அப்துல்கலாம் சிறு வயதில் கிணற்றுக்குள் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். அந்த கல் கிணற்று நீருக்குள்விழ அதிலிருந்து குமிழ், குமிழலாக வந்தது, அது ஏன் வருகிறது? என்று கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி அதுதான்.
சந்தனப்பாடி மரியாதை:
இராமேஸ்வரத்திலுள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழாவை இந்துக்கள் நடத்தும் போது அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு “சந்தனப்பாடி” என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது. அப்துல்கலாமைப் போன்று அவரது குடும்பமும் எம்மதமும் சம்மதமென்று வாழ்ந்தனர்.
கல்லூரிப் பருவத்தில் அசைவம் தவிர்த்தார்:
1950-களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் இளநிலை அறிவியல் பயின்ற போது அசைவம் சாப்பிட்டால் விடுதி உணவுக்கட்டணம் உயரும் என்பதால் தன் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தார். பின்னர் அதுவே பழக்கமாக மாறியது சைவமே அவரது நிரந்தர உணவானது.
முதல் மாத ஊதியம்:
தன் கல்வியை முடித்ததும் அப்துல்கலாம் 1958-ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு முதல் மாத ஊதியமாக அந்நிறுவனம் வழங்கியது ரூபாய். 250 மட்டும்.
இராணுவ ஏவுகணைகள்:
இன்று இந்திய இராணுவத்தில் இருக்கும் ஏவுகணைகளான திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் ஆகியவைகள் அப்துல்கலாம் திட்ட இயக்குனராக இருந்தபோது வடிவமைக்கப்பட்டு வந்தவைகள் ஆகும். மேலும் இந்தியாவிற்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அப்துல்கலாம் உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் அவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தது.
எனது பயணம்:
அப்துல்கலாம் எழுதிய “எனது பயணம்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்த கவிதை நூல் வாசிப்பாளர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றதால் அந்த நூல் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
காந்தியின் சமாதியில் எடுத்த சபதம்:
ஊழல், வரதட்சணை உட்பட 5 விதமான தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் எழுதி வைக்க அப்துல்கலாம் அறிவுறுத்தி அதை அமுல்படுத்தினார். பின்னர் ஒரு முறை மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்ற அவர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதி வைத்தார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு சென்று மாணவ-மாணவியர்களின் மத்தியில் தன்னம்பிக்கைகளைப் பற்றியும் நாட்டின் முன்னேற்றங்களைப் பற்றியும் உரையாற்றி வந்தார்.
இராணுவ பயிற்சி:
“இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் இராணுவ பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், உடலின் ஆரோக்கியத்தை சீராக வைப்பதற்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இராணுவப் பயிற்சி உறுதுணையாக இருக்குமென்று அறிவுறுத்தினார்.
திருக்குரான் பற்றாளர்:
தனக்கு தலையாய பணிகளாக இருந்தாலும்கூட அப்துல்கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவற மாட்டார். திருக்குரானில் அவருக்கு பிடித்த வரிகள் எவை என்றால்
“இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்”.
என்ற வரிகளாகும்.
இந்த
வரிகள், அவரின் எல்லா சோதனை நாட்களிலும் அவரை கரை சேர்த்த வைர வரிகள் என்று அவர் குறிப்பிடுவார்.
இளமையில் வாங்கிய புத்தகம்:
மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்த ஒரு பழைய புத்தகக்கடையில் 1950-ல் “த லைட் பிரம் மெனி லேம்பஸ்” என்ற புத்தகத்தை அப்துல்கலாம்
வாங்கினார். அதைக் கடந்த 60-ஆண்டுகளுக்கும் மேலாக தன் அறையில் வைத்து பொக்கிஷ்மாக பாதுகாத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிலியம் தாது பொருள்:
அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தது. உடனே இது பற்றி அப்துல்கலாம் ஆய்வு செய்ய ஆரம்பித்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். இதை தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவிற்கு பெரிலியம் தாது பொருளை வழங்கின.
தீப்பந்த ஒளியில் கிளம்பியது விமானம்… துணிச்சல் காட்டினார் ஜனாதிபதி:
2005-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் அலுவல் காரணமாக மிஸோரம் சென்றிருந்தார். அங்கு பணி நிறைவடைந்த நிலையில். மறுநாள் காலையில் அவர் டெல்லி திரும்புவது என பயணத் திட்டம் இருந்தது. எப்போதும் புன்னகையோடே காட்சியளிக்கும் அவருக்கு, அன்று அங்கு இருக்க பிடிக்கவில்லை. இரவோடு இரவாக டெல்லிக்கு கிளம்புவது என முடிவு செய்தார். உடனே அப்பகுதி விமானப்படை நிலைய தலைமை அதிகாரிக்கு, இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அதிகாரி இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் கிளம்புவதற்கான வசதிகள் இல்லையென்று பதிலளித்தார். அத்துடன் அந்த விசயம் முடிந்து விட்டதாக அந்த அதிகாரி நினைத்தார். அவர் தந்த விளக்கம் அப்துல்கலாமை திருப்தி படுத்துவதாக இல்லை. “அவசரமாக இருந்தால் என்ன செய்வீர்கள். இந்திய விமானப்படை காலை வரை காத்திருக்குமா? நான் புறப்பட வேண்டும் என அவர்களிடம் சொல்லுங்கள். தேவையான ஏற்பாடுகள் செய்யட்டும்” என உதவியாளரிடம் கூறினார். ஜனாதிபதியும், முப்படைகளின் தலைவருமான அப்துல்கலாமின் இந்தத் தகவல் உடனடியாக விமானப்படை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த விமானப்படை அதிகாரி உடனடியாக டெல்லியில் உள்ள மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், டெல்லியிலிருந்து விமானப்படை அதிகாரிக்கு வந்த பதில் அவருக்கு ஆதரவாக வரவில்லை. அதற்கு மாறாக இந்தியாவின் ஏவுகணை மனிதரின் உத்தரவை உடனடியாக நிறைவேற்றும்படி கட்டளை வந்தது. வேறு வழியே இல்லை. ஓடுபாதையின் அருகே லாந்தர் விளக்குகள் வைத்தும், தீப்பந்தங்களைக் கொளுத்தியும் தற்காலிக வெளிச்சம் ஏற்றப்பட்டது. விமானம் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு தயாராக்கப்பட்டது. குறைந்த அளவான அடிப்படை வசதிகளைக் கொண்ட விமான தளத்திலிருந்து அந்த இரவில் புறப்படுவது குறித்து, ஜனாதிபதியின் உதவியாளர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில் ஓடுதலத்திலிருந்து விமானம் கிளம்புவது பாதுகாப்பானதுதானா? என தனிப்பட்ட முறையில் விமானப்படை அதிகாரியிடம் கேட்டபோது. அவர் “விமானம் புறப்படும். ஆனால், அது திரும்பும்போது சில பிரச்சனைகள் ஏற்படலாம்” என்றார். அந்த பதில் அப்துல்கலாமின் உதவியாளர்களின் மனதை அச்சத்தில் மூழ்க வைத்தது. இரவு 9 மணிக்கு விமானம், ஜனாதிபதி மற்றும் அவரின் குழுவினர் 22 பேர்களுடன் பறக்கத் துவங்கியது. அந்த விமானம் பாதுகாப்பாக டெல்லியில் வந்து தரை இறங்கியது. அப்போது அவர் காட்டியது அசாத்திய துணிச்சலாக இருந்தது.
நெஞ்சில் தீரம் மட்டுமல்ல ஈரமும் உடையவர்:
இந்திய தேசத்தின் 11-வது ஜனாதிபதியாக அப்துல்கலாம் பொறுப்பேற்ற போதுஇ துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த்திற்க்கு மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் பணி, கிருஷ்ண காந்த்தை மருத்துவமனையில் சென்று பார்த்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மருத்துவமனையில் அவரைச் சந்தித்த நபர்களில் முதல் நபரும் அப்துல்கலாம்தான். அவரிடம் தீரம் மட்டுமல்ல ஈரமும் இருந்தது.
ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி:
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்கு 3 கிலோ எடையுள்ள செற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டது. அந்த செயற்கை உறுபுகளை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் அக்குழந்தைகள் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகினர். அதைக் கேள்விப்பட்ட அப்துல்கலாம் அந்த உறுப்புகளை வெறும் 400-கிராம் எடை உடையதாக தயாரித்துக் கொடுத்தார். இதனால், அந்த குழந்தைகளும், அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் அடைந்த மகிழ்ச்சி கண்டு தனக்கு அதிக மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
புத்தக வாசிப்பு:
புத்தகங்களின் மீது அதிக பற்று கொண்ட அப்துல்கலாம் நல்ல புத்தங்களை வாங்கி வாசிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். புத்தகங்களே மனித வாழ்வை சீர்படுத்தும் என்பதில் அவர் அதிக நம்பிக்கையுடைய மனிதராக வாழ்ந்தார்.
விவசாயத்தின் மீது ஈடுபாடு:
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியிலும் இருக்கின்றனஇ என்பதைப் புரிந்து கொண்ட அப்துல்கலாம் படித்த இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் சொன்னார். அவ்வாறு படித்தவர்வர்கள் விவசாயத்தில் ஈடுபடும் போது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிகமான விவசாய உற்பத்திப் பொருட்களைப் பெறலாம். அதை வைத்து நம் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பின்னர் வெளிநாட்டு ஏற்றுமதிக்குத் தரலாம் அதனால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமோகமாக மேம்படும் என்பதற்காக நதிகள் இணைப்பு திட்டத்தில் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
இசையின் மீதான விருப்பம்:
இசையின் மீது அதிக விருப்பம் கொண்ட அப்துல்கலாம் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் அறையில் வைத்திருக்கும் வீணையை எடுத்து வாசிப்பார். வீணை வாசிப்பதில் நன்கு கற்றுத் தேர்ந்தவர். அதுபோக தமிழிசை காவியங்களையும் இரசித்துக் கேட்பார். எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் பாடல்களை தான் விரும்பி கேட்பதாகவும் கூறுவார்.
தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம்:
சிறுவயதில் ஒரு நாள் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தந்தை ஆ.ப.ஜெய்னுலாபுதீன் மரைக்காயர் இராமேஸ்வரத்தின் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்த காலம். அவரது தந்தையைச் சந்திக்க ஒருவர் வந்தார். அப்பா இருக்காரா தம்பி என்று வீட்டிற்குள் இருந்த அப்துல்கலாமிடம் கேட்டபோது அப்பா இல்லையென்றும்
வெளியில் சென்றிருப்பதாகவும், வரநேரமாகும் என்றும் பதிலளித்தார். சரி தம்பி இத அப்பாகிட்ட கொடுத்திருப்பா என்று ஒரு பையைத் தரவும் அதை அப்துல்கலாம் வாங்கி வீட்டிலிருந்த திண்னையில் வைத்திருந்தார். அன்று
இரவு அவரது
தந்தை வந்தார். விளையாடச் சென்றிருந்த அப்துல்கலாமும் வீடுதிரும்பினார். அப்பாவைப் பார்த்தவுடன் அப்பா இந்த பொருள உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி ஒருத்தர் கொடுத்துட்டு போனார்பா என்று கையில் தரவும். அதைப்பிரித்து பார்த்தபோது உள்ளிருந்தது பரிசுப்பொருள். அதை கீழே வைத்துவிட்டு அப்துல்கலாமை அடி வெழுத்துக்கட்டிவிட்டார். யாராவதும் பரிசுப்பொருட்கள் கொடுத்தால் அதை வாங்கக் கூடாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் இனிமேல் வாங்குவயா? வாங்குவயா? என்று சொலிலிக்கொண்டே அடித்தார். அப்துல்கலாம் இனிமேல் வாங்க மாட்டேன்பா அடிக்காதிங்கப்பா என்று கதறினார். அவ்வளவு நேர்மையான மனிதர் அப்துல்கலாமின் தந்தை பரிசுப்பொருட்கள் கொடுப்பவர்கள் நம்மிடம் எதையாவதும் எதிர்பார்த்துத்தான் கொடுப்பார்கள். என்று அப்துல்கலாமிற்கு புத்திமதி சொன்னார் அன்றிருந்து அப்துல்கலாம் யாரிடமும் பரிசுப்பொருட்களை வாங்குவதை முழுமையாக தவிர்த்தார். வாழ்நாளில் அவர் யாரிடமும் பரிசுப்பொருட்களை வாங்கியதே கிடையாது அப்படி யாராவதும் கொடுத்தாலும் அதை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிடும் பழக்கமுடையவராக வாழ்ந்தார்.
இயற்கையை ரசிப்பார்:
ஜனாதிபதியாக இருந்த போது, அதிகாலையில் எழுந்து பணிக்கு தயாராகிவிடும் அப்துல்கலாம் நடை பயணமாய் ஜனாதிபதி மாளிகையில் உள்ள “முகல்” தோட்டத்திற்கு செல்வார். அவர் வருகைப் பதிவை வரவேற்க அழகாக பூத்து காத்திருக்கும் பல்வேறு விதமான பூக்களின் அழகை ரசித்தபடி பூக்களோடு பூக்களாய் நகர்வளம் வந்து அந்த தோட்டத்திற்கே அழகு சேர்ப்பார்.
தன் ஆசிரியர்களை மறவாதவர்:
நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியும், ஜனாதிபதியும் என மிக உயர்ந்த பதவிகளை வகுத்திருந்தாலும். தான் உயர்ந்ததற்கான காரணம் தன் ஆசிரியர்கள் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஆகவே தன் ஆசிரியர்கள் மீது அதிக பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். ஜுலை மாதம் 18-ம் தேதி 2015-ல் திண்டுக்கலுக்கு வந்த அப்துல்கலாம் தன் பேராசிரியரான சின்னத்துரையைச் சந்தித்து நலன் விசாரித்துவிட்டு புத்தகத்தை பரிசாக கொடுத்துவிட்டு ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார். ஒவ்வொரு மேடையில் பேசும் போதும் தனக்கு வழிகாட்டிகளாய் இருந்த பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களை நினைவு கூர்ந்துபேச அவர் மறந்ததில்லை.
செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் நேசம்:
ஏழை பணக்காரர்கள் என்றெல்லாம் பேதம் பார்க்காது யாரும் யாருக்கும் தாழ்வில்லை எல்லோரும் சமம் என்று போற்றும் அப்துல்கலாம். திருவனந்தபுரத்தில் பணியாற்றியபோது செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரோடு நல்ல நட்பு வைத்திருந்திருந்தார். அவருடன் நல்ல நேசமுடன் பழகி வந்தார். சில வருடங்கள் களித்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற பின் ஒரு முறை திருவனந்தபுரத்திற்கு வந்தபோது. அங்கு வந்ததும் அவருக்கு தன் நெருங்கிய நண்பர் செருப்பு தைக்கும் தொழிலாளி ஜார்ஜின் ஞாபகம் வந்துவிட்டது, அவருடைய அங்க அடையாளங்களை டி.ஐ.ஜி.பத்மகுமாரிடம் கூறி அவர் எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் அவரைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. அவரை இப்போது நான் பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே போலீசார் விரைந்து சென்று அவரை தேடிக் கண்டு பிடித்து கேரள ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்தனர். அழுக்குப்படிந்த உடையோடு அங்கு வந்து நின்ற ஜார்ஜின் முகம் பார்த்ததில் அப்துல்கலாமிற்கு பெருத்த பேரின்பம். வெகுநாட்களுக்கு பிறகு இந்தியா மட்டுமல்ல உலகமே திருப்பிப் பார்க்கும் இந்திய ஜனாதிபதியைக் கண்டு மெய் மறந்து போனார் அவரது நண்பர். காவலர்கள் சூழ்ந்து நின்றிருந்த ஜனாதிபதியை நெருங்க ஜார்ஜிற்கு மனமின்றி போனாலும் என் அருகில் வாருங்கள் என்று அழைத்த அப்துல்கலாம் கைகொடுத்து நலன் விசாரித்தார். அப்போது அவரிடம் முதலாக கேட்ட வார்த்தை “சாப்டிங்களா?” என்பதுதான்.
திருமணம் குறித்து பலரது கேள்விக்கு பதில்:
திருமணம் செய்யாது தன் வாழக்கையை தேசத்துக்காகவே அர்ப்பரித்துவிட்ட அப்துல்கலாமிடம், 50 ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் திருமணத்தைப்பற்றி அவரிடம் கேட்டவர்கள் ஏராளமானவர்கள். அவர்களின் கேள்விக்கு அப்துல்கலாம் அளித்த பதில், நான் ஒரு கூட்டு குடும்பத்தில் பிறந்தவன். எனது குடும்பம் பல தலைமுறைகளாக இருந்து கொண்டு வருகிறது. நிறைய வாரிசுகளும் இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய குடும்பத்தில் நான் மட்டும் திருமணம் செய்யாமல் இருப்பது கேள்விக்குரிய விசயமில்லை என பெருந்தன்மையாகக் கூறினார்.
குடும்பத்தின் மீது கொண்ட பற்று:
வேலைக்குச் சென்ற இளம் வயதிலிருந்தே தன் குடும்பத்திற்கு உதவும் அப்துல்கலாம் என் குடும்பத்தின் ஒத்துழைப்பில்தான் நான் படித்தேன் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறார். மெட்ராஸில் ஏரோனாட்டிக்கல் இஞ்நேயரிங் படிக்க 1000 ரூபாய் ஆகும். ஆனால் அதற்கான பணம் என் குடும்பத்திடம் இல்லாமல் போக என் சசோதரி ஆஷிம் செருபா அம்மாளின் நகைகளை அடமானம் வைத்து படித்து, அவர் வேலைக்குச் சென்ற பின் திருப்பிக் கொடுத்தாக ஒரு நிகழ்ச்சியில் பதிவு செய்தார் அப்துல்கலாம். தான் குடியரசுத் தலைவரான போதும் தன் ஊதியத்தின் மூன்றில் ஒரு பகுதியை ஒதுக்கி குடும்பச் செலவிற்காக மாதம் மாதம் வீட்டிற்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆசிரியர் தின விழாவில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உரை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2014-ல் செப்டம்பர்-5-ம் நாள் ஆசிரியர் தினவிழா நடை பெற்றது அதில் கலந்து கொண்டு அங்கிருந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் தின விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் ஆசிரியர் தின விழாவில் அவர் ஆற்றிய உரை.
எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் இராமேஸ்வரத்தில் ஒரு கூரைப் பள்ளியில் படித்தேன். 5-ம் வகுப்பு படித்தபோது சிவசுப்பிரமணிய அய்யர் ஆசிரியராக இருந்தார். அவர் ஒரு நாள் பறவை பறப்பது போல கரும்பலகையில் தத்ரூபமாக படம் வரைந்தார். பின்னர் பறவை எப்படி பறக்கிறது அதுபோலத்தான் விமானமும் பறக்கிறது. பறவையை பார்த்துதான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று எங்களை ஊக்கப்படுத்தினார். அவர் அன்று ஊக்கப்படுத்தியதால்தான் நான் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் படித்து பின்னர் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனவே அவரைப்போன்ற ஆசிரியர்கள் இன்று தேவை. மேலும் நான் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது பாதிரியார் சின்னத்துரை எனக்கு வகுப்பு எடுத்தார். அவர்தான் நூலகத்தில் போய் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். எந்த பாடத்தையும் மனதில் பதியும்படி பாடம் நடத்துவார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுடன் தனது பணி நிறைவடைந்து
விட்டது என்று எண்ணாமல் மாணவர்களின் திறமையை அறிந்து அந்த திறமையை மேம்படுத்துவதே நல்லது. எனவே பல்வேறு தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு புகட்டுங்கள். ஆசிரியர்கள் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக இருக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். சாதி, மதம், மொழி என்ற பேதமின்றி மாணவர்களிடம் பழக வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாயாக, தந்தையாக, சகோதரராக, சசோதரியாக இருங்கள். அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். மாணவர்களிடம் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளருங்கள். அர்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் பணிபுரியுங்கள் என்று ஆசிரியர்களைப் பார்த்து மிகுந்த அன்போடு கேட்டுக் கொண்டார்.
மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கொடுத்த பத்து கட்டளைகள்:
·
சிறந்த அங்கமாக திகழ்வேன்
•
நான் எனக்காக ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய கடுமையாக உழைப்பேன். சிறிய லட்சியம் குற்றமாகும். வாழ்வில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும்.
•
நான் நேர்மையோடு உழைப்பேன். நேர்மையோடு வெற்றி பெறுவேன்.
•
நான் எனது குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் சிறந்த அங்கமாக திகழ்வேன்.
•
சாதி, இன, மொழி, மத, மாநில வேறுபாடு இல்லாமல் மற்றவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும், மேன்மைபடுத்தவும் முயற்சிப்பேன். அதாவது நான் என்ன கொடுப்பேன் என்பதை தாரக மந்திரமாக கொள்வேன்.
•
எந்த பாரபட்சமும் இல்லாமல் மனித உயிர்கள் அனைத்தையும் பாதுகாத்து அவர்கள் கண்ணியத்தை உயர்த்த பாடுபடுவேன்.
துணிவோடு உழைப்பேன்.
•
காலத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் மனதில் கொள்வேன், எனது குறிக்கோள் எப்போதுமே பறந்து கொண்டிருக்கும். எனது நாட்கள் ஒருபோதும் வீணாய் போய்விடக்கூடாது.
•
பசுமையான பூமி சுத்தமான எரிசக்திக்காக பாடுபடுவேன்.
•
எனது நாட்டின் இளைஞர் என்ற முறையில் என்னுடைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடைய உழைப்பேன், துணிவோடு உழைப்பேன் மற்றவர்களுடைய வெற்றியை பாராட்டி மகிழ்வேன்.
•
நான் எனது நம்பிக்கைக்கு இளைஞனாகவும்இ எனது சந்தேகத்துக்கு முதியவனாகவும் இருக்கிறேன். அப்போது எனது இதயத்தில் நம்பிக்கை என்ற ஒளியை ஏற்றுவேன்.
•
எனது தேசியக்கொடியை என் இதயத்தில் பறக்க வைத்து, என் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.
பெருமைக்குரிய மனிதர்
இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்களிடையே, “கனவு காணுங்கள்: அது, உங்கள் உயர்வுக்கு வழி காட்டும் என்ற தன்னம்பிக்கை விதையை ஆழமாக விதைத்தவர் அப்துல்கலாம். அவர் செல்லும் இடமெல்லாம் மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடத் தவறமாட்டார். தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கு வரும் வி.வி.ஐ.பி.க்களைவிட, மாணவர்கள் குழந்தைகளை நோக்கித்தான், அவரது பார்வை இருக்கும். அந்த அளவிற்கு, இளைய தலைமுறையினரை பெரிதும் நேசித்து வந்தார். முன்னாள் ஜனாதிபதிகள் இராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோரைத் தொடர்ந்து, ஜனாதிபதியாக பதவி வகித்த மூன்றாவது தமிழர் என்ற பெருமையும் அப்துல்கலாமிற்கு உண்டு. இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையை கலகலப்பாக மாற்றி, அதில் உள்ள, “முகல்” தோட்டத்தை விசேசமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்தார். சாதாரண மக்கள், எளிதில் அணுக முடியாத இரும்பு கோட்டையாக இருந்த ஜனாதிபதி மாளிகையை, ஏழை, எளிய மக்களின் தரிசனத்துக்காக திறந்து விட்ட பெருமைக்குரிய மனிதர் இவர்.
பட்டமளிப்பு விழாவில்:
இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி-யின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடை ஏறியபோது மேடையில் மொத்தமாக 5 இருக்கைகள் இருந்தன. அதில் ஜனாதிபதி அமர்வதற்காக பிரத்யேகமான ஒரு இருக்கை மற்றைய இருக்கைகளைவிட மிகப் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனித்த அப்துல்கலாம். தனக்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்யேகமான இருக்கையில் அமர்வதை தவிர்த்தார். மற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையே தனக்கு போதும் என கூறி சாதாரண இருக்கையிலே அமர்ந்து அன்றைய நிகழ்ச்சியில் சாதாரண மனிதரைப்போல கலந்து கொண்டார்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் மற்றொரு அடையாளம்:
பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையில், தன் குடும்பத்தினரை சேர்க்காமல், எளிமையை பின்பற்றினார். எளிமையும், ஆடம்பரமின்மையுமே அவரது மற்றொரு அடையாளமாக இருந்தது. இவர்போன்ற ஒரு தலைவர் நமக்கு கிடைக்க மாட்டாரா… என, உலகம் நாடுகளில் உள்ள மக்களையெல்லாம் ஏங்க வைத்தவர். இதுவரை, 13 பேர், இந்திய ஜனாதிபதி நாற்காலியை அலங்கரித்திருந்தாலும், “மக்கள் ஜனாதிபதி” என அனைத்து தரப்பினராலும், ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏகோபித்த பாராட்டை பெற்றவர் அப்துல்கலாம் மட்டுமே. அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தன் 83 வயதிலும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மாணவ-மாணவியர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் சிந்தனைகள்:
அப்துல்கலாமின் சிந்தனையில் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது நாட்டினுடைய முன்னேற்றம் அந்த முன்னேற்றத்திற்கான திட்டங்கள். அந்தத் திட்டங்களின் முதல் காரணிகளான தன் நாட்டு மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கு பின், காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமாரி வரையுள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்திலும் அழுத்தமாக இடம் பிடித்து, அவர்களின் பேரன்பை பெற்ற மாமனிதர் அப்துல்கலாம்தான்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் சிறப்புரை:
தினமலர் மற்றும் டி.வி.ஆர்.அகடாமியின் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் நடந்தது. அதில் அப்துல்கலாம் பங்கேற்று மாணவ-மாணவியர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
அச்சிறப்புறையின் முழுத் தொகுப்பு:
“புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க
எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,
என் சக்தியாலே வெற்றி அடைந்தே தீருவேன்”.
நண்பர்களே! இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை வருடந்தோரும், தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். மாணவர்களை பரிட்ச்சைக்கு தயார் செய்து, மேல்படிப்புக்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தி அதன் மூலம் மாணவர்களை தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுக்கள். இந்த பணி ஒரு அரும் பெரும் பணியாகும். எனவே மாணவ நண்பர்களே! “புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க” என்ற தலைப்பில் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வெற்றிக் கதை:
உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளீர்கள். அதாவது ஜெயித்துக்காட்டுவோம் என்ற உறுதி மொழியைத்தான். இளைஞர்களிடம் உள்ள உறுதியின் அடுத்த பக்கம் என்னால் முடியும் என்பதாகும். நான் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கவிதையின் மூலாதாரம் என்னவென்றால், என்னால் முடியும், நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்பதாகும். அந்த வெற்றிக்கு மூலகாரணமானவைகள் எவை. அறிவு, உழைப்பு, தைரியம், மற்றும் விடாமுயற்சி. என் அன்பு மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவரிடமும் இந்த கவிதையை பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
“நான் பறந்து கொண்டே இருப்பேன்.
நான் பிறந்தேன் அரும் பெரும் சக்தியுடன்.
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்.
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்.
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த.
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்.
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்.
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க.
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
விழவே மாட்டேன்இ ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன்இ,வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்”.
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுப்பதாக அமைகிறது, அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும், என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்க, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை உழை, உழைத்துக் கொண்டே இரு,
இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உங்களை வந்து சேரும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய மாணவன் உலகத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல.
நான் இந்தியாவின் 11
வது ஜனாதிபதியாக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள், ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் அதிகாரிகளாக. தொழில் முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். 
No comments:
Post a Comment