு அப்புறமா வந்து எங்கவீட்டுல பொண்ணுகேலு என்னைய எங்கவீட்டுல ரொம்ப செல்லமா வச்சுக்கிருவாங்க நான் அழுதா அம்மாக்குப் பிடிக்காது. அதனால உனக்கு கட்டித்தருவாங்க இப்ப நீ படிக்கிற வேலையப்பாரு நானும் படிக்கிறேன். சேரும் போது சேர்வம். மனசப்போட்டு கொலப்பிக்கிறாத நல்லா சாப்பிடு, நல்லா தூங்கு, சந்தோசமாயிரு என்று தெளிவாகப் ஆறுதலாகப் பேசினாள்.
அதோடு தன் குடும்பம் பற்றிய முழு தகவல்களையும் சிவாவிடம் கொடுத்துவிட்டாள். இவர்களின் காதலுக்கான ஒவ்வொரு நாளும் முதிர்ந்துகொண்டே செல்லச்செல்ல அலைபேசிப் பேச்சுக்களும் குறுஞ்செய்தி பறிமாற்றங்களும் இவர்களுக்குள் எல்லையற்றதாய் விரிந்து கிடந்தன.
எதிர் காலத்தில் வரவிருக்கும் திருமண வாழ்க்கை இருவருக்குமான தனிமை இரவுகள் குழந்தைகள் குறிக்கோள்கள் சொந்த பந்தங்கள் புதிய உறவுகள், என்று பல சிந்தனைகளோடு பேசிப்பழகிய வார்த்தைகள் இவர்களைக் ஒவ்வொரு நாள் இரவும் கணவன் மனைவியாக மகிழ்விக்க மறந்ததில்லை. இப்படியே இவர்களது பயணங்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்த பொழுதுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவிபோலிருக்கும் அறவாளியொருவன் அவளை நோட்டமிட்டுக் கொண்டும் ஜாடை மாடையாகப்பேசிச் சிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு சில நாட்களில் இவள் சிவாவிடமும் சொல்லியிருக்கிறாள் என்னையொருவன் பார்க்கிறான் சிரிக்கிறான் அவனா வந்து பேசுறான் ஆனா அவன் உன்னவிட அழகாகயிருக்கிறான்.
அவனை எனக்கு பிடிச்சிருக்கு என்று பேசியபோது நம்மைக் கடுபேத்தி பார்ப்பதில் பாவம் அவளுக்கு ஏதோ சந்தோசமென்று அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டான். அதன் பின்விளைவுதான் என்னவோ நாட்கள் கடந்து செல்லச் செல்ல பாலாவை நேசிக்கும் ரம்யாவாய் இவள் மாறிவந்தாள். இவளது நடத்தையில் அதிக மாற்றங்கள் தெரிந்தது சிவாவோடு அலைபேசிக் குறுஞ்செய்தி பறிமாற்றத்தில் நாட்டமில்லாதவலானாள் சிவா இவள் அலைபேசிக்கு அவ்வப்போது முயற்சித்தாள் பிசியாகயிருப்பாள். அதைக்கேட்டால் நீ எனை சந்தேகப்படுகிறாயா? என்று திசைதிருப்புவாள். கோவமாகப் பேசினால் நீ என்மீது கோவப்படுகிறாய் என்றும் நீ என்னை நம்பவில்லையென்றும் எனக்கு நீ வேண்டாம் என்றும் எரிந்து விழுவாள்.
சில நாட்களில் சிவா உனக்கும் எனக்கும் செட் ஆகாது. அதனால நம்ம இப்பயே பிரிஞ்சிரலாம் இனிமேல் நண்பர்களா இருப்போமென்று கடுப்பேத்தி வந்தாள். அறையில் தனியாகயிருக்கும்போது சிவாவோடு அலைபேசியில் நன்றாகப் பேசுவாள் அதே நேரத்தில் அவள் அறைத்தோழி வந்ததும் நீ ஏன் இப்ப போன்பண்ணி என்னத் தொல்ல பண்ணுற போன வையிஎன்று கடிந்து பேசி தோழியிடம் அவனைக் கெட்டவனாக்கி அவளை நல்வலாக்கி நாடகமாடுவாள். ஒவ்வொரு நாளுமாய்ப் பின்தொடர்ந்த பாலாவின் செயல்கள் இவளை ஈசியாக அவன் வசமிலுத்திருந்தது ஆகவே சிவாவைவிட்டுப் பிரிய வேண்டுமென்று முடிவெடுத்தாள். சிவாவின் அலைபேசி பரிமாற்றத்திற்கு பதில்தர மறுத்து வந்தாள்.
தொடரும் போததெல்லாம் பேசாதவளாய் அழைப்புகளைத் தவிர்த்து வந்தாள். என்னை மறந்திடு எனக்கு உன்னைப் பிடிக்கவில்லையென்றும் அலைபேசிக்குக் கடிதாசிகள் அனுப்பி வந்தாள். என்னசெய்வதென்றே புரியாத புதிராய் மூலையைப்போட்டு குழப்பிக்கொண்டிருந்த சிவா கிருக்குப்பிடித்தவன் போல அலைந்து கொண்டிருந்தான். இவளின் ஏக்கமோ ஒவ்வொரு நாளும் பாலாவைத் தொடர்ந்து கொண்டிருந்தது அந்தச்சூழலில் பாலா இன்னொரு பெண்ணை விரும்புகிறான் என்பது இவளுக்குத் தெரியாது. சிவாவின் அலைபேசி எண்கள் இவள் அலைபேசியில் பதிவானதும் அதிக எரிச்சலுடனே மூஞ்சியைச் சுழித்துக் கொள்வாள் சிவாவும் சளைக்காதவனாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தான் அதற்கு பதில் ஏதும் வராவிட்டாலும் அவள் தூங்கியிருப்பாள் என்ற நிம்மதியுடனே வாழ்ந்து வந்தான்.
அவளுடன் பேச முற்படும்போதெல்லாம் அதற்கான சந்தர்ப்பத்தை அவள் தரவில்லை. இவனது மனதுக்குள் உருத்ததிக் கொண்டிருந்த ஒரே விசயம் ரம்யாவைத் தொட்டுப்பேசி பழகிவிட்டோமே! உதடுகளைத் தீண்டிவிட்டோமே! முத்தப்பரிமாற்ற யுத்தம் செய்து விட்டோமே! இனி விலகிச்சென்றால் தவறென்ற இரக்க மனப்பான்மை. மேலும் நாளைய இந்த சமுதாயம்  ஏமாற்றுக்காரனென்ற பொய்யான பட்டத்தோடு பார்த்துவிடுமோ என்ற பயம், இந்த உண்மையான தன்மைதான் இவனுக்கு அவளிடமிருந்து அடிக்கடி அதிகப்படியான அசிங்கங்களைத் தேடிக்கொடுத்தது.
சிவா விட்டு விலகும் பக்குவத்திலில்லை ரம்யாக்கு அந்த முத்தம் தொட்டுப்பேசிய பழக்கம் எல்லாம் அவ்வளவு பெரிய விசயமாகத் தெரியவில்லை. இவனை மறந்து பாலாவின் பொய்யான பார்வைக்கு மயங்கி அதிகமாக வழிந்து நெலிந்து விழுந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் சிவா நீதான் எனக்கு வேண்டுமென்று அலைபேசியில் அடம் பிடித்துப்பேச அவளோ எனக்கு நீ வேண்டாம் எனக்கு என் குடும்பம் போதும். என்னத் தொல்ல பண்ணாத தயவுசெய்து மறந்திரு விலகிப்போயிறு சென்னாக்கேழு என்றதும் இல்ல ரம்யா நான் உன்னத் தொட்டுப்பேசிப்பழகிட்டு முத்தமிட்டுட்டு இனிமேல் விலகிப்போனா அது பாவம் அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்றதும்.
அதெல்லாம் எனக்கு பெரிய விசயமாத் தெரியல சரியா புருஞ்சுக்கோ உன் மேல எனக்கு விருப்பமில்ல நீ உன் வேலையப் பாத்துட்டுப்போ என் வாழ்க்கைய எனக்குப் பாத்துக்கிற தெரியும் என்று தூக்கி எரிந்து பேசினாள். சரி ரம்யா உனக்கு என்ன ஏன்? பிடிக்கல சொல்லு இனி உனக்கு பிடிக்கிற மாதிரி இருக்கிறேன். என்றதும் அதையும் ஏற்காமல். அடுத்தவங்களுக்காக பச்சவந்தி மாதிரி மாறுறதும்  எனக்குப் பிடிக்காது. அப்புறம் என்னதா பன்னச் சொல்லுற. பிடிக்கலனா பிடிக்கல அதுக்கு என்னால காரணமெல்லாம் சொல்ல முடியாது தயவு செய்து போயிறு என்றவள். நீ அவசரப்படுற! கோவப்படுற! சந்தேகப்படுற! அதனால நீ எனக்கு வேண்டாம் போதுமா? என்றாள்.
நீ என்னா வேணும்னாலும் சொல்லு ஆனா என்ன வேனான்னு மட்டும் சொல்லாத ரம்யா என்றவுடனே அவள் எனக்கு ஒண்ணு செய்யிறயா என்றாள் சொல்லு செய்றேன் என்றதும் ஒண்ணு என்ன மறந்திரு இல்லனா எங்கயாவதும் போயி செத்துரு. இல்ல ரம்யா நான் வாழனும், எனக்கு நிறைய இலட்சயங்கள் இருக்கு சாதிக்கனும். இலட்சியம் வச்சுருக்கவன் ஏன்டா காதலிக்குற? காதல்ன்ற பேருல நீயும் அசிங்கப்பட்டு நானும் அசிங்கப்பட்டு எதுக்கு இந்த கேவலப்பட்ட பொலப்பு நமக்கு தேவையா? வேனாம் விட்டுறு எப்பயும் சந்தோசமாயிரு
நான் உன்ன மறந்துட்டேன் நீ என்ன மறந்திரு படுச்சு முன்னேறுற வேலையப்பாரு என்றாள். சிவாவின் அந்த ஏமாற்றமான பொழுதுகள் முடிந்துவிட இவளின் ஏக்கமென்னவோ பாலாவின் வசமாக மாட்டியிருந்தது. தொடர்ந்து இரண்டு நாள் முடிந்த நிலையில் அலைபேசியில் தொடர்ந்தான் ம்சொல்லுபாஎன்று எந்தவிதமான கவளையுமின்றி பேசினாள் ஆனால் பாதியிறந்த உயிராய் இவன்.
என்ன ரம்யா உன்முடிவுல எதும் மாற்றமிருக்கா? என்னா மாற்றம் நான் தான் அப்பயே சொன்னனே நமக்கு காதலே வேனான்னு! நீ ஏதோ பேசுற ரம்யா ஆனா என்னால உன்ன மறக்க முடியல அப்ப ஒண்ணு பன்னலாம் நம்ம கடைசி வரைக்கும் நண்பர்களாயிருப்பமேஇல்ல ரம்யா நட்புன்ற உறவ கலங்கப்படுத்த நான்  விரும்பல எனப் பேசிக்கொண்டே இருந்தபோது நீ எனக்கு வேண்டுமென்று மறுபடியும் அழுத்த ஆரமிக்க எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு அவர்கிட்ட உன் நம்பர தரப்போறேன் நீ எதாயிருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கயென்று கூறிய பத்து நொடிகளில் பதிவானது ஒரு புதிய எண்ணின் வருகை இவனது அலைபேசியில் வருத்தமாகத்தான் இருந்தது வேறு வழியின்றி சொல்லுங்க யார் என்றான்.
நீங்க சிவாவா ஆமாநீங்க யார் சார்? நான் ரம்யாவுக்கு நிச்சயிக்கப் பட்டிருக்குற மாப்பிள்ளை பேசுறேன். ம்சொல்லுங்க சார்என்ன விசயம், நீங்க அவகிட்ட இனிமேல் பேசாதிங்க சார். பசங்க இந்த வயசுல இப்பிடித்தான் இருப்பாங்க நீங்க மட்டுமென்ன அதுக்கு விதிவிளக்கா? நான் கூட காதல் தோல்விதான். இனிதான் புது வாழ்கையத் தேடப்போறேன் அத நீங்க கெடுத்துறாதிங்க சார் என்ற மாப்பிள்ளையின் பாவமான வரிகளுக்கு பரிகாரமாய் சிவா. இல்ல சார் அவளப் பார்த்ததும் பிடிச்சிருந்தது. அதான் காதலச் சொன்னேன், நான் கேட்ட முதல் நாளே என்னக் கல்யாணம் பன்னிக்கிருவாயான்னு கேட்டா நானும் உடனே ஒத்துக்கிட்டேன். ஆனால் இந்த ரெண்டு மாத இடைவெளியில எனக்கும் அவளுக்கும் பிடிக்காத ஏதோ சில விசயங்கள் நடந்திருச்சுன்னு நெனக்கிறேன். அதான் அவ உங்ககிட்ட சொல்லிருக்கா. சரிங்க சார் அவளுக்குப் பிடிக்காத செயல நான் இனிமேல் செய்ய மாட்டேன் சார்.
அப்புறம் நீங்க என்னா வேலை பாக்குறிங்க நான் வாத்தியாராயிருக்கே சார் பரவாயில்லயே ஒரு முக்கியமான விசயம் சார் அவளுக்கு அவசரப்பட்டா பிடிக்காது கோவப்பட்டா பிடிக்காது சந்தேகப்பட்டா பிடிக்காது சிகரெட் ஒயின் எதுமே பிடிக்காது சார். சரிங்க சிவா எனக்கும் ஒரு தங்கச்சியிருக்காங்க எனக்கு அந்த மாதிரியான கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது.
நல்ல விசயம் தான் சார் நீங்க அவங்களுக்கு ஏத்த மாப்புளதான்போல உங்க பேச்சுலயே தெரியுது. வாழ்த்துக்கள் நான் இனிமேல் அவள தொந்தரவு பண்ண மாட்டேன் சார் என்று முடித்ததும். சிவா என்று ஆரமித்த சுரேஷ் நீங்க ஒரு தடவ அவகிட்ட இனி உன்னத் தொந்தரவு பண்ண மாட்டென்னு போன் பன்னி சொல்லிடருங்க. இல்லங்க பரவாயில்ல வேண்டாம். இல்ல சிவா நீங்க கடைசியா ஒரு தடவ பேசுங்க அப்பத்தான் உங்களுக்கும் மனசு நிம்மிதியாயிருக்கும் அவளும் என்ன நம்புவா,  ம்சரிங்க சார் பேசுறேன் உங்களுக்காக பேசுறேன். சிவாவின் அலைபேசி ரம்யாவிற்கு இணைப்புக்கொடுத்தது. ம்சொல்லுப்பாஎன்றாள், உன்ன கட்டிக்கிறபோர மாப்ள சார் என்கிட்ட பேசுனாரு  நல்லாதான் பேசுனாரு நல்லவர்தான் போல தெரியுது ரம்யா உன்ன நல்லபடியா வச்சுப் பாத்துக்குவார்ன்னு நெனக்கிறேன் வாழ்த்துக்கள்.
ஆனா ஒன்னுடி  நீ அவர்கிட்ட என் நம்பர் குடுத்து பேசச் சொன்னதுக்கு பேசாம எனக்கு கொஞ்சமோல மருந்த ஊத்திக் குடுத்து சாவடுச்சுருக்கலான்டிசரி எப்பிடியோபோஎனக்கென்னா?  நான் உன்ன நல்லபடியா வச்சுப் பாத்துக்கனும்ன்னு ஆசைபட்டேன். ஆனா நீ அந்த வாய்ப்ப எனக்கு தரல என்ன மாதிரியான இன்னொருத்தரால உனக்கு நல்ல வாழ்க்கை கெடக்குதுனா எனக்கு ரெம்ப சந்தோசம். இன்னையோட நான் உன்ன விட்டு விலகிக்கிறேன். சரி சிவா இனிமேல் எனக்கு நீ போன் மெசேஜ் எதும் பண்ணமாட்டலேசரி நான் போன வைக்கிறேன் பாய்ம்வைச்சுருப்பாஇப்பமட்டுமில்ல எப்பயுமேஎன்றதும் அழைப்பைத் துண்டித்து அலைபேசியைத் தூக்கி எரிய வேகமாக சுழன்று கொண்டிருந்த மன்விசிறியில் சிக்கிய அலைபேசி சிம்மை மட்டும் பத்திரப்படுத்திக் கொடுத்து விட்டு உடைந்து தன் ஆயுலை முடித்துக் கொண்டது. தன்னவளை மட்டுமின்றி தன் அலைபேசியையும் பறிகொடுத்துவிட்டு தான் தனி மரமென்று உணர்ந்தவன் அன்றைய தினம் தன் வாழ்கையையே துளைத்தவன் போல தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான்.
கடிகாரமுள் இரவு எட்டு மணியைத் தொட்டு நின்றது அவனது எதிர்பார்ப்பைப் போலவே மின்சாரம் தடர் பட்டது அறையில் அதிக புழுக்கமாக இருக்க காற்று வாங்கலாமென்று வடுதிக்கு முன்னுள்ள கல்லிருக்கையைத் தேடி பெயர்ந்தான். அதனருகிலிருந்த கூட்டமொன்று ரம்யா என்ற பெயரை இரண்டு மூன்று முறை இரகியமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. யாரென்று கவனித்து நெருங்கினால் அது பாலாவின் நண்பர்கள் அவனோடு சேர்ந்திருந்தது. சிவாவின் நண்பர்கள் சிவா அவர்களோடு அமர்ந்தான். நாளைக்கு எக்ஸாம் ஆனா என் கிளாஸ்மென்ட் பொன்னு போன் பன்னுனா எடுக்க மாட்றாடா சக்தி என்றதும் எடுக்காதவளுக்கு ஏன்டா போன் பண்ற அது எலக்டிவ் பேப்பர்தான அப்றம் என்னடா பக்கத்துக்கிளாஸ் ரம்யாக்கு பண்ணு. எப்பாஅவளுக்கா வேணான்டா சாமி அவ மொக்கப்பீசுசப்ப பிகருடா அவ ஓவரா சீன்போடுவா. நான் எக்ஸாம் எழுதாட்டியும் பரவாயில்ல அவகிட்ட கேக்க மாட்டேன். இப்ப அதாடா முக்கியம் சும்மா கேழுடா.
நண்பா ரம்யாவாயாருங்க அது என்றதும் விவரம் சொல்ல அவளே தான். ஆமா நீ ஏன்டா இவ்லோ உணர்ச்சிவசப்படுற என்று தோளைத்தட்டிய சக்தியிடம் அவள உண்மையா காதலிச்சேன் சக்தி ஆனா அவ என்ன புருங்சுக்கிறள அவளுக்கு நிச்சயமான மாப்ளகிட்ட என் நம்பரக்குடுத்து போன் பன்னி பேசச் சொல்லிருக்கா அவரும் பேசுனாரு எல்லாம் முடுஞ்சு போச்சு சக்தி இப்ப அவள மறக்கமுடியல ஆனா நான் சீக்கிறமே மறந்திருவேன். என்றதும் அருகிலிருந்த பிரபு கெக்கெக்கெக்கென்று சிரித்து விட்டான் என்னடா பிரபு இப்பிடி சிரிக்கிற? அப்புறம் அவலாம் ஒரு ஆளா? ச்செய் அவளுக்கு ஏன்டா நீ இவ்லோ பீல் பண்ணி டயத்த வேஸ்ட் பண்ணுற முதல அவ ஒரு பொன்னாடா வேற ஏதாதும் பேசுடா இத வெளிய சொல்லாத மத்தவங்க உன்னத்தான் கேவலமா நெனப்பாங்க எனச் சடைத்தான்.
வேற என்னத்தப் பேச என்று தலை குனிந்தவனைப்பார்த்த சக்தி ஏன்டா மாப்ள நீ இவ்லோ பீல் பன்னிட்டு இருக்க அவளப்பத்தி உனக்குத் சரியா தெரியல ரம்யா எங்க பக்கத்து டிபார்ட்மெண்ட்தான்டா. அவ பெரிய ஒன்னா நம்பர் நாடகக்காரி. இவர்களின் வார்த்தைகளை நம்பி செவி சாயக்காதவனாகவே அமர்ந்திருந்த சிவா. உடனே சக்தி பாலாவைக் கூப்பிட்டு அவளுக்கு போன் பன்னி எக்ஸாம் எப்பண்ணு கேலுடா. அப்பிடி இல்லனா எக்ஸாம் மெட்டீரியல் இருக்கான்னு கேலுடா பாலாஅவ எப்பிடிப் பட்டவன்னு இப்பக்கண்டு பிடிக்கலாம். சரி செக்பண்ணித்தான் பாப்பமே! ஏற்கனவே தன் தோழியிடம் வாங்கி வைத்திருந்த ரம்யாவின் எண்ணிற்கு பாலா அழைத்தான். ஒன்னு ரெண்டு மூனு என்ற நான்காவது ரிங்கில் ஹலோ என்றாள் நான் பாலா பேசுறேன் பாம் சொல்லுப்பாஎலக்டிவ் எக்ஸாம் எப்பன்னு தெரிலய அதான் உனக்கு கால் பன்னுனேன். நாளைமறு நாள் தான் பாஅப்றம் மெட்டீரியல் எதும் உன்கிட்ட இருக்காம் இருக்குபா ஆமா உனக்கு என் நம்பர் யார் குடுத்தது.
என் கிளாஸ்மென்ட் சித்ரா பொண்ணு குடுத்தா சரிப்பா தேங்க்ஸ் வைக்கிறேன். என்று இணைப்பை துண்டித்தான். உடனே அவளிடமிருந்து வந்து சேர்ந்தது நாளை மறுநாள் எக்ஸாம் என்கிட்ட மெட்டீரியல் இருக்கு வேனும்னா சொல்லு வாங்கிக்கோ கே வாஎன்ற வரிகளைக் கொண்ட குறுஞ்செய்திடே சிவா நான் சொல்லள எவ்லோ பாஸ்ட்டா இருக்கா பாத்தயா? நீ ரிப்ளே பண்ணு பாலா என்றான். சக்தி அவளுக்கு எதுக்கு மெசேஜ வேஸ்ட் பண்ணனும் ஏற்கனவே எனக்கு இப்ப எழுபத்தி அஞ்சு பைசா வேஸ்ட்டா போய்டுச்சு நான் என் லவ்வர்கிட்ட பேசனும் என்றதும் விடுடா மாப்பள இன்னிக்கு ஒரு நாளைக்கு இவள ஓட்டுவம் என்று போனை வாங்கிய சக்தி மெசேஜில் பாலா போல பேசி அவளைத் தன் வசமாய் மடக்கிப் பிடித்தான். அவளும் பாலாவுடன் பேசிக்கொண்டிருப்பதாக எண்ணி கொளைந்து கொளைந்து சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
சிவாவின் காதலைத்தூக்கி எரிந்த இரண்டு நாட்களிலேயே பாலாவின் காதலுக்கு தயாராகி இருக்கிறாள். சிவா இவளை அழகி பத்தினி பேரழகி என்ரெல்லாம் எழுத்து மொழியில் கவிதையாக படைத்துக்  கொடுத்திருந்த பட்டங்கள். இவளை இவளுக்குள் மிகுந்த அழகியாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பாலாவுக்கோ இவள்மீது துளியளவும் விருப்பம் கிடையாது. இவளது மெசேஜ் பாலா போனைத் தொட்டதும். சக்தியின் கையிக்கு வந்துவிடும். தன் நண்பர்களோடு சேர்ந்திருந்த அந்த இரவில்தான் ரம்யாவின் முழு சுயரூபம் சிவாவிற்கு தெரிந்தது.
இருந்தாலும் அவளா! இப்படி என்ற ஆச்சர்யத்தில் பனிக்கட்டியில் விழுந்த தவளையாய் உரைந்துபோய்  அமர்ந்திருந்தான். பாலாவிற்கு அவள் திருடன் என்ற பட்டப் பெயர் வைத்தாள். சொல்லுடா திருடா! சாப்பிட்டயாடா திருடா! என்னடா திருடா பண்ணுற!
இப்படியெல்லாம் அடிக்கடி மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தாள். அதிமாக வழியுவாள் இவனோ கண்டுகொள்வதில்லை இவன் சார்பாக சக்திதான் மெசேஜ் பன்னி எல்லாரிடமும் சொல்லி சிரித்துக்கொண்டும் பதிலனிப்பிக் கொண்டுமிருப்பான். ஆனால் ஒரு மெசேஜ் கூட இவனாக கேட்க மாட்டான். சிவா எப்படி இவளிடம் ஓவராக வழிந்தானோ அதைத் தாண்டி இவள் பாலா என்று நினைத்து சக்தியிடம் வழிந்து கொண்டிருந்தாள்.
சில நாட்களில் பாலாவின் விவரங்களையெல்லாம் தன் வசப்படுத்திக் கொண்டாள் ஆனால் அவன் தந்த எல்லாத் தகவலும் தவறானதென்று அவளுக்குத் தெரியாது. பாலா அவளைப்பற்றி தெரிந்துகொள்ள நாட்டமில்லாதவனாக இருந்தான். அப்படியிருந்தும் என்னைப்பத்தி நீ கேக்கவே மாட்ட யாடா? கேலுடா திருடா! என்று குடைவாள் இவனும் விருப்பமின்றி சரிச் சொல்லு சொல்லு என்று அவளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டான். பலநேரங்களில் இரவு பதினோறு மணி பணிரெண்டு மணியென்று போன் பன்னுவாள் அப்போது மட்டும் தவறாமல் பாலா எடுத்துப்பேசுவான். சக்தியில்லாத நேரங்களில் பாலாவும் மெசேஜ் சேட்டிங் பண்ணுவான் எல்லாத்தையும் மறைக்காமல் நண்பர்களிடம் சொல்லிவிடுவான் அதற்கேற்றவாறு சக்தியும் புரிந்து கொண்டு மெசேஜ் பன்னுவான். ஒரு நாள் சிவா காதலச் சொல்லுடா என்னா பன்றான்னு பாப்பம் என்றதும் சக்தியும் காதலைச் சொன்னான்.
எனக்கு இப்ப ஒரு பெரிய பிரச்சனயிருக்கு நீ எனக்கு கால் பண்ணு என்றாள், உனக்குப்போய் எவனாவது போன் காச வேஷ்ட் பன்னுவானா என்று எண்ணிக் கொண்டு எதும் பேசாமலிருந்ததும் உடனே கால்பன்னி எரும, கொரங்கு கால் பண்ணுன்னா பன்ன மாட்டயா என்று கடிந்தவள். ஒருத்தன் எனக்கு கால் பண்ணி தொந்தரவு பண்ணுனான் அவன எங்க மச்சான்கிட்ட சொல்லி என்னக் கல்யாணம் பன்னப்போறவர் மாதிரி பேசச் சொன்னேன். எங்க மச்சான் அப்பிடியே பேசவும் அவனும் நம்பிட்டான். இப்ப அவனால எந்த பிரச்சனையும் இல்ல என்றாள். பக்கதிதிலிருந்த சிவாவும் பேரக்கேழு பாலா என்றதும் அவன் யாரு பேரச்சொல்லு என்றான். அதலாம் வேனாம் என்று சமாளித்தாள். அப்ப என்கிட்ட சொல்ல மாட்டயா? அப்பவிடு என்று இணைப்பைத் துண்டித்தான். நீ என் கூட சண்டைபோடாம சமத்தியா! என் செல்லமா என் திருடனா! எப்பயுமே! ஏங்கூடயே இருக்கனும். ஓக் கே வாஎன்று மெசேஜ் அனுப்பி சமாளித்து இரவுப் பனிரெண்டு மணிக்கு குட் நைட் சொல்லி முடித்தாள். மறுநாள் சக்தி அவளுக்கு மெசேஜ் அனுப்பவில்லையென்றதும். டே திருடா! மெசேஜ் பண்ணுடா நான் உன் மெசேஜ்க்குதான்டா காலையிலயிருந்து வெயிட் பண்ணுறேன் மெசேஜ் பண்ணுடா என்று நச்சரித்தவள். நான் எவன்கிட்டயுமே! இப்பிடி கெஞ்சுனது இல்லடா! ப்லீஸ்டா! பேசுடா! பேசுடா! என்று உருகி வழிந்து கொண்டிருந்தாள்.
நான்கைந்து மெசேஜ் வேக வேகமாக வந்ததும் என்னடா சிவா உன் உண்மைக் காதலியப் பாத்தயா டா? எப்பிடி வழியுறான்னு வழிய வைக்கனுன்டா அதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்குடா மாப்ள நீ ஏன்டா அவகிட்ட உண்மையாயிருந்த உன்ன மாதிரி பசங்களுக்கெல்லாம் இப்பிடித்தான்டா நடக்குமென்ற சொன்ன சக்தி சிரிக்கவும் நான் எதுக்கு இவளக்காதலிச்சேன் ஒன்னுமே புரியலயே என்று ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருந்தான் சிவா. மறு நாள் விடிந்தது டீ சாப்பிட்டயாடா? என்று ஆரமித்தவள் உன்னப் பாக்கனும் பேசனும் என்று பாலாவை முழுவதுமாக தன் வசப்படுத்தும் விதமாகப் பேசினாள். இதற்குமேல் இவளிடம் பேசுவது தன் காதலிக்கு செய்கின்ற துரோகமென்று உணர்ந்த பாலா இவளிடம் இனி அதிகமாகப் பேசக்கூடாதென்று முடிவெடுத்தான். அலைபேசி தகவல் பரிமாற்றத்தில் அவள் கேட்கும் விசயங்களுக்கெல்லாம் பதில்பேசாத ஊமையாகவே இருந்தான். முன் தினம் இவன் நினைவில் தூக்கத்தைத் துளைத்த இவளும் அதிக மன வருத்தத்திற்கு ஆழாக்கப் பட்டிருந்தாள் அறைக்குள்ளேயே இருந்தால் மனதிற்கு ஒரு மாதிரியாகயிருப்பதை உணர்ந்தவள்.
தன் தோழியின் துணையோடு நூலகத்திற்கு செல்ல தயாராகி நடை பாதையில் நகர்ந்தபோது எதிர்பாராத விதமாய் பாலாவின் வருகை அங்கு பதிவாகியிருந்தது அவனோடு பேசுவதற்கு ஆவலோடுயிருந்தவள். தன் அலைபேசியிலிருந்து பாலா உன்னப்பாத்துட்டே நீ நான் சொல்ற இடத்துக்குவா நான் உன்கிட்ட தனியாப் பேசனும் என்றதும் என்னசெய்வதென்று புரியாத பாலா திகைத்தான். சரி இடம் சொல்லு வரேன். நூலகத்தின் இடதுபுற ஆழமர நிழலுக்கு வா என்றதும் விரைந்து வந்தான். ரம்யா மிகுந்த எதிர்பார்ப்போடு நின்றிருந்தாள், இருவரும் இன்றுதான் நேரில் சந்தித்துப் பேசுகின்றனர். பாலா நைட்டெல்லாம் நான் உன்னால தூங்கவேயில்லடா எனக்கு நாளைக்கு எக்ஸாம் வேறயிருக்கு ஏன்டா என்கிட்ட பேசமாட்டுற என்ன உனக்கு பிடிக்கலயா? சொல்லுடா என்று தனை நெருங்கியவளை சற்று வலகியே நின்றவன்.
ஸாரிங்க உங்ககிட்ட நான் பிரண்டாத்தான் பேசுனேன் ஆனால் நீங்கதா தப்பா எடுத்திட்டீங்க. நான் லவ்ப்பண்ணுறேங்க அவ பேரு வனிதாங்க இனிமேல் எனக்கு மெசேஜ் கால் எதும் பன்னாதிங்க என்று நாகரீகமாக சொல்லி முடித்ததும். அப்புறம் ஏன்டா என்கிட்ட லவ்வச் சொன்ன முத்தம் கேட்ட நீ எனக்கு வேனுன்டா பிலீஷ்டா என்று அழுதவள். யாரு பாலா அவ என்னவிட அவ்ளோ அழகாவா இருப்பாளா? நீ என்னா சொன்னாலும் கேக்குறேன் பாலா என் காதல ஏத்துக்க பாலா என்று பக்கம் வந்ததும். ஸாரிங்க எனக்கு நேரம்மில்ல என் பிரண்டு வெய்ட் பண்ணுறான். இந்த விசயத்த மறந்துருங்க என்று மூஞ்சியைச் சுழுச்சு சைக்கிலிலேரி வேகமாகச் சென்றான்.

No comments:

Post a Comment