Wednesday, 30 March 2016

மனம் போன பாதை




         கைகளை வீசி வேகவேகமாக எட்டுவைத்து நடக்கும்போது காலில் படிந்திருந்த அழுக்கைத்தாண்டி ஒரு பதமான கருவேலம்முள் குத்திவிட இஸ்... என்று ஒரு நிமிடம் நின்று உடலை வளைத்து சட்டைத்துணி கசங்க முள்ளை பிடுங்கி தூர எரிந்துவிட இரத்தம் கசிந்தது. பாத்துடா தியாகு என்று காலைப்பிடித்து வெள்ளைக்காகிதத்தில் பார்த்திபன் துடைத்துவிட்டான். நடடா மாப்பள, வலிக்குதாடா மாப்ள? இல்லடா இதலாம் ஒரு முள்ளா இதவிட பெருசெல்லாம் பாத்துருச்சுடா இந்த காலு. ஒருதாங்கு இருதாங்கென்று எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தான்.
          ரெட்டஆலமர ஒத்தையடிப்பாதையை கடந்து சென்றபோது காட்டுமொச்சி செடிகளுக்கு மறைவில் பல நாட்களாய் நின்றிருந்த மஞ்சள்நிற உதயாவின் வீடு வந்துவிட்டது. படியில் நின்றிருந்த மணி வவ்வவ்என்று கூச்சலிட சும்மா இருடான்னு அதட்டினாள் உதயாவின் அம்மா. மச்சி கௌம்பிட்டயாடா? சீக்கிறம் வாடா போகலாம் நேத்தே அந்த வாத்தியாறு திட்டுனாறு என்றான் பார்த்திபன். அட சும்மா இருடா  மாப்ள நம்ம பாக்காத வாத்தியாரா? என்றான் உதயா. ஏலே வாங்கடா வேகமா போவம் ஏன்டா வெட்டிப்பேச்சு பேசுரிங்க என்று அதட்டினான் தியாகு? உடனே உதயா நான் ரெடி மச்சி வாங்க போகலாம் என விரைந்தான்.
        ஏலே ஒரு நிமிசம் நில்லுங்கடா வரேன் அதோ அங்க தெரியுதே கல்லிக்காடு அதுக்கு பக்கத்துல இருக்கிற சரலிமேட்டுலதா சதீஸ் வீடு அவனையும் ஒரு வார்த்த கூப்பிட்டு போகலாம் என்னடா பார்த்திபா? என்றான் உதயா. கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்ட தியாகு சரி கூப்பிட்டு வா என்றான். ஏலே சதீசு.. சதீசு.. சதீசு  சீக்கிறமா கௌம்பி வாடா காலேஜ்கு நேரமாச்சுஎன்ற உதயாவின் உன்னிப்பான குரல், சதீஸின் காதில் பட  விரைந்து ஓடி வந்து சேர்ந்தான். வாங்கடா போகலாமென்று நால்வரும் கிளம்பினர்.
           காட்டுப் பாதையைக் கடந்து ஊர் எல்லையைத் தொட்டபோது அரசுப்பேருந்தொன்று, வெகு தொலைவிலிருந்து வயதான கிழவன் எதிர் காற்றில் மிதிவண்டி ஓட்டி  வருவது போல, அங்கும் இங்குமாய் ஆடியசைந்துகொண்டு கரும்புகையை வெளியேற்றியபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது.
        பஸ் நிறுத்தம் வந்ததும் சின்னப்பூலாம்பட்டியெல்லாம் எறங்குங்க என்றது, நடத்துனரின் உரத்த சத்தம். சிலர் இறங்க பல பயணிகள் ஏறினர். ரெண்டு மூன்று நிருத்தத்தைக் கடந்த போது டிக்கட்டிக்கட்என்றது நெருங்கியது நடத்தனரின் முரட்டுக்குரல். நாங்க எல்லாரும் பஸ் பாஸ் சார் என்றான் சதீஸ், அது எங்களுக்கு தெரியும் சார் நீங்க மொதல உங்க பாஸ காமிங்க என்றது நடத்துனரின் சிவப்பு நிறம்படிந்திருந்த முட்டைக்கண்கள்.
        அன்றைய தினம் பார்த்திபன் பஸ் பாஸை மறந்து வீட்டுச்சாளரத்தில் வைத்துவிட்டு மறந்துபோய் வந்திருந்தான். பை முழுவதும் தேடினான் கிடைக்கவில்லை. ஆறாவது நிறுத்தத்தில் செக்கர் பஸ்சில் ஏறி எல்லாரும் டிக்கட்டெ காமிங்க என்றார்.
       அதற்கு முந்திய நிறுத்தத்தில் தான் நடத்துனரிடம் தகராறு செய்து இனிமேல் இந்த ஓட்டப் பஸ்சில் ஏறக்கூடாதென்று முடிவுகட்டி நாலுபேறும் இறங்கியிருந்தனர்.
           கல்லூரி வாசலைத்தொட்ட போது வழக்கத்துக்கு மாறாக  பத்து மணியைத் தாண்டி நின்றது கடிகாரமுள். தன் வகுப்பறையின் வாசலில் நின்றிறுந்த நால்வரையும் கண்டுகொள்ளாமல் வகுப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பேராசிரியர். வெளித்தோற்றத்தில் சற்று கருப்பாகவும் இலட்சனமாகவும் வாசலில் நின்றிருந்த சதீஸ் பயந்த குரலில் சார் உள்ளே வரலாமா? என்றான்.
          இவ்லோ நேரமாச்சு இங்க எங்கடா வாரிங்க? வீட்டுக்குப் போங்கடா! என்று கடிந்தார் பேராசிரியர். நான்கு பேரும் பொறுமையாய் நின்றிருந்தனர். ஆனால் அவர்களை அதிக நேரம் காக்க விடவில்லை. சாளரத்தின் ஓரம் வீற்றிருந்த சங்கீதா, சுகிர்தா, ஜெயா, சித்ரா, கவிதா, என நீண்டிருந்தோரின் எகத்தாளப் பார்வை. ஆவேசப்பட்டு உதயா வாங்கடா போகலாம் என்று கிளம்பினான்.
         டக்.. டக்..  டக்என்று கல்லூரிப் படிக்கட்டுகளை விட்டு கோவமாக இறங்கி பக்கத்திலிருந்த டீக்கடையை நோக்கி விரைந்தது கால்கள். கடன் சொல்லி டீ வாங்க நான்கு கையிலிருந்த சிகரெட்டுகளும் ஆத்திரத்தின் பிடியில் சிக்கி வேகமாக தன்னை அழித்துக்கொண்டிருந்தது. தங்கள் முன்பாய் நின்றிருந்த கடிகாரம் ஒரு மணிநேரத்தை விரைவாக கடத்திக்காட்ட அதைக்கண்ட பார்த்திபன் சரிடா வாங்க தமிழம்மா வகுப்புக்கு போகலாம் என அவசரப்பட்டான்.
          போடா கேனநம்மலதான் அந்த லூசு வாத்தியாறு வெளிய போகச் சொல்லி அசிங்கபடுத்துனாரே! இனி எப்பிடிடா அங்க போறது, நான் வரல நீங்க வேணும்னா போங்க என நாற்காலியிலிருந்து எழுந்தான் சதீஸ். சரிசரிஒக்காரு டா மச்சி, தோளைத்தட்டினான் தியாகு. இப்ப என்னடா பண்ணலாம் என்றான் உதயா. யோசித்த படியே நான்குபேரும். பரந்து விரிந்த கருப்பு தார்சாலையில் நடக்க ஆரம்பித்தனர்.
         தியாகு வாங்கடா பக்கத்து பூங்காவுக்கு போகலாம். ஆமடா மச்சி இது நல்ல யோசனை என முனு முனுத்தது சதீஸின் உதடுகள்நால்வரும் பூங்காவை நோக்கி நடந்தனர். பூங்காவின் நுழைவு வாயிலோரம்  தலையில்; வெள்ளைநிற குல்லா அணிந்த காவலாளிகள் போல ஐந்து கிழடுகள் அரைப்போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தனர். ஆழமரத்தின் விழுதுகள் தன் தலைக்கு மேலாய் தூரியாட அதற்கடியில் அமர்ந்திருந்த பெண் தன் சுருக்குப்பையில் பணத்தை எண்ணி எண்ணி கணக்கு பார்த்து போட்டுக்கொண்டிருந்தாள்.
          பார்ப்பதற்கு சிவந்த முகம், மெல்லிய இடை, அழகான சடை, ஆச்சர்யமான அழகு ஆசைப்படும் உடல், ஆண்களைச்சுண்டி இழுக்கம் பார்வை என்று முப்பது வயதில் இலட்சனமாக இருந்தாள். அவள் நான்குபேரைப் பார்த்ததும் ரொம்ப ரொம்ப தெரிஞ்சவள் போல வாங்கப்பா காலேஜ்சு பசங்களா! என்னா? இம்புட்டுதூரம் வந்திருக்கிங்க? என்றாள். சும்மா சுத்திப்பாக்க வந்தோம் என்று மலுப்பினான் தியாகு.
           சரி இந்த கேனை செத்தநேரம் பாத்துக்கெங்க. நான் காலையிலயிருந்து சாப்டல இப்பயாவது போயி அஞ்சாறு சோறு சாப்டுட்டு வாரேன் என்றாள் வசந்தி. போய்ட்டு சீக்கிறமா வாங்க என்றான் உதயா. ஒருவேள யாரும் கேட்டா கொஞ்சநேரம் பொறுங்க வசந்தி வருவாங்கன்னு சொல்லுங்கபாஎன்று சொல்லிவிட்டு  அவசர அவசரமாக சாலையோர ஓட்டலுக்கு விரைந்தாள். நால்வரும் காத்திருந்தனர், அவள் வருவதற்கு அரைமணி நேரமானது ஒருமணி நேரமானது பொழுதும் மசங்கியது. போனவள் திரும்பவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நால்வரும் முழித்துக்கொண்டிருந்தனர். அவ்வழியாய் வந்த ஒரு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.
           பாவம் வசந்தியை போலீஸ்காரங்க பிடுச்சுட்டுப் போயிட்டாங்க இனிமேல் எப்ப வரப்போராளோ! அதைக் கேட்ட பார்த்திபன் அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க போல நம்ம ஊருக்குக் கிளம்பளாம் என்றான். சதீஸ் ஒரே தண்ணித்தாகமா இருக்கு மச்சி என்றதும். ஆமா டா என்றான் உதயா, இப்பென்ன இந்த தண்ணிய குடுச்சா சரியா போச்சு, நான்கு டம்ளரை நிரப்பிக் குடுத்தான் தியாகு.
          ஏலே ஒருநிமிசம் எல்லாரும் கேலுங்க இந்த தண்ணி குடிக்கும்போது கொஞ்சம் கசக்கும் அப்றம் சரியாகிரும் யாரும் கீழ சிந்திராதிங்க ஏன்னா? இதோட விலை ஒரு டம்ளர் பத்து ரூபாயாம் ஒரு பெருசு சொன்னாரு. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லபா நான் ஏற்கனவே குடுச்சுப்பழகியிருக்கேன் என்றான் தியாகு. மச்சி நீயே குடிக்கும்போது நாங்க குடிக்க மாட்டமா? ஏலனமாய் சிரித்தான் சதீஸ். சரி குடுச்சுத்தான் பாப்பமே என்றான் உதயா.
         கைகளிலிருந்த டம்ளர் உதடுகளைத் தொடுவதற்கு முன்பு நாசியின் வழியாய் ஏறிய ஒரு கொடிய நாற்றம் பசியாய்யிருந்த வயிற்றைப் புரட்டியது. நால்வரும் வெளிக்காட்டாமல் தன்மானத்தை விட்டுக் கொடுக்காது குடித்து முடித்தனர். ஏலெட்டு நிமிடத்தில் சற்று தலைசுற்ற ஆரம்பித்தது இருந்தாலும் விடவில்லை பார்த்திபன் இன்னும் ஒரு மடக்கு ஊத்துடா மச்சி என கேக்க போதுன்டா மாப்பள என்றான் உதயா. தியாகு விடவில்லை மறுபடியும் நாலு டம்ளரை நிரப்ப நால்வரும் குடித்தனர். தலை சற்று சுற்றுவதாய் உணர்ந்தவர்கள் முதல் நாளாய் போதையில் மிதந்தனர்.
         போதையில் சதீஸ் உலற ஆரம்பித்தான். ஏலே மச்சி நாளைக்கு அந்த வாத்தியார தூக்குரம் டா. சும்மா இருடா மாப்ள சிரிப்புக் காட்டாதடா என வாய்விட்டுச் சிரித்தான் உதயா. பார்த்திபனும் தியாகுவும் மேலும் சிரித்துக்கொண்டே வாங்கடா வீட்டக்குக் கௌம்பலாமென்று எழுந்து நடந்தபோது காலிரண்டும் பிண்ணி தடுமாற ஆரம்பித்தன. நால்வரும் நடக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகினர். நேரம் ஆகஆகவேறு வழியின்றி பூங்காவின் புள்வெளித் தரையிலேயே கண்ணசர ஆரம்பித்தனர்.
                        காலை விடிந்ததும் சூரியன் மல்லாக்க படுத்திருந்த உதயாவின் முகத்தில் சூடேற்றி முதலாய் தட்டி எழுப்பியது. கண் விழித்துப்பார்த்தான் சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பொருளாக பார்த்துச்சென்றனர். ஏலே எந்திரிங்க டாஎந்திரிங்க டாஎன்ற சத்தத்தோடு தன் வலது கையால் மூவரையும் தட்டி எழுப்பினான். சற்று அரைத்தூக்கத்தில் கண்விழித்த சதீஸ் இராத்திரி செம போதடா மச்சி என்றான்.
                    வாய் அதிகமாக நாறித்தொலைய அருகிலிருந்த வேப்பங்குச்சிகள் சற்று நாற்றம் தனித்தது. ஆற்றிலிறங்கி குளித்து முடித்து விட்டு அங்கிருந்து நடந்தே கல்லூரிக்குக் கிளம்பினர். என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு புதிதாக முதல் மாணவர்களாய் வகுப்பில் அமர்ந்திருந்தனர். வகுப்பிற்கு வந்தவர்கள் ஆச்சர்யத்துடனே பார்த்தனர். வகுப்பறை சற்று நாற்றத்துடனே நகர்ந்து கொண்டிருந்தது. காரணத்தை விரைவில் புரிந்து கொண்ட பேராசிரியர்.  நேத்துத்தான் பிரச்சனை இன்னைக்கும் பிரச்சனை வேண்டாமென கண்டுகொல்லாமல் விட்டுவிட்டார்.
                        அடுத்த வகுப்பிற்கு வந்த தமிழம்மா நான்குபேரையும் அழைத்து தேவையான அளவிற்கு புத்திமதி சொல்லியனுப்பினார். ஒழுக்கமாக ஒருவாரம் கழிந்து முடிந்தது. வாரத்தின் முதல் நாளாய் கல்லூரிக்கு வந்தவர்கள் வழியிலிருந்த  டீக்கடையில் சிகரெட் வாங்கி மறைவில் வைத்து புகைக்க ஆரம்பித்தனர். சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு கால்மேல் கால்போட்டு புகையை மேல்விட்டம் பார்த்து ஊதியவாறு எனக்கு மனசுக்கு சரியில்ல மச்சி இன்னைக்கு நம்ம பூங்காவுக்கு போகலாம் என்றான் தியாகு. ஏன்டா இந்த திடீர் முடிவு என்றான் உதயா.
          வேணாம்டா அது தப்பு நம்ம வகுப்புக்கு போகலாம் என்றான் சதீஸ். இல்லடா எனக்கும் மனசு சரியில்ல என்றான் பார்த்திபன். உதயாவும் சதீசும் அவர்களின் போக்கிற்கு உடன்படவில்லை. சரிடா நாங்க வீட்டுக்கு கௌம்புரோம் என பொய் சொல்லி தியாகுவும் பார்த்திபனும் பூங்காவிற்கு கிளம்பினர். உதயாவும் சதீசும் கல்லூரிக்குக் கிளம்பினர்.
           தார்சாலையை நோக்கி நடந்த போது விரைவாக வந்துவிட்டது பூங்கா. அங்கு சிரித்துக்கொண்டே  வியாபாரம் பாத்துக்கொண்டிருந்த வசந்தி வாங்க! வாங்க! என்று சந்தோசமாக வரவேற்றாள். சற்றுநேரம் பழைய கதையை பேசிக்கொண்டிருந்தனர். சாராயம் குடிக்க பணமில்லை உணர்ந்த தியாகு பூங்காவிற்குள் சென்றான் அங்கு கண்பார்வையற்ற வயதான பாட்டி வழிதேடி சிரமப்பட்டு நின்றிருந்தாள். உதவுவது போல நடித்த தியாகு பாட்டியின் சுருக்குப்பையை இரண்டு நிமிட இடைவெளியில் களவாடியிருந்தான். அதில் சில்லரையாக ஐம்பது ரூபாய் பல்லைக்காட்டி மின்னிக்கொண்டிருந்தது. திறுதிறு வென முழித்துக்கொண்டே வந்தவன்.
            ஆளுக்கொரு டம்ளர் ஊத்து என்றான். வாட்ட சாட்டமாக இருக்கும் இருவரும் பணம் தராமல் போனாலும் பரவாயில்லையென்று இரு டம்ளர் ஊத்திக்கொடுத்தாள். மடக்மடக்கென்று இருவரும் குடித்து முடித்தனர். வசந்தி ஊறுகாயை எடுத்து நீட்டினாள். சப்புக்கொட்டிய நாக்கிறண்டும் மறு சுற்றை முடித்தது. அப்படியே கிட்டத்தட்ட ஒரு மூன்றுமாதகாலம் கழிந்தது.
            வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் நிறைய குடித்துவிட்டு உச்சி வெயிலென்றும் பாராமல் பூங்காவினுள் வளம்வர ஆரம்பித்தனர். அங்கு கோடைப்பறவைகள் தஞ்சம் கொண்டதுபோல ஆங்காங்கே காதலர்கள் கூட்டமாய் அமர்ந்திருந்தனர். சிவப்பு அரலிச்செடியின் மறைவிலிருந்த கல்மேஜையில் ஒரு ஜோடி தோழில் கைபோட்டு சாய்ந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த பார்த்திபன் ஏன்டா மச்சி நம்ம என்னைக்குடா? இப்பிடி காதலி கூட சேந்து சுத்தப்போறம்.
              அதுக்கொல்லாம் கொடுத்து வைக்கனும்டா மச்சி. யாருகிட்டடா! வேறயாருகிட்ட உங்க அப்பாகிட்ட தான்! ஏலே மச்சி என்னயவே கலாய்க்கிறயா? என்றான் பார்த்திபன். அத விடுடா நமக்கெதுக்கு இந்த வயசுல காதல் கன்றாவியெல்லாம். இல்ல மச்சி இந்த வயசுலதான் காதலிக்கனுமா! எங்க பக்ககத்து வீட்டு பார்வதி அக்கா சொன்னாங்க. அப்படியா! அப்ப ஒண்ணு பண்ணுறயா? சொல்லுடாநம்ம பக்கத்து வகுப்புல ரொம்ப ரொம்ப அமைதியா இருக்காலே தமிழ்ச்செல்வி அவள காதலிடா!
            ஏலே கிறுக்குப்பயலே அந்த வகுப்புல இருக்கதுலேயே அவதாண்டா அழகான பொண்ணு அவளுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாதுடா. காதலுக்கு அழகெல்லாம் முக்கியமில்ல மச்சி. நீ வேனுன்னா அவகிட்ட காதலச்சொல்லு அப்பறமா பாரு என்னா நடக்குதுன்னு. சரிடா மச்சி முயற்சி பண்ணலாம்.
          தியாகுவின் சிந்தனை வசந்தியை எட்டிப் பார்த்தது. பொழுது சாய ஆரம்பித்தது. கீழே இறங்கி வந்தபோது மீத சாராயம் விக்குமென்று உக்காந்திருந்தாள் வசந்தி. அவளோடு போதையில் ஒருவன் நெருங்கி தொட்டுப்பேசுவதை பார்த்த தியாகு அவனை கொச்சை வார்த்தையால் திட்ட விலகிச்சென்று விட்டான் அந்த கேடி. கேனிலிருந்த மீதத்தை தியாகுவும் பார்த்திபனும் பகிர்ந்து குடிக்க போதை அதிகமானது.
         வசந்தி நீ எதுக்கு அவங்கூட அவ்லோ நெருக்கமா பேசுன இனிமேல் ஏங்கிட்ட மட்டுந்தான் நெருங்கிப் பேசனும் என அறட்டினான். இவளுக்கும் தியாகுவைப் முன்பிருந்தே பிடித்திருந்தது சரி என்றாள். தியாகுவும் பார்த்திபனும் போதையின் உச்சியில் அமர்ந்திருந்தனர். எங்குபோவதென்று வழிகூட தெரியாத அளவிற்கு வசந்திதான் மெல்ல நடங்க இன்னிக்கு எங்க வீட்டுல தூங்கிட்டு காலையில எந்துருச்சு ஊருக்கு போகலாமென்று தியாகுவின் கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள். பின்னாள் பார்த்திபனும் வந்துகொண்டிருந்தான்.
          வீடு வந்து விட்டது இருவரையும் தூங்க வைத்தாள். அவள் மட்டும் தூங்காது இரவில் ஏதோ கனவில் மூழ்கி முழித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருந்தாள். இரவு ஒருமணிக்கு குளிர் தாங்க முடியாமல் வசந்தியின் மாராப்பில் ஒட்டிய தியாகு அந்த இருளில் தன் ஆசையைத் தணித்துவிட்டான். காலையில் விடிந்த பிறகுதான் உணர்ந்தான் ஏதோ தப்பு நடந்ததென்று பயந்துகொண்டே வசந்தியை ஏறெடுத்துப்பார்த்தான்  அவள் எதையும்  பெரிதுபடுத்தவில்லை தன் சின்ன உதடுகளால் மெல்லமாக புன்னகைத்தாள். அப்பாடா! பிள்ளையாரப்பா காப்பாத்துனப்பா! என்று தியாகு பெருமூச்சுவிட்டான். இப்பழக்கம் இருவரையும் அதிக நெருக்கமாக்கியது.
         தியாகுவும் பார்த்திபனும் வசந்தியின் வீட்டில் தங்குவதை வழக்கமாக்கினர். விசயம் தனக்குத் தெரிந்தும் நண்பனை வெளியில் காட்டிக் கொடுக்காதவனாய் பார்த்திபன் இருந்தான். இருவரும் சாராயம் குடிக்காத நாட்களே இல்லை. பார்த்திபனுக்கு அதிகமாக ஊத்திக்கொடுத்து விட்டு பல இரவுகளை சந்தோசமாக கடத்திக் கொண்டிருந்தனர் தியாகுவும் வசந்தியும். இப்படியே  ஆறு மாத காலம் ஓடி மறைந்நது.
         ஒரு நாள் காலையில் சீக்கிறமாக எழுந்த பார்த்திபன் நான் வீட்டுக்கு போறன்டா மச்சி இத்தன நாளா விடுதில தங்கிப்படிக்கிறதா பொய் சொல்லிட்டே ஆனா இனிமேலும் பொய்சொல்ல விரும்பலடா எங்க அப்பா அம்மாவ பாக்கனும்போல இருக்கு அடுத்து காலேஜ்கு போகனும் படிக்கனும் சதீஸ் உதயா பாக்கனுதமிழ்ச்செல்வி வேற கனவுல வாராடா போதுன்டா இந்த வாழ்க்க நீயும் திருந்தி வாடா போகலாம் இல்லடா நான் வரல நீவேனுன்னா போ
          சரி வா கடைசியா ஒரு தடவ சரக்கடிக்கலாம். இல்லடா மச்சி இனிமேல் இந்த கருமத்த நான் கையில தொடமாட்டேன் கௌம்புறேன் சரி பாக்கலாம். வசந்திகிட்ட மறந்திறாம சொல்லிருடா என விடைகொடுத்துவிட்டு கிளம்பிய பார்த்திபன் பேருந்து நிறுத்தத்தில் நின்று தியாகுவைப் பிரிவதை எண்ணி கண்களைக் கசக்கியபடி பஸ் ஏறினான். பேருந்து அவனை பத்திரமாக பேரையூரில் இறக்கிவிட்டது. வெகுநாள் கழித்து தன் சொந்த ஊருக்குப்போவதை எண்ணி மகிழ்ந்து எதிரில் நின்ற பழையூர் வழி சாப்டூர் என்ற பேருந்தில் ஏற விரைந்தான்.
           அதற்குள் ஒரு சிகரெட் குடிக்கலாம் என்று பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தான். பேருந்து நகர்ந்தது சிகரெட்டை அணைத்து விட்டு வேகமாக பின்னாலேயே ஓடினான். படிக்கம்பியை இறுக்கமாக பிடித்து கூட்டத்தை விலக்கி ஏறினான். எதிர்பாராத விதமாய்  வலைவில் திரும்பிய பேருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டு ஏமாற்றியது. பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அவன்மேல் ஏறியதில் அங்கேயே உடல் நசுங்கி இறந்து போனான். தகவலறிந்து வந்த சொந்தபந்தங்கள் அவனது அப்பா அம்மாவின் கதறலோடு உடலை அடக்கம் செய்து முடித்தனர்.
          கொஞ்ச நாளில் வசந்தியை போலீஸ் பிடித்துச் சென்று விட சாப்பாட்டுக்கு வழியில்லாத தியாகு ஊருக்கு திரும்பி வந்தான். பார்த்திபனின் கோரச் செய்திகேட்டு மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி தனிமையில் சிகரெட் புகையால் மனதைத் தேற்றிக்கொண்டிருந்தான். உடன் சதீஸ் உதயா ஆகியோரின் உதடுகளும் புகையால் கருத்துக்கொண்டிருந்தது. ஒரு புறம் வசந்தி மறுபுறம் பார்த்திபன். படிப்பு மற்றும் தன் குடும்பம் என்ற பல கோணங்களில் ஏங்கிக்கொண்டிருந்த தியாகுவின் உடல் மெலிந்து காணப்பட்டது.
           ஒரு வாரம் தொடர்ந்து காய்ச்சல் உள்ல்ளூர் மருத்துவரிடம் எடுத்த சிகிச்சை பலனலிக்காமல் போக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சதீசும் உதயாவும் உடனிருந்தனர். ஐந்து நாள் சிகிச்சையில் உடல் தேறி விட்டான். பெரிய மருத்துவரின் ஆலோசனைக்காக தியாகுவை தனியறையில் உக்காரவைத்திருந்தனர். ஆலோசனை முடிந்த பிறகு வெளியில் வந்தவன் அதிக மன வருத்தமுடையவனாக காணப்பட்டான்.
          சதீசும் உதயாவும் டாக்டர் என்னடா சொன்னாரு? இன்னைக்கு வீட்டுக்கு போயிரலாமா? என்றனர்.  ம்போயிரலாம்டாஎன்று தேங்கித்தேங்கி அழுக தொடங்கினான். எனக்கு ஏற்பட்ட இந்த கெதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாதுடா மச்சி. இந்த நோயிக்கு மருந்தே இல்லையான்டாஇந்த விசயத்த  யாருகிட்டயும் சொல்லாதிங்கடாஎன குமிறி குமிறி அழுதுவிட உதயாவும் சதீசும் கண்கலங்கி அழுதுவிட்டனர். பேசிக்கொண்டிந்த ஒரு சில நிமிடத்தில் பக்கத்தில் ஆப்பிள் வெட்டுவதற்காக வைத்திருந்த பதமான கத்தியை எடுத்து தன் வயிற்றில் வேக வேகமாக மூன்று முறை பாய்ச்சி யாரும் என்னத் தொடாதீங்க! நான் கெட்டவன் என் இரத்தம் கெட்டது என்று உரத்த சத்தமிட்டு தன் உயிரை முடித்துக்கொண்டான்.
           தியாகுவின் நல்லடக்கம் முடிந்த சில நாள் கழித்து. கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பிரிவு உபசரிப்பு விழா அனுசரிக்கப்பட்டது. மேடையில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் அமர்ந்திருந்தனர். அறங்கம் முழுவதும் மாணவ-மாணவியர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. மூன்றாண்டு நட்பைப் பற்றியும் தன்னை அறிவுமிக்கவனாக உருவாக்கிய கல்லூரியைப் பற்றியும் பேசுவதற்காக உதயாவை பேராசிரியர் மேடைக்கு அழைக்க. மேடையில் பேசிய உதயா தன் நண்பர்களான சதீஸ் தியாகு பார்த்திபன் ஆகியோரின் கதையை விலக்கிக்கூறத் தொடங்கினான் சலசலவென்ற சப்தத்தில் மூழ்கியிருந்த அறங்கம் அமைதியானது பலரது கண்கள் சிவந்திருந்தது.

No comments:

Post a Comment