Monday, 30 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 35-40)



அமெரிக்க தொழிலதிபர்கள் புகழாரம்:
அப்துல்கலாமிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நாதெல்லா உள்ளிட்ட அமெரிக்க முன்னணி தொழிலாதிபர்கள் புகழாரம் சூட்டினர். இந்தியாவின் ஏவுகணை மனிதன் தனது தொலைநோக்குப் பார்வையால் தொடர்ந்து உலக மக்களுக்கு ஊக்கம் அளிப்பார் என்று நாதெல்லா தெரிவித்தார். அப்துல்கலாமின் அறிவுரைகள், தலைமைபண்பு, மனித நேயம் உலக மக்களுக்கு வழிகாட்டியாக தொடரும் என அவரது டுவிட்டர் வலைப் பக்கத்தில் குறிப்பட்டிருந்தார்.
அமெரிக்க இந்திய வர்த்த சபை:
அமெரிக்க இந்திய வர்த்த சபை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அப்துல்கலாமின் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் பயனளிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்:
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி:
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, பாரத ரத்னா டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாமின் மறைவு எனக்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன். அவருடன் நான் நீண்டகாலம் இருந்திருக்கிறேன். ஒரு சிறந்த அறிவியலாளராக, நிர்வாகியாக, கல்வியாளராக, எழுத்தாளராக, விஞ்ஞானியாக அவர் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதது. அவரது எளிமை அனைவராலும் போற்றப்பட்டது. குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். அவரது தன்னம்பிக்கை மிக்க பேச்சாலும், உரையாடலாலும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அதிக ஊக்கம் அளித்தவர். இந்திய இராணுவ ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நாட்டின் பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய சாதனைகள் அளப்பறியது. ஓய்வின்றி நாடடுக்காக தொடர்ந்து உழைத்த அவரது சேவைகளைப் பாராட்டி பல உயரிய விருதுகளால் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். தாய்நாட்டிற்காக தன்னையே அர்பணித்த அவரது மறைவு இந்தியவுக்கே மிகப்பெரிய இழப்பு. இந்தியாவின் தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது. இந்திய மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்பணித்தவர் அப்துல்கலாம். தமது பணி காலம் முழுவதும் மக்களின் குடியரசுத் தலைவராகவே வாழ்ந்தார். வாழ்ந்தபோது மட்டுமல்லாது மறைவுக்குப் பின்னரும் மக்கள் குடியரசுத் தலைவராக அவர் நினைவு கூறப்படுவார். அப்துல்கலாம் மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் வாழ்வார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி:
பல்துறை வித்தகராக விளங்கியவர் டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி:
அப்துல்கலாம், இந்தியாவின் மிகச் சிறந்த வழிகாட்டி. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர். தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாது, விண்வெளி துறையிலும் சிறந்த விஞ்ஞானியாக அப்துல்கலாம் திகழ்ந்தார். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியாவுக்காக முழுமையாக பணியாற்றியவர் அவர். தமது இறுதி மூச்சையும் இந்தியாவுக்காகவே அர்பணித்துள்ளார். அவரது மறைவு நம்மால் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப்போல் இன்னொருவரை இனி பார்ப்பது அரிது. நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, இளைஞர்களுக்கு மிகச்சிறந்த உந்து சத்தியாக விளங்கியவர் அப்துல்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவர் மாசற்ற பண்பு, சோர்வில்லாத ஆன்மா, நுட்பமான பொது அறிவு, உறுதியான முடிவு ஆகிய பண்புகளை கொண்டவர். அவரது மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அவரது மறைவால் நான் ஆழ்ந்த துயரம் கொள்கிறேன்.
ஐக்கிய அரபு எமிரேட் அதிபர்:
ஐக்கிய அரபு எமிரேட் அதிபர். கலிபா பின் சயீது அல் நயன் இரங்கல் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பிரதமர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசைன் லுவ் இரங்கல் தெரிவித்தார்.
ஆர்காடு இளவரசர் நவாப் முகமது அலி:
எளிமையான வாழ்க்கை உயர்வான சிந்தனையே நாட்டின் மதச் சார்பின்மைக்கு வலு சேர்க்கும் என, வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம். நாடு, உண்மையான ஒரு தேசப் பற்றாளரை இழந்துள்ளது. அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினமே.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:
சிறந்த விஞ்ஞான மனப்போக்கு உடையவராகவும், படித்த ராஜியவாதியாவும், உண்மையான தேசப்பற்றாளராகவும், இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் மனம் கவர்ந்தவராகவும் விளங்கிய அப்துல்கலாமின் திடீர் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்:
பாதுகாப்புத்துறை தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற அப்துல்கலாமே காரணம்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாதது.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
தமிழுக்கும்இ தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தவர் அப்துல்கலாம்.
பா.. மூத்த தலைவர் அத்வானி:
போற்றி புகழப்பட வேண்டிய மாமனிதர் அப்துல்கலாம். கறை படாதவராக அப்துல்கலாம் வாழ்ந்தார்.
சுஷ்மா சுவராஜ்:
3 நிமிடங்கள் முன்பு அப்துல்கலாம் மக்களின் தலைவர் ஆனார். அவரது மரியாதை மிக்க ஆன்மாவுக்கு எனது இரங்கல்கள்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி:
டாக்டர். அப்துல்கலாம் ஒரு மக்கள் ஜனாதிபதி அவர் இந்தியாவின் இளைஞர்களை இணைக்கும் சக்தியாக இருந்தார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:
.பி.ஜே. அப்துல்கலாம் மறைந்துவிட்டார். என்ற தகவலை கேட்டது நமக்கு வருத்தமளிக்கிறது. இந்த தேசம் ஒரு உண்மையான பாரத ரத்னாவை இழந்து விட்டது.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு:
தான் இறந்தால் விடுமுறை அளிக்க வேண்டாம்எனக் கூறிய பெருமை மிக்கவர் அப்துல்கலாம். அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.


ஆளுநர் .எஸ்.எல்.நரசிம்மன்:
எனது மானசீக குரு டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம். என ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் .எஸ்.எல். நரசிம்மன் கூறினார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி:
அப்துல்கலாம் மறைந்த செய்தி எனக்கு மிக மிக சோகமான செய்தி, எனக்கு அப்துல்கலாம் மீது தனி மரியாதை எப்போதுமே உண்டு எனது முன்மாதிரிகளில் முதன்மையானவர். அப்துல்கலாம் மறைந்த இந்நாள் எனக்கு மிகவும் சோகமான நாள்.
ஆர்.எஸ்.எஸ்.
தொலைநோக்கு பர்வை கொண்ட முன்னணி விஞ்ஞானிகளில் முதன்மையானவர் அப்துல்கலாம் விடாமுயற்சியாலும், நேர்மறை எண்ணங்களாலும் வெற்றிச் சக்கரத்தை தொட்டவர். அன்னாரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தித்துக் கொள்கிறது. அப்துல்கலாம் ஒரு விஞ்ஞானியாக இந்திய பாதுகாப்பு துறைக்கு அதிக சேவையாற்றியவர். உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை உயர்த்தியவர். குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மதிப்பை உயர்த்தியவர். கோவில்களின் நகரமான இராமேஸ்வரத்தில் பிறந்தது முதல் நாட்டின் 11-வது ஜனாதிபதியாக உயர்ந்தது வரை டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.
லாலு பிரசாத் யாதவ்:
அப்துல்கலாம் ஒரு முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல. அப்துல்கலாம் ஒரு சிறந்த கல்வியாளர். சாதாரண மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது தலைமையிலான ஆட்சியில் இந்திய பாதுகாப்பு துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்றதை யாரும் மறக்க முடியாது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:
                        அப்துல்கலாமின் இழப்பு என்னை பொறுத்தவரையில் எனக்கு நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட இழப்பாக கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த அறிவியலாளர், சிறந்த சமூக சேவகர். அவர் பலமுறை பீகாருக்கு வந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியவர்.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே!
அப்துல்கலாமின் மறைவுச் செய்தி எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு. அவர் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாக கொண்டவர்களில் நானும் ஒருவன். தகவல் அறியும் உரிமைச்சட்ட கூட்டத்தில் நான் அவரை சந்தித்திருக்கிறேன். அதற்கு பிறகு அவரை பலமுறை டெல்லியில் சந்தித்திருக்கிறேன்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி:
இந்தியா மட்டுமில்லாது பல நாடுகளின் நன்மதிப்பையும் பெற்றவர் மாமனிதர் அப்துல்கலாம், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை சிறந்த உயரத்திற்கு கொண்டு சென்றவர். குடியரசுத் தலைவர் மாளிகையை மக்கள் பார்பதற்கு ஏதுவாக மாற்றியவர். அவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போது பல வருடங்கள் கேரளாவில் இருந்திருக்கிறார். அவர் மீது கேரள மக்களுக்கு எப்போதுமே தனிமரியாதையும், பாசமும் உண்டு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி:
முன்னாள் குடியரசுத் தலைவர் .பி.ஜே.அப்துல்கலாமின் மறைவு நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
சி.பி.. தேசிய செயலாளர் டி.ராஜா:
மீனவர் குடும்பத்தில் பிறந்து ஏழையாக வளர்ந்த அப்துல்கலாம் மாணவ பருவத்தில் போராடி கல்வி பயின்றவர். விடாமுயற்சியால் சிறந்த விஞ்ஞானியாகவும், இந்தியாவின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தவர். இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர்.
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ்:
அப்துல்கலாம் உண்மையான இந்தியர். ஒரு சிறந்த மனிதரை இந்த தேசம் இழந்து விட்டது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா:
இந்தியா- அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு அப்துல்கலாம் பெரும் பங்காற்றினார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா:
தெற்காசிய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி:
லட்சக்கணக்கான மக்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கும் அப்துல்கலாம் ஒரு உந்து சக்தியாக இருந்தார்.
நேபாளம் பிரதமர் சுஷில் கொய்ராலா:
சிறந்த நண்பர் அப்துல்கலாம், அவரை நேபாள அரசு இழந்துவிட்டது.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்:
அப்துல்கலாமின் மறைவு அறிவியல் சமுதாயத்திற்கு பேரிழப்பு.
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே:
இந்தியாவின் குறிப்பிடத்தக்க குடியரசுத் தலைவராக அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் அப்துல்கலாம்.
பாகிஸ்தான் பிரதமர்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்தார்.
புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி:
இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் நம்பிக்கை தீயை மூட்டியவர் அப்துல்கலாம்.
அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய்:
இது தேசத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் குழந்தைகளை நேசித்தார். இத்தேசத்தை நேசித்தார். அப்துல்கலாமை நான் நிறைய முறை சந்தித்திருக்கிறேன். அவரை அசாமின் கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையான மனிதர். அவரது மறைவுக்கு தேசமே கண்ணீர் சிந்துகிறது”.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்:
நமது இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் .பி.ஜே.அப்துல்கலாமின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. அப்துல்கலாம் இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதிலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தமிழகத்துக்கே பெருமை அளித்தது. சிறுவயதில் தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக வீடு வீடுடாக சென்று சைக்கிளில் செய்தித்தாள் போடும் வேலையை செய்தவர். சிறு வயதில் மாணிக்கம் என்ற கம்யூனிஸ்ட் தோழருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். அவர் வழங்கிய பல்வேறு நூல்களை விருப்பமுடன் படித்தவர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையிலும், விண்வெளி ஆராய்ச்சித் துறையிலும் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். தலை சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தவர். 1980-ல் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைகோள் திட்டத்தின் இயக்குனராக சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். ஏவுகணைத் திட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பு திட்டங்களிலும் திட்ட இயக்குநராக இருந்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். ஏவுகணை தயாரிப்பு மற்றும் விண்வெளித் துறையில், இந்திய அறிவியல் தொழில் நுட்பத்தை வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்த்திட பங்காற்றியவர். மருத்துவத் துறையில் பல்வேறு புதிய கருவிகளையும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஸ் மேக்கர் போன்ற கருவிகளையும் உருவாக்கியவர். சிறந்த இலக்கியவாதி, திருக்குறளை நேசித்தவர், கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வீணை வாசிப்பதில் மிகுந்த திறமை மிக்கவர். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பிரியம் கொண்டவர். அவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டியவர், பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர். டாக்டர் அப்துல்கலாமின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது இழப்பு இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும். அப்துல்கலாம் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது”.
இந்திய அமெரிக்கர்கள் அஞ்சலி:
இந்திய அமெரிக்க சமூகம்:
முன்னாள் ஜனாதிபதி .பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் அவரது எளிமை மற்றும் மனித தன்மை அவரை அனைவரும் விரும்ப செய்தது என்று கூறியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர்:
அமெரிக்காவில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர் சந்திரா பட்டேல் கூறும்போது, அவரது எளிமை, மனித தன்மை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தனித்தன்மை ஆகியவை அனைவரும் விரும்பும் விசயங்களாக உள்ளன. இந்தியாவில் சமீப காலங்களில் அதிக புகழ் பெற்ற ஜனாதிபதியாக இருந்தவர். நாட்டின் லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர். என்பதுடன் நாடு முழுவதும் ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றியவர் அப்துல்கலாம். டாக்டர் அப்துல்கலாம் உண்மையில் மக்களின் ஜனாதிபதி. இந்தியாவின் அன்பு நிறைந்த குழந்தை. இந்தியாவிற்கு அவர் ஆற்றியுள்ள விலைமதிப்பற்ற பங்கிற்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களது வணக்கத்தை செலுத்துங்கள். அவரது மறைவு நாட்டிற்கு மிகபெரும் ஓர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிரப்புவதற்கு கடினம் நிறைந்த பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
வடஅமெரிக்க தெலுங்கு சமூகம்:
அப்துல்கலாமின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடஅமெரிக்க தெலுங்கு கூட்டமைப்பு (டானா):
வட அமெரிக்க தெலுங்கு கூட்டமைப்பு (டானா) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெலுங்கு நிலத்துடன் சிறந்த முறையில் தொடர்புடையவர் டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம். தனது வாழ்வின் பெரும் பகுதியை அவர் இங்கு செலவிட்டுள்ளார். அப்துல்கலாமின் தலைமை இந்தியா 2020 இயக்கத்திற்கு டானா ஆதரவு தெரிவித்து வந்துள்ளது.
இந்திய அமெரிக்க வழக்கறிஞரர் ரவி பத்ரா:
இந்தியாவின் மக்களுக்கு வளம் மிக்க சொத்தை விட்டு சென்றள்ளதுடன், உலகிற்கு வளம் மிக்க சொத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். மேலும் நாட்டின் மீது அவர் செலுத்திய அன்பு மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் மீதும் அமைதியான முறையில் அவர் கொண்டிருந்த அன்பு ஆகியவை மனிதத் தன்மை குறித்த ஆழ்ந்த படிப்பினை குறிப்பதாகும்.
அமெரிக்காவின் இந்திய தேசிய வெளிநாட்டு காங்கிரசின் தலைவர் ஜார்ஜ் ஆபிரஹாம்:
அனைத்து காலங்களிலும் சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா உண்மையில் இழந்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாமின் மறைவு மிக பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம்:
அப்துல்கலாம் மறைவுக்கு, ஹைதராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தில் 28.07.2015 அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரங்கல் தெரிவித்தது. முன்பாக அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரங்கல் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாம் எனக்கு மிக்க நெருங்கிய, உத்தம நண்பரை போன்று விளங்கியவர். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உண்மையானபாரத ரத்னாஅவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை நமக்கு உணர்தியவர். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு சிறந்த பாடம். தனது அறிவியல் அறிவாற்றலால் இந்தியாவின் புகழை உலகிற்கு உணர்த்திய மகான். மாணவர்களின் எதிர்காலத்தை அவர்களின் பெற்றோர்களைவிட அதிகம் யோசித்தவர். அதனால் பல பல்கலைக் கழகங்களுக்கு சென்று தனது கடைசி நிமிடம்  வரை மாணவர்களுடன் தனது நேரத்தை செலவழித்தார். அப்துல்கலாம் கண்ட கனவுகளை இளைஞர் சமுதாயம் நிறைவேற்ற வேண்டும். ஜாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயங்களையும் பூசிக்கொள்ளாத இந்தியாவின் உண்மையான முகமாக அப்துல்கலாம் திகழ்ந்தார். சமீபத்தில் அனந்தபூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
ஆந்திர மற்றும் தெலங்கானா அரசு:
28.07.2015 அன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதே போன்று தெலங்கானா அரசு, அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 28.07.2015 அன்று மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அளித்தது.
தெலுங்கு திரைப்படத்துறையினர்:
தெலுங்கு திரைப்பட உலகின் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி:
அப்துல்காலம் அவர்களின் மறைவிற்கு புதுச்சேரி அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு புதுச்சேரி அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அப்துல்கலாமின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி, இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் நம்பிக்கை தீயை மூட்டியவர் அப்துல்கலாம்.
தமிழக தலைவர்கள் இரங்கல்:
தமிழக கவர்னர் ரோசையா:
டாக்டர்..பி.ஜே. அப்துல்கலாமின் மறைவு, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு.
தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா புகழஞ்சலி:
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியும், தமிழகத்தின் அன்பு மகனுமான அப்துல்கலாம் மறைவு என்னை மிகுந்த துயருக்கு ஆளாக்கியுள்ளது. சுதந்திர இந்தியாவில் அப்துல்கலாம் மிகப்பெரிய தலைவர். எளிமையான குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் தனது கடின உழைப்பாலும், அறிவுக்கூர்மையால் வியத்தகு உயரத்தை அடைந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு போற்றத்தக்கது. ஏவுகணை, அணுசக்தி திட்டங்களில் அவரது ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானியாக அவர் இந்தியாவை உலக அரங்கில் பெருமிதம் கொள்ளச்செய்தார். இந்த நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்களுக்கும் அவர் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கியிருக்கிறார். இளைஞர்களின் அடையாளமானார். எளிமையான வாழ்க்கை முறையால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவர் ஒரு சிறந்த தேச பக்தர். கிராமபுற மக்களுக்கும் பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அவரது இலக்காக இருந்தது. அத்தகைய மாமனிதரின் மறைவின் துக்கத்தை மக்களுடன் இணைந்து நான் அனுசரிக்கிறேன்”.

உடல் நிலை காரணமாக தமிழக முதல்வர் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை:
அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
                        “இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சிலும் நிறைந்தவரும், தமிழகத்தின் தலைசிறந்த மைந்தருமான பாரத ரத்னா டாக்டர்..பி.ஜே. அப்துல்கலாம் மறைவினால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். இராமேஸ்வரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் அப்துல்கலாம். எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய டாக்டர் அப்துல்கலாம், இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்து சக்தியாக விளங்கினார். ஏவுகணை உருவாக்கம், அணுசக்தி திட்டங்கள் ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்த போதிலும், போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டெனட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மன நிறைவு கண்டவர் அப்துல்கலாம். “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்என்ற அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர். அப்துல்கலாமின் நல்லடக்கம், அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் 30.07.2015 அன்று நடைபெறவுள்ளது. அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க எனது பேரில் இதற்கென அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுளள்ளது. எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், .பன்னீர் செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், நத்தம் இரா.விசுவநாதன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வைத்துறை அமைச்சர், ஆர்.வைத்தியலிங்கம், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர், எடப்பாடி கே.பழனிசுவாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர், பி.பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர், எஸ்.சுந்தரராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஆர்.பி.உதயகுமார், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரை இராமேஸ்வரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், மறைந்த அப்துல்கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான 30.07.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்எனக் குறிப்பிட்டிருந்தார்.
அப்துல்கலாம் மறைவையொட்டி அதிமுக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு:
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவையொட்டி ஒருவார காலத்துக்கு அதிமுக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.
முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக உலகம் புகழும் வகையில் பணியாற்றியபாரத ரத்னா டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன். டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாமின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அஇஅதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன.
தி.மு. தலைவர் மு.கருணாநிதி:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்,பாரத ரத்னா, மேதகு டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு, அவருடன் எனக்கிருந்த தொடர்பு பற்றிய அடுக்கடுக்கான எண்ணங்கள் எழுந்தன. சென்னை கலைவாணர் அரங்கில் 04.09.2006 அன்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில்தொல் காப்பியர் விருதுஎனக்கு வழங்கப்பட்டபோது, அந்த விருதை எனக்கு வழங்கியவரே அப்துல்கலாம்தான். அப்போது அவர் ஆற்றிய உரையும், என்னைப் பாராட்டிக்கூறிய வார்த்தைகளும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. ஏன் அதற்கு முன்பே நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலினை மேதகு அப்துல்கலாம் அவர்கள் படித்துவிட்டு. எனக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அது பற்றியும் கலைவாணர் அரங்கில் அவர் பேசும் போது குறிப்பிட்டார். குடந்தையில் நடந்த ஒரு தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலர் மாண்டு மடிந்தபோது நான் எழுதிய கவிதை ஒன்றையும் கண்களில் கண்ணீர் மல்கப் படித்ததாக எனக்கு எழுதியிருந்தார். அப்துல்கலாமைப் பற்றி நான் 13.06.2002 அன்று எழுதிய கவிதையின் ஒரு சில வரிகளை இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்

No comments:

Post a Comment