10.04.2016 அன்று மதுரை வானொலி நிலைய நேர்காணலில் கலந்துகொண்டு
“இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்” என்ற தலைப்பில் நான் வாசித்த என் கவிதைகள்
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
வருங்காலத்தில் தமிழ் எங்கே?
எங்கள் தாய்த்தமிழ் எங்கே?
எங்கள் அழகிய செந்தமிழ்மொழி எங்கே? – என்று
தேடியலையப் போகிறோம்!
கவனம் என் தமிழர்களே!
கவனம் என் இளைஞர்களே!
வளர வேண்டும் நம் தமிழ்
அதைத் தினமும் வளர்க்க வேண்டும் - நாம்
தமிழனுக்குத்தானே பிறந்தோம்!
தமிழ்தாயின் மார்பில்தானே பாலுண்டோம்!
தமிழனாகத்தானே வளர்ந்தோம் - ஏன்?
தமிழை வளர்க்க மறக்கிறோம்!
வேலை வேலையென்ற ஆவலில்
மேலை நாட்டுக் கல்விகற்று!
நம் தாய் மொழியை கொஞ்சம் கொஞ்சமாய்
நசுக்கிக் கொண்டிருக்கிறோம்!
ஆங்கில வழிக்கல்வி தேவைதான்!
இந்தி வழிக்கல்வியும் தேவைதான்!
அதைவிட மிகமுக்கியமானது!
நம் தமிழ் வழிக்கல்வி!
முதலில் தமிழை கற்றுக்கொள்!
அதில் தெளிவு பெற்றுக்கொள் - அதன் பின்
அன்னிய மொழியைக் கற்றுத்தேர்!
அதுதான் தமிழுக்கும் தமிழனுக்கும் சிறப்பு…
பேராயுதம் ஏந்து
தோழா!
அறியாமை உனக்கு தடை விதிக்கலாம்
கேள்விகள் கேழு! பதில்களைத் தேடு!
போட்டிகள் போடு! கல்வியில் மூழ்கு!
வறுமை உனக்குத் விதிக்கலாம்
எங்கும் எதிலும் சிறைப்படாதே!
சீர்கொண்டெழு! புதிய சிந்தனைபெறு!
வஞ்சங்கள் உனக்குத் விதிக்கலாம்
வருந்தி நின்றுவிடாதே!
மனவலிகளைவிடு, வாய்மைபெறு,
நல்வழியில் உன் பணியைத்தொடர்!
வாழப்பிறந்தவனே! வலிமையுடையவனே!
உன் பணி தடைகளைத் தகர்த்தெறிவது
ஆம் - தடைகளை நோக்கமென உடைத்தெறி
உன்னில் கல்வி என்ற பேராயுதம் ஏந்தி…
நித்தரை
சோம்பல் கொடுப்பது நித்திரை
உனைச் சோம்பேறியாக்குவது நித்திரை
ஆஹா நித்திரை ஏதோ ஓர் சுகம்
நித்திரை வேண்டும்
இளைஞர்களே!
அதற்கு முத்திரை வேண்டாம்…
புரட்சி
உணர்ச்சி வேண்டும் இளைஞர்களே!
நீங்கள் உறங்கிவிடாதீர்கள்!
பொறுமை வேண்டும் இளைஞர்களே!
நீங்கள் பொசுங்கிவிடாதீர்கள்!
தீய்மைக்குத் தீயிடுங்கள்
புத்திசாலியாய் வாழ்ந்திடுங்கள்
புதிய உலகம் படைத்திடுங்கள்
இந்த உலகமே ஒரு நாள்
உங்களைப் போற்றி மகிழும்…
நாடு வளம் பெற வேண்டும்
நாடு வளம் பெற வேண்டும்
அதற்கு நாமே வழிவகை செய்திடல் வேண்டும்
இளைய சமுதாயமே தமிழ்த்தாயின்
இளைஞர் பட்டாளமே சீறு கொண்டெழு
மதுக்கடைகளை மழுங்கடிக்க
எத்தனைக் குடும்பங்களைச் சீரழித்தது
எத்தனைத் தாய்மார்களின் தாழியைப் பறித்தெறிந்தது
எத்தனை இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆனார்கள்
எத்தனை குழந்தைகள் தன் தந்தையை இழந்தார்கள்
எத்தனைக் காதலிகள் காதலர்களை தன் இழந்தார்கள்
எத்தனை கற்பிணிகள் கணவனை இழந்தார்கள்
இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ
இந்த பாழாய் போன மதுக்கடைகள்
ஏ மானங்கெட்ட மதுக்கடைகளே!
நாட்டு மக்களின் இறப்பில்
உங்களுக்கு இன்னும் தேவையா?
கோடி கோடியாய் நாட்டுவருமானம்
நாளைய நாடு வளம் பெற வேண்டும்
அதற்கு இன்றைய இளைஞர்களே
சீர்படச் செயல்பட வேண்டும்…
வேண்டும்
ஊழல் செய்யா ஊழியர் வேண்டும்
இலஞ்சம் வாங்கா நெஞ்சம் வேண்டும்
பஞ்சமில்லா பாரதம் வேண்டும்
சாதியில்லா நீதி வேண்டும்
சண்டையில்லா சமரசம் வேண்டும்
அடித்திடா ஆசான் வேண்டும்
மனம் தளரா மாணவர் வேண்டும்
ஆசானை வெறுக்கா அன்பர் வேண்டும்
சதி திட்டம் தீட்டா நண்பர் வேண்டும்
கொலை குற்றம் செய்யா தம்பியற் வேண்டும்
தற்கொலை செய்யா தங்கையற் வேண்டும்
சிசுக்கொலை செய்யா சிறந்தவர் வேண்டும்
வரதட்சனை வாங்கா வரன்கள் வேண்டும்
பெண்களை அடிமை செய்யா பெருமிதம் வேண்டும்
துரோகம் செய்யா தூயநட்பு வேண்டும்
இவையாவும் வேண்டும் இதற்கு
முதலில் மனிதன் மனிதனாகிட வேண்டும்…
கனவு காணுங்கள்
இளைஞர்களே! ஒரு விசயம் உங்களில்
ஒருமுறை வந்தால் அது கனவு
இருமுறை வந்தால் அது ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியமென்றார்
நம் இலட்சியத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் - ஆம்
கனவு காணுங்கள் இளைஞர்களே!
கல்வி சிறக்க, வேலை
வாய்ப்பு கிடைக்க, சேவைபுரிய
கனவு காணுங்கள் இளைஞர்களே!
உங்கள் கரம் கரைபடாமலிருக்க
கனவு காணுங்கள் இளைஞர்களே!
தீமைகளுக்கு எதிரியாய்இ நன்மைகளுக்கு நண்பனாய் இருக்க
கனவு காணுங்கள் இளைஞர்களே!
இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து நிற்க
கனவு காணுங்கள் இளைஞர்களே!
உங்கள் நேர்மையால் உங்கள் கிராமம் சீர்பட
உங்கள் மாவட்டம் சரிபட, நம் மாநிலம் வளர்ந்திட
நம் நாடு முன்னேறிட…
தற்கொலை தவிர்
தோல்விகளை நினைத்து, நிம்மதி இழப்பது
கண்ணீர் உதிர்ப்பது, வெட்டியாய் அழைவது
நேரத்தை வீணடிப்பது, மது அருந்துவது
புகை பிடிப்பது, தீக்காயம் செய்வது
தாடி வளர்ப்பது, மதிலில் முட்டுவது
குருதி சிந்துவது, உடல் திறன் இழப்பது
உறவுகளை மறப்பது, பைத்தியமாவது
உயிரை விடுவது எல்லாம் முட்டாள் பணி
தோற்றபின் எதற்கு அச்சிந்தனை
தூக்கி எ(ரி)றி புதியவனாய் மாறு
புது வாழ்வு தேடு, புதிய உலகம்
காத்திருக்கிறது உன் வாழ்வுக்காக…
நட்பு
நட்பு என்ற வார்த்தை
நமை வாழவைக்கும் கோட்டை
நட்பிற்கு பாலினமோ, காசு பணமோ,
வயது வரம்போ தேவையில்லை
தூய மனமும், இனிய குணமும்
நற்பண்பும், நல்லொழுக்கமும் போதும்
நட்புயென்ற சொல்
தினம் தினம் புதியவர்களை
அறிமுகம் செய்யும்
நல்லவர்களை நிலை நாட்டிக்கொள்ளும்
புதுப்புது விசயங்களைக் கற்றுத்தரும்
புதுமையானவர்களாய் மாறச்செய்யும்
புன்னகையோடு பேசச்சொல்லும்
புதுவாழ்வினைத் தேடித்தரும்…
திறந்திருக்கட்டும்
இங்கு குறைந்த செலவில் பெறலாம்
ஏனையவற்றைஇ நிறைந்த செலவிலும்
கிட்டா சொத்து நண்பர்கள்
மனம் கண்டு வருவார்கள்
திறந்திருக்கட்டும் மனக்கதவுகள்…
விலாசம்
கல்வி!
அறம்!
வீரம்!
விவேகம்!
விடா முயற்சி!
இவைதான்
வெற்றியின் விலாசம்…
மகிழ்ச்சி
பண மகிழ்வை விடக்
குண மகிழ்வே!
மனித மேன்மை…
முயற்சி
நண்பா – நீ
அறிவாளி அல்ல!
முட்டாளும் அல்ல!
சகமானவர்களை விட
சாதிக்க முற்படு!
சமுதாயம் பெயர் சூட்டும்…
தளராதே!
தோல்விகளை
விரும்பி ஏற்றுக்கொள்
முயற்சிகளைத்
தூங்க விடாதே!
வெற்றிகள்
விரைவில் உன்வசமே…
வெற்றியாளர்
தோல்வி
பலமுறைக் கண்டும்
வெற்றியை
ஒரு முறையேனும்
கண்டாவேன்
என்னும்
அடம்பிடிப்பும் ஏக்கமும்
எவருக்குள் வாழ்கிறதோ!
அவரே வெற்றியாளர்…
பழக்கம்
இருட்டு அறையில்
முரட்டு மாமா அறட்டும்
வறட்டு இருமலால்
காது கிழிகிறது
உறக்கம் தொலைகிறது
அவரில்
நோயும் வளர்கிறது
உயிரும் குறைகிறது
காரணம் புகைப் பழக்கம்
இனியும் வேண்டாம்
நம்மில் இப்பழக்கம்…
இளைய சமூகத்திற்கு
அருமைத் தோழா!
எங்கும் எதிலும்
விழிப்போடு!
அறிவோடு!
அறத்தோடு!
வெறியோடு!
செயல்படு!
வெற்றியோடு!
திரும்புவாய்!…
மனித நேயம்
பொய்இ புரட்டு,
திருட்டு, பொறாமை,
கொலை, கொள்ளை,
தீமைகள் ஆகியவற்றை
மறந்து வாருங்கள்
மனித நேயம் காப்போம்…
மாறட்டும் மனித குணம்
பாரத நாட்டில்
யாரும் யாருக்கும்
அடிமையில்லை
தமிழனுக்குத் தமிழன் நிகர்
நாம் ஒரு தாய்ஈன்ற பிள்ளைகள்
நம்மில் பாய்வது
ஒரே செங்குருதி
எல்லார்க்கும்
இதயங்கள் ஒன்று
அனைவரும்
மனிதப் பிறப்புகள்
சுதந்திர நாட்டில்
அனைவரும்
சுதந்திரவாதிகள்
நமக்கெதற்குப்
சாதி எனும் பொய் வர்ணங்கள்
சாதிகள் மறப்போம்
சமத்துவம் படைப்போம்…
மூன்றாம் இனம்
ஆண் பெண் அழகு கலந்து
வெட்கத்தோடு வீரம் செறிந்து
திறமையோடு அச்சம் கலந்து
பூமியில் பூத்தது புதிய உறவு
திருநங்கை என்ற இனிய நிலவு…
சமம்
இரு இனத்தின் பிறகாய்
புது இனம்
மொத்தம் மூவினம்
இவ்வினங்கள்
உருவில் மாறுபடலாம்
மேற்படி
மனம் குணம்
அன்பு ஆசை
அறிவு குருதி
செயல் வீரம்
உணர்வு ஊக்கம்
மானம் ரோசம்
அனைத்தும் ஒன்று தான்
ஆகவே - மூவினமும் சமஇனமே…
எல்லாமே இரு(னி)க்கின்றன
தூக்கம் தொலைக்காத நாட்கள் ஏது?
ஏக்கம் இல்லாத வாழ்வும் ஏது?
தாகம் தணிக்காத மழைத்துளி ஏது?
மோகம் கொள்ளாத மலரினம் ஏது?
காதல் வயப்படாத இதயங்கள் ஏது?
நட்பு கொள்ளாத மனமும் ஏது?
தப்புச் செய்யாத தலைவனும் ஏது?
பாசம் இல்லாத உறவும் ஏது?
உதிரல் கொள்ளாத பனித்துளி ஏது?
மாற்றம் இல்லாத பொழுதுகள் ஏது?
எல்லாமே இரு(னி)க்கின்றன…
நல்ல முதலீடு
மது ஒழிப்பு திட்டம்
மாறி மாறி
மதுக்கடைக்கு
முதலாளியானது
அரசாங்கம்…
மதுக்கடை
படித்தவர்கள் முதல்
பாமரர்கள் வரை
மாணவர்கள் முதல்
முதியோர்கள் வரை
வந்து செல்லும் தாராளம்
அரசு மதுக்கடை
இதற்குப் பெயர்தான்
அரசின் தாராள மயமாக்களோ?...
கூட்டம்
முன்போ!
கூட்டம் அலைமோதும்
உடல் நலம் வேண்டி
கோவில்களில்
இன்றோ!
கூட்டம் அலை மோதுகிறது
உடல்நலக்கேடு வேண்டி
மதுக்கடைகளில்…
தீது
இளைஞர்களின்
வாழ்க்கையினைச்
சீரழித்து- முதியவர்களைவிட
மோசமான நிலைக்குத் தள்ளி
வேடிக்கை பார்க்கும்
மகத்தான சக்திகள்
நம் நாட்டு மதுக்கடை…
வருமானம்
பாவம் எத்தனைக் கோடி
குடும்பங்களின்
வயித்தெரிச்சலோ!
கோடி கோடியாய்
மதுக்கடை வருமானங்கள்…
அய்யம்
வருங்காலத்தில்
தமிழகத்தில்
ஆடவர்களின்
எண்ணிக்கை
வெகுவாக
குறையும்போல
அய்யமாக இருக்கிறது
ஆங்காங்கே
மதுக்கடைகள்…
இளைஞர்களுக்கு
மது, புகை, புகையிலை
இம்மூன்றும்
ஒரு போதை
இப்பழக்கம்
உங்களில் இல்லையேல்
நீங்களே மேதை…
முரண்பாடு
நடிகர் நடிகைகளின்
ஆடைக் குறைப்புப் படங்கள்
மாணவர் புத்தகங்களில்
கவச உடையாய்
பாடக சாலைகள்
சாதிகளே!
இல்லையெனும்
பாடக சாலைகளே!
சாதியப் பெயர்களில்…
ந(வ)ல்லவர்
சாதிகளை சிதைத்து
சமத்துவத்தை விதைத்து
சமரசத்தை அறுவடையாக்குங்கள்
நீங்களே! ந(வ)ல்லவர்…
நற்செயல்
அரசாங்கமே!
கோவில்களைக்
கையகப்படுத்து!
அனைவரையும்
அனுமதி
ஒழியட்டும் தீண்டாமை…
சா(தீ)தி
மனிதா!
நீ அறியாது
அணிந்திருக்கும்
சாதிய சட்டையை
கழற்றி எ(ரி)றி
உனக்குள்
மனசாட்சி இருப்பதைப்
பிறர் அறியட்டும்…
ஒழியட்டும்
நாடு வளம் பெற
மதுவும்
சாதியும்
இலஞ்சமும்
ஊழலும்
ஒழியட்டும்…
கலியுகம்
வளர்ந்து வரும்
கலியுக கலாச்சாரத்தில்
கெட்டுப்போகும்
சந்ததிகள்
என்று தீரும்
இந்த கலியுகம்
கண்ணபிரான் பிறவியெடுத்தா?
இயேசு அவதரித்தா?
புத்தர் வழி தோன்றியா?
காந்திய வழி நடந்தா?
என்று தீரும்
இந்த கலியுகம்?
பருவம்
மாணவன்
ஒரு கணிப்பொறி
செயல் படுத்தும் முறையில்…
படிப்பு
கல்வியாளர்
பெரும் கடல்
ஏனையோர்களின் பயன்…
உங்கள் வாக்கு ஜனநாயகத்தின் மூச்சு
இளைஞர்களே! தேர்தல் வரப்போகிறது
எல்லாரும் உஷார்
தெருவெங்கும் திருவிழாவென
வேட்பாளர் அணிவகுப்பு
அரசியல் களத்தில்
எப்பாம்பு எப்புற்றில் இதை யார் கண்டது?
நல்லோர் போல்
வேசமிடுவோர்க்கு பொய் கோசமிட
இங்கு - ஏனையோர்கள்
கூட்டம் கூட்டமாய் அலைமோதுவார்கள்
கட்டுப் பணங்களை வாரிக்கொடுப்பார்கள்
மதுக்கடையில் விருந்து வைப்பார்கள்
யார்? இவர்கள் இவர்கள் தான்- அவர்களின்
கட்சிக்கு வழுச்சேர்கும் வல்லமைவாதிகளாம்.
வாக்களிக்கும் வ(ந)ல்லவர்களே!
பணத்திற்கும் மதுவிற்கும்
சாதிக்கும் சொந்தத்திற்கும்
அடிபனியாதீர்கள்!
நேர்மைக்கு வஞ்சம் வேண்டாம்!
நம் வாக்கு விற்பனைக்கல்ல
விசித்திரம் படைப்பதற்கு
நல்லனவற்றை உருவாக்குவதற்கு
நம் நாட்டினை வளம் பெற செய்வதற்கு
தவறாது அனைவரும் வாக்களியுங்கள்
ஒரு வாக்கும்இ மறு வாக்கை உருவாக்கும்
மறந்திடாதீர்கள் மறந்தும் இருந்திடாதீர்கள்
வாக்களிப்பது உங்கள் கடமையல்ல
உங்கள் உரிமை உங்கள் உரிமைகளை
இழக்காதீர்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்
உங்கள் விருப்பத்தினை
வாக்களிப்பில் தெரிவியுங்கள்
உங்கள் வாக்கு ஜனநாயகத்தின் மூச்சு…
No comments:
Post a Comment