காட்ஸ்பெட்சென்ட்: என் மானசிகக் குருவே, கனவு காண கூறினீர்கள். என் கனவை நிஜமாகும் அதே வேளையில். தங்கள் கனவை நாங்கள் நிஜமாக்குவோம். அதற்கு எப்பொழுதும், எங்களுடன் உறுதுணையாய் இருங்கள். இருப்பீர்கள்…
பிரபாகரா: என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கனவு மெய்பட வைப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். அவர் காட்டிய வழியில் செல்வது எனக்குள் ஒரு நிம்மதியைக் கொடுக்கிறது.
கார்த்திக்: அப்துல்கலாம் மறைவு… இந்த இரு வார்த்தைகளையும் ஒரு வரியில் கற்பனை செய்ததில்லை. இந்தியாவின் ஒவ்வொரு சாதனைகளிலும் அவர் நம்முடன் பயணித்து கொண்டுதான் இருப்பார்.
தாமரைச்செல்வன்: நீங்கள் என்றும் எங்களுடன்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். என்றும் உங்கள் பாதையில்தான் இந்த இளைய சமுதாயம் இருக்கும்.
அப்துல் சுகூர்:
இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஒரு உன்னத மனிதனின் உடல் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளது, தேசிய கொடி பெருமை அடைகிறது.
கோபிநாத்: 2020-ம் ஆண்டில் நமது நாட்டை வல்லரசாக்க நினைத்த மாமனிதரின் கனவை நனவாக்க பாடுபடுவதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
தமிழ்: இவர் இன்று நம் காட்சியில் இருந்து மறைந்தாலும்… என்றென்றும் கனவுகளில் இருந்து மறையபோவதில்லை. இத்தருணத்தில் அய்யாவின் சிந்தனையையும்… கனவுகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாழையடி
வாழையாய் கொண்டு செல்ல உறுதியேற்போம்.
சி.முத்துகுமாரசாமி: கலாம் என்ற மனிதனுக்கு காலம் சலாம் வைக்கிறது. அவரது வாழ்வினைப்போலவே அவரது மரணமும் நமக்கு பாடம் நடத்துகிறது. விஞ்ஞானத்தை படித்தவர்கள் மத்தியில் விஞ்ஞானமாய் வாழ்ந்த மெய் ஞானி. பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி. கலாம் காலமானார். ஞாலம் சலாம் சொல்கிறது!.
சா.சொற்செழியன்: இவ்வுலகின் தலைசிறந்த மாமனிதரை நாம் இழந்து விட்டோம். அவருடைய கனவு இந்தியா 2020-ல் வல்லரசு. அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
கே.தணிகைவேல்:
இந்த மாதிரி ஒரு மனிதனை இந்த உலகம் பார்க்க முடியுமா. இனி மேல் இப்படி யாரும் பெயராக போவதில்லை.
கே.குபேர்:
No
words to express the loss!
பவித்ரா: Doctor
A.P.J Abdul Kalam is an great leader of our India. We lost him, this is a great
lost to our country, and we should try to achive his dream.
ஏ.எம்.குமரவேல்: இவரை புகழ்வதற்கு இவரைவிட உயர்ந்த வார்த்தைகள் இல்லை! இறைவா இவரைப் போன்று உயர்ந்த எண்ணம் படைத்த மனிதரைத் தாருங்கள்.
நவ்ஃபால்: சின்ன குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாருடைய மனதையும் வென்ற ஒரே மனிதருள் மாணிக்கம். உண்மையான மதச்சார்பற்ற வெள்ளுள்ளம் படைத்தவர். தன் ஒட்டு மொத்த வாழ்கையையும் நாட்டுக்காக அர்பணித்த உண்மையாளர்.
நாகேஷ்: மாமேதை அய்யா அவர்களே எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் எண்ணமும் பார்வையும் இந்தியாவின் மீதே பதிந்திருக்கும். இந்தியாவை விட்டு உங்களை பிரிக்க முடியாது. உங்களைவிட்டு இந்தியாவும் பிரித்து பார்க்க முடியாது. மீண்டும் வாருங்கள்.
ராஜேஷ்: மாணவர்களின் வழிகாட்டிக்கு என் இதய அஞ்சலி.
மொஹமத்: விண்ணை நோக்கி செலுத்திய கலங்களை கானசென்றாயோ கலாமே! இந்தியா இன்னும் பல விண்கலங்களை செலுத்தி உம் கனவை தொடரும்! உம்மை காலம் மறவாது! இந்திய விண்கலமும் மறவாது.!
அனந்தகிருஷ்ணன்: இனி எங்கள் கனவில் நீங்கள் தான் ஐயா…!
தியாகராஜன்: அணுவிஞ்ஞானி, ஆசிரியர், அரசியல் பதவி வகித்த ஒரு எளிய மனிதர். இதற்குமேல் இளைஞர்களுக்கான ஒரு தலைசிறந்த முன்னோடி. இருக்கும்போதும் மெச்சினோம், பிரியும்போதும் மெச்சுவோம், அவரது சாதனைகளுக்காக. நமக்கு அளித்த உத்திகளுக்காக…
மஹேஷ்வரன்: மனிதன் பாசமிகுந்த தலைவன் உண்மையான நாட்டு பற்று மிக்க இந்தியன்.
மணிகண்டன் மது: He
was a great visionary and real example of simplicity. We are really missing you
sir! RIP Abdulkalam! We are really working hard to achive your dream. Jai Hind!
சார்லஸ் செல்வராஜ்:
A
good human being in the world, thinking always about others i.e world and
people. let us try live him atleast think this way from today onwards.
கே.பாலமுருகன்:
அன்பு, அறிவு, அடக்கம், பன்பு அனைத்தும் ஒருங்கே உள்ள அமைதிப் புறா அடங்கிவிட்டது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
கீழை ஜஹாங்கீர்:
ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் கூட ஆடம்பர பங்களாவில் வாழும் இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல்கலாமின் குடும்பம் இன்றும் இராமேஸ்வரத்தில் மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து வருவதே அப்துல்கலாமின் நேர்மைக்குரிய அடையாளமாகும். பெரியவர் அப்துல்கலாமின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் இந்தியன் சேதஷியல் ஃபோரம் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.
சி.தட்சிணாமூர்த்தி:
நாம் நமது நாட்டின் ஏவுகணை தந்தையை, மக்களின் ஜனாதிபதியை இழந்துவிட்டோமே. அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோமே.
ஜெயந்தி: மிகவும் உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த அற்புதமான, அனைவராலும் விரும்பப்பட்ட குறிப்பாக மாணவர்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவரை நாடு இழந்து தவிக்கிறது.
இளங்கோவன்: கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த மாமேதை. இவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். சொந்த நலனை விடுத்து நாட்டைப் பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்த உன்னதர். உயரிய அறிவியல் தொழில்நுட்பங்களை பிற நாடுகளின் துணையின்றி நம் நாட்டிலேயே உருவாக்கி, தேசத்தை தலை நிமிரச் செய்தவர். எளிமையை தன் ஆபரணமாகக் கொண்டவர். இவரை ஜனாதிபதி ஆக்கி இந்தியா பெருமை தேடிக் கொண்டது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். ஒரு ஆசிரியராக இருக்கவே விருப்பம் கொண்டவர். இறுதியில் கல்லூரி ஆசிரியராக உரையாற்றும் தருணத்திலேயே தன்னை இறைவனிடம் ஒப்படைத்துக் கொண்டார். நேர்மையான வழியில் கடின உழைப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்து நாட்டுக்காக வாழ்ந்த கடைசி மனிதனையும் இந்தியா இழந்து விட்டது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் காட்டிய வழியில் இந்தியாவை 2020-க்குள் வளர்ந்த, எல்லோருக்குமான, திறன்மிகுந்த நாடாக உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அய்யா எம் மனதில் என்றும் நீர் வாழ்வீர்.
விஜயானந்: தமிழனின் அடையாளம். இந்தியாவின் அணுத் தொழில்நுட்பத்தின் அதிசயப்பாத்திரம் அவரின் இதயம் இயங்காமல் நின்றுபோனது. அந்த எளிமையின் நாயகனுக்கு மாணவர்களின் பிதாமகனுக்கு கண்ணீர் அஞ்சலி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தர்மபுரி.
மொஹமத் நயீம்: “உன் அழுகையைப் பார்த்து உன் தாய் சிரித்த ஒரே ஒரு நாள் அது உனது பிறந்த தருணம்!” “தூக்கத்தில் பார்ப்பது கனவு அல்ல உன்னை தூங்கவிடாமல் செய்வது தான் கனவு!” இதுவெல்லாம் நீங்கள் எங்களை ஊக்கப்படுத்த சொல்லியது! “நல்ல மனிதருக்கு மரணம் இல்லை, மாறாக அவரின் நல்ல சிந்தனைகள், நல்ல பண்புகளை கடைசி ஒரு மனிதன் பின் பற்றும் வரை அவர் நம்மோடு இருப்பார் எண்ணம்/சிந்தனையாக!” ஒப்பற்ற தலைவருக்கு இது என்னுடைய புகழஞ்சலி.
ரியாஸ்: மனிதருள் மாணிக்கம் என்று நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேருவுக்குப்பின், மக்கள் தலைவர் என உலகெங்கும் வாழும் இந்தியர்களால் ஏற்று போற்றப்பட்ட மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள். இளஞ்சிறார்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள், பெண்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினர்களாலும் முழு மனதோடு நேசிக்கப்பட்ட குழந்தைகள் திலகம் அவர். கட்சித் தொண்டர்களால் நேசிக்கப்படும் தலைவர்கள் ஆயிரம் பேர் தோன்றலாம். தூய மனதோடு நேசிக்கப்படும் தலைவர்கள் அரிதிலும் அரிதாக சிலரே தோன்றுவர். அந்த வரிசையில் காந்தி, நேரு இப்போது அப்துல்கலாம். அறிவியல் ரீதியாக அவர் ஆயிரம் சாதிக்கலாம். மக்கள் மனங்களை வென்றதுதான் அவரின் மகத்தான சாதனை. இறைவன் அவரை பொருந்திக்கொள்வானாக.
டி.செல்வராஜன்:
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். பொது நலத்தொண்டிற்கு உதாரணபுருஷ்னாய் வாழ்ந்த மகாமனிதர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இ.பிரபு: நாட்டின் கடை கோடியில் பிறந்தாலும் நமது பெருமையை உலகம் முழுவதும் எடுத்து சென்ற மாமனிதர். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த உதாரணம். ஆன்மா அமைதியில் உறங்கட்டும்.
தனபாலன்: நாடு ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டது இன்னொரு காமராஜர்.
பவா: அய்யா, மனிதன் கடவுள் ஆவது உங்களுக்கு மட்டுமே பொருத்தம். இல்லாதவொன்றை இறைவன் என்று சொல்லி அடித்துக்கொள்ளும் உலகம் திருந்தி இவர் போன்ற மாமேதைகளின் சொற்களை பின்பற்றி நல்வழியில் வாழ புத்தி கொடுப்பாயாக…
பரிவழகன்: இறுதி நிமிடம் வரை இந்தியாவிற்கு உழைத்த மாமனிதருக்கு இதய அஞ்சலி! பாரதத் தாயின் பாசப்புதல்வன், இந்திய இளைய சமுதாயத்தின் வழிகாட்டி, ஒப்பற்ற விஞ்ஞானி என்றும் எங்களின் வழிகாட்டி, எங்களின் உந்து சக்தி, அப்துல்கலாம் மறைவிற்கு நம் வருத்தங்களும் வீர வணக்கங்களும். அவரது ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை வணங்குவோம்.
பாலுநாதன்: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் மக்கள் நாயகனை உலகம் இழந்து விட்டது. அவருடைய ஆத்மா அமைதி பெறட்டும்.
தி.குமரன்:
ஒரு உண்மையான தலைவர். கனவுகளின் வலிமையை உணர்த்தியவர். அதன்படி வாழ்ந்து காட்டியவர். நிச்சயமாக இது பேரிழப்பு. அப்துல்கலாம் அய்யா நீங்கள் எங்கள் கனவுகளுடன் என்றும் வாழ்வீர்கள். கனவுகள் இருக்கும் வரை அப்துல்கலாம் இருப்பார்.
ஆர்.கே.தனபாலன்: கனவு காணுங்கள் என்றீர்கள். ஆனால் நீங்கள் இறப்பீர்கள் என்று யாரும் கனவு காணவில்லை உங்களை இழந்து வாடுகிறோம்.
முஜிப்பூர் ரஹ்மான்:
கோடிக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வழிகாட்டி மற்றும் மனம் கவர்ந்த நாயகன், எளிமையின் நாயகன். இவருக்கு என்று தனிக் குடும்பம் கிடையாது. இந்தியாவே இவரது குடும்பம்தான். இவரை இழந்து இந்தியாவே வருந்துகிறது. இந்தியாவிற்கு யார் ஆறுதல் சொல்வது.
பார்த்தி: உழைப்பு, எளிமை, நற்குணம் அதுவே சாதாரண குடும்பத்தில் பிறந்த மனிதனை இந்தியாவின் முதற்குடிகனாக்கியது. இன்றைய இளைஞர்களின் மனதில் நிச்சயம் இவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த நாடு அடையும் முன்னேற்றத்தில் மட்டுமே இவரின் ஆன்மா மகிழ்வடையும்.
ராமதாஸ் ராகவன்:
அறிவியலால் ஏவுகணை தயார் செய்தது மட்டுமின்றி கலாம் ஸ்டண்ட் என்ற குறைந்த எடை கொண்ட கருவியை தயார் செய்ததே அவரது மனிதாபிமானத்திற்குச் சான்று! அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்.
அப்துல் சுகூர்:
இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு உன்னத மனிதனின் உடல்மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. தேசியக் கொடி பெருமை அடைகிறது.
நிரஞ்சனா: ஏவுகணையின் நாயகனே! நீர் எங்களைவிட்டு அடுத்த கிரகம் சென்றது ஏனோ? அங்கும் நீ உனது அறிவியலின் திறமையால் இந்தியாவிற்கு ஏதேனும் நன்மை செய்வாய். என்றும் தங்களின் மனதில் இந்திய நாட்டின் எண்ணம். என்றும் எங்கள் மனதில் உங்களை பற்றிய எண்ணம். இந்தியா 2020-ல் வல்லரசு. இதுவே நாங்கள் உங்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.
சண்முகம்: அவர் எங்கள் பூண்டிக் கல்லூரிக்கு வருகை தந்தபோது சற்று தாமதமாக வந்தார். இரவு 7.20 மணிக்கு மழைவிடாமல் கொட்டியது. ஆயினும் ஒரு மாணவர்கூட நகரவில்லை. எங்கள் பேராசிரியர்களுக்கு மிக பெரிய வியப்பாக இருந்தது. நான் அப்போது மாணவனாக இருந்த தருணம் அதை எந்நாளும் மறக்க முடியாது. மிகவும் எளிமையாக பேசினார். என்னைப் பொறுத்தவரை அவர் இந்தியாவின் தலைமகன். ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறது. என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இறந்து விட்டார் என்பதை.
பவித்ரா: டாக்டர். அப்துல்கலாமின் இழப்பு நம் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. அவர் கனவு நினைவாகமாற அவரின் ஆன்மா அமைதி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அப்சர் சையத்: என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்”. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்னிச் சிறகுகள் நூலின் சிறகுகள் நூலின் முடிவு. உலகம் ஒரு தலைசிறந்த மனிதரை இழந்து விட்டது.
ஃபாரூக்: இமயத்தின் வேரிலிருந்து இடிதாக்கியது. ஈடு செய்ய முடியாத இழப்பு.
பாலா: இராமேஸ்வரத்தில் உதித்து தனது அறிவியல் திறமைகளின் முத்திரைகளைப் பல இடங்களில் பதித்துவிட்டு மாணவர்களின் சக்தி ஆக்கப்பூர்வமாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்று இறுதி மூச்சுவரை உழைத்த அற்புத தமிழ்மகன் அப்துல்கலாம் அவர்கள். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. தாய்மொழி தமிழையும் தமிழ் அறநெறி நூல்களையும் மிகவும் நேசித்த பெரியவர் அவர். திருக்குறள் காட்டிய வழியில் அறத்துடன் எளிமையாக வாழ்ந்த அவர் நமது இளைஞர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். அவரது அறிவுரைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது மண் உலகிலேயே வலிமை பெற்ற மண்ணாக மாற முடியும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
அப்துல்: நல்ல மனிதர், நல்ல தமிழர், மாமனிதர் திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு இந்த உலகத்துக்கு பெரிய இழப்பு
காந்தி: டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மறைவுக்கு தேசமே கண்ணீர் சிந்துகிறது. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இதைப் பார்த்து இனியாவது திருந்தி வாழவேண்டும்!
விஜய்: எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை தந்தவர். நாட்டின் முதல் குடிமகன் ஒரு விஞ்ஞானி. எந்த விதமான உரிமையும் கொண்டாடாமல் அனைத்து கண்டுபிடிப்புகளையும் நாட்டிற்கு அர்பணித்த மாமேதை. சிறந்த தலைவர்களைப் பற்றி வரலாறுகளில் படித்திருக்கிறோம். அத்தகைய மனிதரோடு வாழ்ந்திருக்கிறோம் என்ற நினைவுகளே பிரம்மிப்பு அய்யா.
அமலோற்பவராஜ்: தலைகனம் இல்லா தலைவனே மறக்க முடியுமா? தமிழை மறவாமல் தலைநகரில் கிரீடம் சுமந்தவனே தன்நிகரில்லா தமிழ்தாயின் தவப்புதல்வனே. எப்படி மறப்போம்? இனி எங்கே காண்போம்?
அரா. சுதர்ஷணன்:
அப்துல்கலாம் ஒரு மகான் சிறந்த பண்பாளர் இவரை போல் இனிமேல் ஒரு ஜனாதிபதி இந்தியாவிற்கு கிடைப்பது மக அரிது. இவர் இனிமேல் சொர்க்கத்தில் நிரந்தர வாசம்.
ஃப்ரான்சிஸ் திவாகர்:
ஒரு கனவு இன்று காலதேவனோடு கை குலுக்கச் சென்று விட்டது. ஏ காலனே! எங்கள் கனவை ஏன் கலைத்தாய் கொடூரனே திருப்பி கொடு எங்கள் கனவுகளுக்கு அக்னி மூட்டியவனை. அக்னியின் கனவாக வல்லரசை நாங்கள் அமைக்கும் வரை.
ச.ரெகுநாதன்:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஒரு நல்ல விஞ்ஞானி, நன்கு படித்த பேராசிரியர், இந்திய திருநாட்டின் மூத்த குடியரசு தலைவர், பிரம்மச்சாரி, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், மிகக் கடின உழைப்பால் உயர்ந்து இந்தியாவை வல்லரசாக்க அல்லும் பகலும் கனவு கண்டவர். குழந்தைகள், மாணவர்களிடையே அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர். மாணவ செல்வங்களே இந்தியாவின் எதிர்கால சொத்து. சைவ சாப்பாட்டினை மட்டுமே ருசித்தவர் என்றோ அவரை நாம் நினைவு கொண்டாலும் அவர் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் மனிதர் என்பதே எல்லோராலும் ஏகோபித்து புகழப்படுவார். அவரது இழப்பு உண்மையிலேயே இந்தியாவிற்கு மாபெரும் இழப்பு. “தோன்றின் புகளோடு தோன்றுக…” என்ற வள்ளுவர் கூற்றிற்கிணங்க வாழ்ந்து உயர்ந்த உயரிய ஆத்மா. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
இப்ராஹிம்: மக்களோடு மக்களாக மாபெரும் வித்தியாசமாக ஒன்றாக இனப்பாகுபாடின்றி எல்லோரும் ஒன்றாக மாணவனுக்கு ஆசிரியராக. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்நின்று முதல் நின்று மூத்தவராய் இருந்தவர் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறக்க முடியுமா இந்த மாமனிதரை.
அருணா: இந்தியாவை வல்லரசாக்கிய எங்கள் கதாநாயகனே! நீர் உடலால் மறைந்தாலும் நீர் தந்த அறிவுச்செல்வம் என்றும் மறையாது. எங்கள் மனச்சுவரில் பதிந்த மாமேதையே எளிமையைப் போற்றிய மகானே உம்மைபோல் பலர் வேண்டும் இந்தியாவிற்கு. இருந்த உம்மையும் விட்டுவிட்டோம்… எங்களுக்கு யார் ஆதறுதல் சொல்வார்கள்?...
கே.எம்.பாண்டியன்: தியாகம்… அர்பணிப்பு… உன்னத வழிகாட்டி… ஓராயிரம் வார்த்தை போதாது உன் புகழ் சொல்ல!
ஜே.ஜெதீஸ்வரன்: சொர்க்கம் பயணிக்கும் ஏவுகணை, உலகமே உறைந்து கிடக்கிறது, செயற்கைகோல்களும் இயற்கையாக அழுகிறது. காரணம் இயற்பியல் ஒன்று இறந்து கிடக்கிறது. 120 கோடி மக்களின் அழுகை சத்தம் அகிலம் முழுதும் கேட்கும். தலைமுறைகள் தாண்டி இந்த தலைவன் புகழ் நிலைக்கும். தமிழகம் தந்த தன்னிகர் இல்லா தலைவன். தன்னலம் இல்லா எளிமை காட்டும் மனிதன். மூத்த குடிமகனாக மூன்றாவது தமிழர் உலகம் வியக்கும் உன்னதமான மனிதர். தமிழும் தன்பெருமை பேசும் இயற்பியலும் இறுமாப்பு கொள்ளும் பாரதமும் கர்வம் பாடும் உன்னாலே. நேற்று எங்களின் பெருமை நீயே! இன்று எங்களின் அழுகை நீயே! என்றும் எங்களின் இதயம் நீயே! விண்நோக்கி செல்கிறது ஏவுகணை ஒன்று! தந்துவிட்டு செல்கிறது வேதனை இன்று! நீ தந்துவிட்டு செல்கிறாய் மாபெரும் வெற்றிடம் அதை நிரப்ப முடியவில்லை என்றாலும் உன்னை மறப்பதில்லை.
கே.குமார்.
தாங்கள் பிறந்த இந்த தமிழ் நாட்டில் நானும் பிறந்தேன் என்பதே எனக்கு பெருமை அய்யா. கண்டிப்பாக இந்தியா வல்லரசாக இந்த நிமிடம் முதல் உறுதி மொழி ஏற்கிறேன்.
யோகி: “இந்த இழப்பை தாங்கும் அளவுக்கு இந்தியாவிடம் (அணு) சக்தி இல்லை.
கண்ணன்: இளைஞர்களை நல்வழியில் பயணம் செய்ய வைத்தவர். ஐயாவின் பேரிழப்பு தாயகத்திற்கு பெரும் இழப்பு. ஐயா உமது கனவை நனவாக்க நாங்கள் அயராது உழைப்போம் ஐயா, தாங்கள் இறக்க வில்லை என் போன்ற இளைஞர்களின் நெஞ்சில் வாழ்கிறீர்கள் ஐயா.
ஆர்.ராஜேஸ்:
எளிமையின் சின்னம்- மனிதநேயமிக்க மகான் மகத்தான தலைவரை நாம் இழந்துவிட்டோம். இதுபோல் ஒரு தலைவரை இனி நாம் பார்க்க முடியுமா?
என்.என்.லக்க்ஷ்மணன்: இவர் ஒருவரை தவிர வேறு யாரும் இந்த பதவியில் அவர் வழி நடக்கவும் முடியாது. இனி காணவும் முடியாது. அவர் ஆன்மா சாந்தியடைய நான் மனமுருகி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அஜீஸ் லூஃப்துல்லா: இரண்டு வாரங்களுக்கு முன்புகூட அவருடன் அவருடைய ஏவுகணை காலத்திய நண்பர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார்: “குழந்தைகள் தம்முடைய பெற்றோரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாய்ப்புக்கேடாக இப்போதெல்லாம் அது நடப்பதில்லை”. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவர் சொன்னார்.” “முதியவர்களும் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். பெரும் அளவில் சொத்து சேர்த்துவிட்டுச் செல்லக்கூடாது. அது குடும்பத்தில் பகையையும் பிணக்கையும்தான் ஏற்படுத்தும். இரண்டாவதாக, பணியாற்றிக் கொண்டிருக்கிற வேளையில் எந்தவிதமான நோயோ பிணியோ வாட்டாத நிலையில் இறந்துபோகிறவர்கள் பேறு பெற்றவர் ஆவர். Good
byes should be short, really short பிரிந்து செல்வதும் மிகச் சுருக்கமான, மிக மிக சுருக்கமான நேரத்தில் நடந்து முடிந்துவிட வேண்டும். அப்துல்கலாமுடன் அவரின் உதவியாளராகச் சில ஆண்டுகளாகச் செயலாற்றி வந்த ஸ்ரீஜன்பால்சிங் எழுதிய குறிப்பிலிருந்து…
அஷெர்: மிக அருமையான மரணம். கோடிக்கணக்கான மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் நேசிக்கப்பட்டவர்களுக்கே இப்படிப்பட்ட மரணம் வாய்க்கும்.
அணைக்கட்டு பாலா: பிறக்கலாம். இறக்கலாம். ஆனால் ஆவீரோ ஒரு கலாம்.
எஸ்.கே.சங்கர்: குழந்தைகளின் மாணவர்களின் மக்களின் மனம் கவர்ந்த மாமனிதரை இழந்துவிட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
எஸ்.தியாகராஜ்:
கடவுளின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றின் இறுதி பிரதி இன்று (27.07.2015). ஆனால்இ இச்சிறந்த படைப்பு மாந்தருள் என்றென்றும் நீங்கா வண்ணம் உடையது. ஆம் ஐயா அப்துல்கலாம் அவர்கள் சாலச்சிறந்த மாமனிதர்.!
ஐஸ்வர்யா: இந்த நல்ல உள்ளம் இறைவனுக்கும் தேவைப்பட்டது போலும்! அழைத்து சென்றார் நம்மை துயரத்தில் ஆழ்த்தி! மக்களின் தலைவருக்கு ஆழ்ந்த இரங்கல். இவரது ஆன்மா இறைவனது நிழலில் இளைப்பாரட்டும்.
ஜெயா சரவணன்:
இந்த மாமனிதரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியாக செயல்பட்டார். கனவு காணுங்கள் என்கின்ற விதையை விதைத்தவர். அனைவராலும் விரும்பப்பட்ட மிக சிறந்த மனிதர். இந்தியாவின் தென்கோடியில் பிறந்த இவரின் மூச்சு வடகோடியில் நின்று போயிருக்கிறது. இந்திய நாட்டுக்கும், தமிழ் நாட்டுக்கும் இவரது மரணம் பெரும் இழப்பு. இவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ராமமூர்த்தி: படிப்பையும், பதவியையும், பணமாக்கும் வித்தை தெரியாத, விந்தை மனிதர்இ பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள்.
வி.பார்த்திபன்:
எங்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த எங்களின் மக்கள் குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் உங்களின் புகழ் இவ்வுலகம் அழியும் வரை நீடிக்கும்இ உங்கள் வாழ்வின் இலட்சியத்தை- இந்தியா 2020-ல் அடைய நாங்கள் பாடுபடுவோம்.
ஜிவிஏ: காலம் உள்ளவரை கலாம் அவர்களின் பெயர் இந்த உலகில் நிலைத்து நிற்கும்.
ராமச்சந்திரன்: மதம், மொழி கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாமனிதர். வாழ்வதற்கு வேண்டிய வழிகளை இளைஞர்களுக்கு வகுத்துக் கொடுத்தவர். டாக்டர். அப்துல்கலாம் என்றும் மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்பார்.
ந.திலகம்:
அறிவுக்கோள் விண்னை நோக்கி புறப்பட்டது.
ஏ.ராஜா: அக்னி சிறகுகள் ஒரு நாளும் மரிப்பதில்லை…
குமாரவேல்: அவர் கனவுகள் உண்மையாகும் என நம்புவோம்.
செந்தில்: மேகாலயாவின் மேகங்களில் மரித்தாலும் மேதகு அப்துல்கலாம் எங்கள் உள்ளங்களில் எந்நாளும் மறவாது வாழுவார்.
சுரேஷ்: “சென்று அங்கேயே தங்கி விடாதீர்கள் திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களே. திரும்பி வாருங்கள் உடனே. உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்”. இப்படிக்கு இந்தியர்கள்.
அசோக்: இதயம் நின்றாலும் அவர் ஆன்மா இந்தியாவை சுற்றி வரும். மறக்க முடியாத மாமேதை.
ராம்: தன் வாழ்நாள் முழுவதும் தாய் நட்டுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்பணம் செய்த கடவுள் அவர். அவரின் கனவான 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாற்ற இன்றைய இளைய தலைமுறையாகிய நாம் சூளுறைப்போம்.
இரமேஷ் சதாசிவம்:
இளைஞர்களின் மனதில் எழுச்சி தீபங்களை ஏற்றிவிட்ட அவர் என்றும் ஒளிர்கிறார்.
ஹெச்.ஹீசைன்:
நாட்டின் உயரிய ஜனாதிபதி பதவியில் இருந்தபோதும் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காதவர் தன்னலம் கருதாது நாட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர். பதவியில் இருக்கும்போது 5 அடுக்கு பாதுகாப்பை விரும்பாதவர், தன் பாதுகாப்புக்காக ஒரு சாதாரண காவலரை வைத்துகொண்டவர். ஒரு தலைசிறந்த தலைவரை இந்திய திருநாடு இழந்தது. சொர்க்கத்தில் இறைவனின் நல்லடியார் கூட்டத்தில் சேர்த்து வைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
சி.மு.நாட்ராயன்: இந்திய உலகில் ஒரு மிகப்பெரிய வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார். அவரது காலத்தில் அது நிறைவேறவில்லை. இனியாவது அவரது கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.! சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
ஜெய்.ரமணா: நம்பிக்கை முனையில் இருந்து வந்த இளைஞர்களின் தன்னம்பிக்கை முனை உதிர்ந்துவிட்டது எனலாம்.
எஸ்.செல்வராஜு:
சிறந்த மாமனிதர். அறிவியல் சிந்தனைக்கு வித்திட்டவர்.
சுந்தரேசன்: இந்தியத் தாயின் நன்மகன் மறைந்துவிட்டார். அவரது கனவுகள் என்றும் மறையாது. கண்ணீர் மல்க.
என்.நூர்தீன்:
இறுதி வரை மாணவர்களுக்காகவே வாழ்ந்து மாணவர்களின் இடையே மரணித்தார்.
குருநாதன் கோபாலகிருஷ்ணன்: இந்தியாவின் கடைகோடியிலுள்ள இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931-ம் ஆண்டு பிறந்த அப்துல்கலாம் அவர்கள் நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவியை தன் கல்வியால் அடைந்தவர். கல்வி ஒருவரை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். தாய்மொழி கல்வியின் பலனை முழுமையாக உணர்ந்த எளிமையின் உருவாக நம்மிடமிருந்து இவர் இன்று (27.07.15) அன்று
இயற்கை எய்தினார்.
ஸ்ரீபாலாஜி: இந்தியா என்னும் ஏவுகணையே சாய்ந்து விட்டது. இந்தியாவுக்கு இந்திய அறிவியல் துறைக்கு எதிர்பாராத பெருத்த இழப்பு! அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ரமேஷ் சர்கம்:
“ராக்கெட் விஞ்ஞானி” என்று அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட அப்துல்கலாம் சிறிது நேரத்திற்கு முன்பு நம் எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்தார். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு இழப்பு. அவரைப்போல், ஒரு படித்த, பண்பான மனிதர் நமக்கு இனி கிடைப்பாரா என்பது சந்தேகம். எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று.
எஸ்.ஷாகுல்:
மத நம்பிக்கைகளைக் கடந்த, மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த அறிய மாமனிதர், யுக புருஷன். நாட்டின் சுயநலமில்லாத, உண்மையான, நாட்டிற்காக வாழ்ந்த தலைவரை இழந்துவிட்டோம். எந்த ஒரு தலைவரும், மக்களும் குறை சொல்லி கேட்டதில்லை.
என்.நல்லபெருமாள்:
தனது இறுதி மூச்சு வரையிலும் இளைய தலைமுறையினரை வழி நடத்தி செல்வதை கடமையாகக் கொண்ட கர்ம வீரர்.
சுதாகர்.ஜி. அப்துல்கலாம் அவர்களுக்கு நன்றி.. கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை உருவாக்கியதற்காக. எங்கள் கனவுகளை நிஜங்களாக மாற்றுவோம்.
தேவானந்த்: ஓர் ஒழுக்கமான தமிழன் இந்திய ஜனாதிபதியாக இருந்தபொழுது அரசு செலவுகளை குறைத்தும், ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், மாணவ-மாணவியர்களிடம் அன்பை காட்டியவரும், அரசியலில் நேர்மை, தூய்மை என்று இருந்தவரும்தான் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
எஸ்.கிருஷ்ணமூர்த்தி:
முன்னாள் குடியரசு தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, மக்களின் ஜனாதிபதி, தூயவர். இன்னும் நம்முடன்தான் வாழ்கிறார். அவர் மறைய மாட்டார்.
வேந்தன் கருப்பையா:
இந்தியாவின் ஈடு இணையற்ற மாபெரும் அறிவியல் அறிஞர்! அறிவியல் உலகில் இந்தியாவின் ஆளுமையை நிலை நாட்டிய பேரறிஞர்! தன்னலங்கருதாது நாட்டிற்கு உழைத்த நல்லவர்! இளையதலைமுறையின் வலிமையை உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி காட்டிய பெருந்தகை! வாழ்க! நீ எம்மான்! ஓங்குக நின் புகழ்!!
கஸ்தூரிரங்கநாதன்: சமீபத்தில்தான் இராமேஸ்வரத்தில் அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை காணும் பாக்கியம் கிட்டியது. மனிதருள் மாணிக்கம்.
பிரேம் குமார்:
இந்திய இளைய சமுதாயத்தின் நம்பிக்கை ஒளியாக திகழ்ந்து, அவர்களுக்காகவே வாழ்ந்த அபதுல்கலாம் அவர்களின் மறைவு செய்தி பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மிகப்பெரிய மேதையாகவும்- நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்திருந்தாலும் மிக எளிய வாழ்க்கையை கடைபிடித்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக வாழ்ந்ததால்தான் அவர் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படுகிறார்.
கே.கதிர்வேலு:
2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர். அதைக் கண்டு களிப்புறாமல் 4 ஆண்டுகளுக்கு முன்னரே மரணமடைந்து விட்டார். இவரைப் போன்று மக்களுக்கு ஊக்கமளித்து வல்லரசாக்கும் வல்லமை யாருக்கும் இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்.
தீனதயாளன்: ஏவுகணை நாயகனே எமை விட்டு ஏன் பிரிந்தாய். விஞ்ஞானத் தமிழுக்கு விந்தை சேர்த்தவரே அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவை இந்தியாவை எட்டிக்கொண்டு பார்க்க வைத்தவரே… இளைஞர்களின் உணர்வில் வாழ்வியலால் எழுச்சி காண வைத்தவரே… அறிவியல் உள்ளவரை வாழும் உம் பெயர் இருக்கும்.
ஆர்.ரவிஷங்கர்:
தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த மாமணியே உன் புகழ் இவ்வுலகில் பலநூற்றாண்டு நிலைத்து நிற்க இறைவனை வேண்டுகிறேன்.

No comments:
Post a Comment