Tuesday, 31 May 2016

“காலத்தை வென்ற கலாம்” (1931-2015) (பக்கம் 55-60)




என்.கே.என்.கிருஷணமூர்த்தி: பேரிழப்பு, தலைசிறந்த விஞ்ஞானி, மாமனிதர். மாணிக்கங்களுள் தலை சிறந்த மாணிக்கம். ஆன்மா இறைவனது திருவடிகளில் நிரந்தர அமைதி அடைய இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.
கே.கே: கீதை வாசிப்பதையும், வீணை வாசிப்பதையும் அவரது மதநம்பிக்கைகள் தடுத்ததில்லை. போலிதனமற்ற உண்மையான மதசார்பின்மை அவரது ஆத்மாவில் கலந்த ஒன்று! மிகப்பெரிய இழப்பு- உலகத்துக்கே!
ஹரிஹர சுப்பிரமணியம்: கனவு காண சொன்ன கலாம் அய்யா காலமாகி விட்டார். நிகழ்காலத்தில் நிஜத்தை எதிர்காலத்திற்கு எட்டி பார்க்க வைத்த நிஜ மனிதர் நிழலாகி விட்டார். இனி ஒரு பிதாமகர் இவரை போல வருவாரா? தேடி தேடி விழிகள் இரண்டும் இனி வீக்கம் காணப்போவது நிஜம் The Demise of Dr.Abdulkalam will be a irreparable loss to the society of India.
அசோக்: இதயம் நின்றாலும் அவர் ஆன்மா இந்தியாவை சுற்றி வரும். மறக்க முடியாத மாமேதை.
செந்தில்: நம்முடைய அடையாளம் ஒன்று இன்று அழிந்துவிட்டது என்பதே உண்மை. மீட்க முடியாத இழப்பு. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பது நம் பெருமை.
பிரேம்: தமிழனின் இறுதி மூச்சு உள்ளவரை உங்கள் பேச்சு இருக்கும். இது ஒறுதி.
தியானேஸ்வரன்: இந்தத் தலைவரை இழந்தது, நம் இந்தியாவுக்கு பெரிய இழப்பு.
செந்தமிழ் செல்வன்: குழந்தைகளின் மாணவர்களின் மக்களின் மனம் கவர்ந்த குடியரசுத் தலைவரை, மாமனிதரை இழந்து விட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
அருண்: மரணத்தை வெல்ல மனிதனால் முடியாது. இல்லையேல், அதையும் வென்று சரித்திரம் படைத்திருப்பாய். சரித்திர நாயகருக்கு சல்யூட்.
பவித்ரா: A.P.J.Abdulkalam is an real Hero. We lost him. This is an great lost to us. The young citizens of India should try their best to achive his dream.
எம்.மணி: நாம் ஒரு மிக சிறந்த மனிதரை, தலைவரை இழந்து விட்டோம். இறுதி வரை மாணவர்களுக்காகவே வாழ்ந்து மாணவர்களின் இடையே மரணித்தார். இறக்கும்போதும் ஆசிரியராக, எங்கள் ஆசான் அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்.நம்பிராஜன்: இந்தியா ஜனாதிபதி என்ற பதவியை கொடுத்து 12 பேரை அழகுபடுத்தியிருக்கிறது. ஆனால் அந்த ஜனாதிபதி என்ற பதவிக்கே அழகுபடுத்தியது இவர் ஒருவர் மட்டுமே. இந்தியா வல்லரசாகும் என்று அதீத கனவு கண்ட கடைசி நபரும் முன்னாள் ஜனாதிபதியுமானவர் டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம்.
சுகுமார்: சாதி, மத இன, வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் அன்பு பாராட்டப்பட்டவர் அப்துல்கலாம் அவர்கள். இந்தியாவிலேயே படித்து உலகம் போற்றும் ஏவுகணை விஞ்ஞானியான அப்துல்கலாம் ஓர் சுதேசி வார்ப்பு. இந்தியாவை உலக அரங்கில் ஓர் வல்லரசாக காட்டிய பெருமை அவரை சாரும். அவரை குடிமகனாக பெற்ற பெருமை இந்தியாவை சாரும் இறுதிவரை எளிமையாக வாழ்ந்த அப்துல்கலாமின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
.மயில்சாமி: உலகக் குழந்தைகளின் முன்னுதாரணம், இளைஞர்களின் வழிகாட்டி, எளிமையின் உயிர் வடிவம், தலைவர்களின் தலைவர், இன்று நம்மோடு இல்லைஉலகமே இருண்டுவிட்டது போன்றதொரு அச்சம் உண்டாகிறது. அவரது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் தருவதே நாம் அவருக்குச் செய்யும் நினைவஞ்சலி ஆகும்.
செ: என்னே விந்தை! இந்திய நாட்டின் தென்கோடியில் பிறந்து வடக்கே இமயமலைப் பகுதியின் கிழக்கு எல்லையான ஷில்லாங் நகரில் காலமானார். தன் வாழ்வில் இந்தியாவை தன்னுள் கொண்ட பெருந்தகை டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாம். “மக்களின்என்ற சொல்லின் மகத்துவத்துக்கு இந்தியா கண்ட ஒருவர் உண்டெனில் அவர் இவரே. “மக்களின் தலைவர்அப்துல்கலாம் அவர்கள். The peoples’ President of India.
சண்முகம் சுந்தரலிங்கம்: மக்களோடு நெருங்கியே இருந்த ஒரே ஜனாதிபதி. மிக சாதாரண குடும்பப் பின்னணி கொண்டு மிகப்பெரிய புகழ் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்துடன் தனது இறுதி காலம் வரை சிறந்த ஆலோசகராக விளங்கினார். இவர்மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஜனாதிபதிஎனக் கருதப்படுகிறார்.
எம்.மங்களேஸ்வரி: என் மண்ணின் மைந்தனே எங்கே சென்றாய்உன்னைத் தேடி என்னுள்ளம் விண்கலம் தேடிச் செல்கிறது.
பி.பரத்: இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மாமனிதரை இந்திய நாடு இழந்து வாடுகிறது. அவரது ஆன்மா இளைஞர்களுக்கு வழிகாட்ட பிரார்த்திக்கிறேன்.
ஜி.கணேஷ் குமார்: என் உயிரினும் மேலான என் கனவு ரோல் மாடல் இறந்துவிட்டார். அவருக்கு கண்ணீர் மல்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்!.
ஆர்.ஆர்.கலையரசன்: மிகச்சிறந்த ஞானம் படைத்த ஒரு நல்ல மனிதரை இன்று நாம் இழந்திருக்கிறோம். அவரது மறைவு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பு. அவர் காட்டிய வழியை பின்பற்றி நடக்க முயலுவோம்.
ராஜ தேவபாலன்: நல்ல மனிதர். நல்ல தமிழர். பதவி பணியாற்றுவதற்கே பொருள் சேர்பதற்கு அல்ல என்று வாழ்ந்து காட்டியவர். தமிழ் உலகம் அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கான சிறப்பை சரிவர செய்யவில்லை என்பது மனம் வருத்தம்.
ஜெயபாலன்: இதயம் மிக கனத்திருக்கிறது. இளைய தலைமுறை வழிகாட்டிகள் மறைந்துகொண்டு இருக்கிறார்களே. அவருடைய கனவுகளை நனவாக்குவோம்.
எஸ்.எம்.சுரேஷ் முராஹரி: உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் .பி.ஜே.அப்துல்கலாம் அவர்களே. இந்திய அறிவியலின் தந்தையே, கடைசி மூச்சு உள்ள வரை மாணவர்களிடையே உரை ஆற்றிய பெருந்தகையே, உன் கனவுகள் நிச்சயம் நனவாகும், உங்களுக்கு இந்திய மக்களின் சல்யூட்.
டி.எஸ்.திருஞான சம்பந்தன்: உலகம் ஒரு தலைசிறந்த மனிதரை இழந்து விட்டது. அன்னாரின் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் அமைதி பெறட்டும்.
சக்திவேல்: எந்தத் தலைவர் இறந்த செய்தியை கேட்டதும் சற்று நேரம் கொஞ்சம் வருத்தத்தை தரும். ஆனால் திரு..பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் இறந்த செய்தியை கேட்டதிலிருந்து அவரது இழப்பு குடும்பத்தில் உள்ள ஒருவரை இழந்ததைப் போன்று மனம் முழுவதும் பாரமாக இருக்கிறது. இந்தியா வல்லரசாக வேண்டும் அவரது கனவு நனவாகவும் அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் மனதார பிரார்த்திக்கிறோம்.
டுவிட்டர் புகழஞ்சலிகளில் சில:
P.சிதம்பரம்: அப்துல்கலாமின் மறைவை ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனிப்பட்ட இழப்பாக கருதி வருத்தம் அடைகிறார்கள். அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்புக்குரியவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் அப்துல்கலாம். இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர், படித்தவர், பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் என அனைவரின் அன்புக்கும் உள்ளானவர்கள் சமீபகால வரலாற்றில் சிலரே.
நடிகர்.ரஜினிகாந்த்: மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் அப்துல்கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து கொண்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் காந்திஇ காமராஜர், பாரதியாரை எல்லாம் நேரில் பார்த்ததில்லை. அப்துல்கலாமைத்தான் நேரில் பார்த்திருக்கிறேன். மகாத்மாவான அப்துல்கலாம் காலத்தில் நான் வாழ்ந்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன். மிக சாதாரண எளிமையான குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர் அப்துல்கலாம். அவர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றாலும் இறுதிவரை எளிமையுடன் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர்: முன்னாள் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி. அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்த அசாத்திய மனிதனுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது.
கைலேஸ் சத்யார்தி: சமகாலத்தில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கதாநாயகனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம். அப்துல்கலாம், தொலைநோக்கு பார்வைக்கான ஆற்றலாக திகழ்ந்தார். நம் அனைவருக்குமான உற்சாகம் அவர்.
சிடன் பகட்: இந்தியாவின் நாயகனை இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.
Office of RG: அப்துல்கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்.
சசி தரூர்: இந்திய கலாச்சாரம் கொண்டிருக்கும் எதிர்காலத்துக்கான வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த தொலைநோக்கு கனவை அனைவரது மனதிலும் விதைத்தார் அப்துல்கலாம்.
அஸ்வின் ரவிச்சந்திரன்: இந்தியா 2020- கனவை நினைவாக்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலி தன்னலமற்ற ஆன்மாவாக திகழ்ந்த உங்களுக்கு எங்களது நன்றிகள்.
கிரண் பேடி: வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சை சுவாசித்துவிட்டார். அரிய பணியாற்றி சென்றுவிட்டார்.
R.பார்திபன்: பிரம்மச்சாரி ஆயினும் நாடே உறவென வாழ்ந்து தன்னலமற்ற தனிப்பெரும் சக்தியாய் அப்துல்கலாம் கடந்து இளைஞர்களின் மனதில் வாழும் அவர்களின் கனவை நனவாக்குவோம்.
பா.தனலட்சுமி: பாரதமே உனது தலை சிறந்த தலைமகன் மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.! மீண்டும் அவரை எங்களுக்கு பெற்றுக்கொடு.
சக்திபாலன்: அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டோம். நம்மை விட்டு பிரிஞ்சுட்டார்னு சொல்ரவங்க தயவு செய்து மரம் நடுங்க லஞ்சம் வாங்காதிங்க நேர்மையா இருங்க.
V.ஆனந்தன்: நாடு மிகப்பெரிய தேசபக்தரை இழந்து விட்டதுஅவர் எங்கு இருந்தாலும் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்துக்கொண்டே இருப்பார்அவரை என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து மறைக்க முடியாது
மழையின் காதலன்: ஒரு டைமாச்சும் அவரை சந்திக்கனும்னு ஆசைப்பட்டேன்.. கடவுளை மனுசன் சந்திக்க சாத்தியம் இல்லைனு காலம் கத்துக்குடுத்துருச்சு.
ஆதிப்: வரலாற்றில் ஒரு தமிழனின் இழப்பிற்கு உலக அளவில் இரங்கல் அனுசரிக்கப்படுகிறது என்றால் அது அப்துல்கலாம் அவர்களுக்குதான்.
தன்சூரான்: மேதையாக இருக்கலாம்எளிமையாக இருக்கலாம்விஞ்ஞானியாக இருக்கலாம்அடக்கமாக இருக்கலாம்ஆனால் அமரராக இருக்க கூடாது.
மணிகண்டன்: இன்னமும் மனம் ஏற்க மறுக்கிறது. .பி.ஜே.அப்துல்கலாமின் மறைவை! இளைஞர்களின் தீப்பந்தமாகவும் மாணவர்களின் உந்துகோளாவும் வாழ்ந்த மகான்! ஒரு மனிதன் எவ்வாறு தன் நாட்டை  மட்டும் நேசித்திருக்க முடியும்? அதற்கு எடுத்துக்காட்டு இவர். தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த உன்னதமான மாமனிதர் .பி.ஜே.அப்துல்கலாம்.
நயுகாத்ஸ்: நம்மிடம் நெருங்கி பழகாத ஒருவரின் மரணம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனில் இதுவே அவரின் வாழ்வின் வெற்றி.
பிரசாந்த்: உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராம் கனமுள்ள செயற்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை.
அர்வின்பிடோ: அடுத்த சச்சின் இருக்கலாம், அடுத்த சூப்பர் ஸ்டார் இருக்கலாம் அடுத்த அப்துல்கலாம் இருக்க முடியாது அவருக்கு அவரே நிகர்.
SKP.கருணா: தனித்தப் புகழுடைய தமிழன் அப்துல்கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.
சத்யான்: 60-வயதுகளிலேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் அப்துல்கலாம்.
ஆதிதமிழன்: மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.
புகழ்: நேரில் சந்தித்திராதவர்ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதெரு உணர்வு. அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை. அப்துல்கலாம்.
மனோஜ்: தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தில் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்.
சங்கீதா: கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.
சதீஸ்குமார்: ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் மற்றும் அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் அப்துல்கலாம்.
ஞா.நீலிக்குமார்: காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84- வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்.
ஸ்பகமீட்: எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர்.
காக்கை சித்தர்: இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார்.
இபிகின்மி: ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும் தலைவன்.
SKP.கருணா: தனது பதவிக் காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனச்சாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் அப்துல்கலாம்.
ரவிடேஜ் சகு: தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம்.
சிவா: உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.
தமிழச்சி: எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.
தமிழ். ஜவகர்: கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது.
மு.நிஜாம் தீன்: எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு அப்துல்கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை.
ஜாஹீர்: வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி .பி.ஜே.அப்துல்கலாம்.
குமார் பரமேஸ்வரன்: இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உகல நாயகன் அப்துல்கலாம்.
இசாத்: எங்கள் ஊரில் கிடைத்த வைரம்.. எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும்.
நெல்லை சீமையிலிருந்து: கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார்.
விஜய் சேகர்: அறிவார்ந்த எளிமையின் சின்னம் அப்துல்கலாம்.
சின்ன துறை: இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஓய்வை எடுத்துக் கொண்டது.
C.முத்துகுருசாமி: பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.
சுஜீ: கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று.
V.S. மனசு: வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்க்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான்.
தலைவர்கள் அஞ்சலி:
மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தலைவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். விமான நிலையத்துக்கு வந்து அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அப்துல்கலாம் வீட்டுக்கும் வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது. அவர் மீதான அவர்களது அன்பையும், மதிப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. அப்துல்கலாம் உடலுக்கு முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகவுடா, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மூத்த மத்திய மந்திரிகள், உத்திர பிரதேச மாநில முதல்- மந்திரி அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், மத்திய மந்திரி ஜிஜேந்திர சிங், மத்திய மந்திரி ஹர்ஷவரதன், கோவா கவர்னர் மிர்துலா சிங்கா கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கர் ...தி.மு. எம்.பிக்கள் மற்றும் திரளான தலைவர்கள் கட்சி வேறுபாடின்றி திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சார்பிலும், அப்துல்கலாம் உடலுக்கு மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் தூதர், அப்துல்பஷீத், இஸ்ரேல் தூதர் டேனியல்கார்மோன் உள்ளிட்ட, பல வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் அஞ்சலி செலுத்தினர். தலைவர்களை தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் இரவு 10 மணி வரையில் பொதுமக்கள் திரண்டு வந்து. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தங்கள் மனம் கவர்ந்த மகத்தான தலைவர் அப்துல்கலாமுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
காத்திருந்த பொது மக்கள்:
அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலையிலேயே, அதுவும் அவரது உடல் டெல்லி வந்து சேர்வதற்கு முன்பாகவே, அவரது வீட்டின் முன் பொதுமக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம், கடல் அலையென திரளும் என்பதால் அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டனர்.
தவிப்பு:
காலை 6.30 மணிக்கே அங்கு வந்துவிட்ட மோகன் என்பவர். “அப்துல்கலாம்தான் என் ஆதர்ச வழிகாட்டி. அவர் மக்கள் ஜனாதிபதி மட்டுமல்ல. மக்களின் கவிஞரும் ஆவார்என கூறினார். அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்த உடனேயே, பள்ளி கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என வாழ்வின் பல்வேறு நிலையில் உள்ள பொதுமக்கள் அணி, அணியாக வந்தனர். மறைந்த தலைவரின் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் அவர்கள் வந்து தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.
புற்றுநோயாளி:
வாய்புற்று நோயால் அவதிபடுகிற பிரகாஷ் குல்கர்னி (வயது 62) என்பவரும், அப்துல்கலாம் உடலை கடைசி முறையாக பார்த்துவிட வேண்டும் என்று தனது மகளை அழைத்துக் கொண்டு வந்து, இறுதி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது. அப்துல்கலாமை நேரில் ஒரு முறைகூட சந்தித்திராதவர்கள். அறிமுகம் இல்லாதவர்கள் அவரது பேச்சினால், எழுத்தினால் செயல்பாடுகளால் கவரப்பட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். மாணவ, மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்து நின்று தங்கள் கனவு நாயகர் அப்துல்கலாமிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகி விட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், பாதுகாப்பு படையினர் சிரமப்பட்டனர்.
அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு பூரண அரசு மரியாதையுடன் நடைபெற ஏற்பாடு:
ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து காலை 7 மணிக்கு, பாலம் விமான நிலையத்திற்கு அப்துல்கலாமின் உடல் கொண்டு வரப்படுகிறது. அப்துல்கலாமின் உடலை எடுத்து வரும் சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து 7.45 மணிக்கு மதுரைக்குப் புறப்படுகிறது. மதுரையிலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அப்துல்கலாமின் உடல் இராமேஸ்வரத்திற்கு நண்பகல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வரும் அப்துல்கலாமின் உடலை தமிழக அரசு சார்பில் கவர்னர் ரோசையா மற்றும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் பெறுகின்றனர். அப்துல்கலாமின் உடலுடன் மத்திய மந்திரி வெங்கைய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோரும் உடன் வருகின்றனர். அப்துல்கலாமின் உடல் வருகையையொட்டி, இராமேஸ்வரம் பள்ளி வாசல் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தியும் வந்தனர். முதல் நாள் இரவு முழுவதும் பொதுமக்கள் அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்தியபடி இருந்தனர். இராமேஸ்வரத்தில் உள்ள அவர் படித்த பள்ளி மாணவ-மாணவியர்களும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி அஞ்சலி செலுத்தினர். இராமேஸ்வரத்தில் அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பேதமில்லாமல் தங்கள் மண்ணின் மைந்தன் என்ற பெருமையை நினைத்து அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியபடி இருந்தனர். இராமேஸ்வரத்தில் மாலை 7 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்காக அப்துல்கலாமின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பள்ளி வாசலில் இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேயக்கரும்பு பகுதியில் வியாழக்கிழமை 11 மணிக்கு முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் அஞ்சலி செலுத்துவதற்கு வரும் முக்கிய நபர்களுக்காக பேருந்து நிலையம் அருகே பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இராமேஸ்வரத்தில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கப்பற்படை, கடலோர பாதுகாப்பு படையினரும் உஷார் படுத்தப்பட்டனர். இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திரமோடி, மூத்த மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் என முக்கியமானவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை:
                        மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் இறுதிச்சடங்கை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 30.07.2015 வியாழக்கிழமை தமிழகம் வந்தார். தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இராமேஸ்வரம் சென்றார். அதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 28.07.2015 அன்றே மதுரை விமான நிலையம் வந்தனர். அங்கு பிரதமரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், 6 மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி தலைவர்கள் இராமேஸ்வரத்தில் குவிந்தனர்:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். .பி.ஜே.அப்துல்கலாமின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விரைந்து வந்தனர். திமு. பொருளாளர் மு..ஸ்டாலின் 28-ந் தேதி மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு தங்கியிருந்த அவர் 29-ந் தேதி பிற்பகல் இராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் ஏராளமான தி.மு. நிர்வாகிகளும் சென்றனர். தே.மு.தி. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி. இளைஞர் அணி செயலாளர் சுதீஸ் ஆகியோர் 29-ந் தேதி காலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புரப்பட்டு வந்தனர். அங்கிருந்து இராமேஸ்வரத்திற்கு தே.மு.தி. எம்.எல்..க்கள் மற்றும் நிர்வாகிகளும் சேர்ந்து சென்றனர். தமிழக பா.. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 29-ம் தேதி காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் இராமேஸ்வரம் சென்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன் 29-ந் தேதி காலை விமானம் மூலம் மதுரை சென்றார் அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று அப்துல்கலாம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார். .தி.மு. பொதுச்செயலாளர் வைகோ 28-ந் தேதி இரவே இராமேஸ்வரம் வந்தார். அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்ற வைகோ, அப்துல்கலாமின் அண்ணன் மற்றும் பேரன் ஷேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுள் ஆப்தீன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அப்துல்கலாம் இல்லத்தில் உள்ளமிஷன் ஆப் லைப்கண்காட்சியை ஒரு மணிநேரம் பார்வையிட்டார். 29-ந் தேதி காலை இராமேஸ்வரத்தில் அப்துல்கலாமின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார். தா..கா. தலைவர் ஜி.கே.வாசன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து இராமேஸ்வரம் சென்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அப்துல்கலாமின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பா.. இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து மதுரை வந்து அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் .எம்.விக்கிரமராஜா மண்டல தலைவர் சதக்கத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்..,க்கள் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் இராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
அப்துல்கலாமின் உடல் நல்லடக்கம்:
                        அப்துல்கலாமின் உடல் 29.07.2015 அன்று நன்பகல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது. அப்துல்கலாமின் உடலுக்கு பல்வேறு மாநிலத் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என எண்ணற்றோர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்த நிலையில் அப்துல்கலாமின் உடல் 30.07.2015- அன்று காலையில் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். 30-ந் தேதி காலை அவரது இல்லத்திலிருந்து அப்துல்கலாமின் உடல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அது முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் அப்துல்கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. மக்கள் வெள்ளத்தில் அப்துல்கலாமின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், பாரத மாதாவிற்கு ஜே! என்ற கோஷத்துடன் சென்றனர். பள்ளிவாசலில் இருந்து இராமேஸ்வரம் நகர வீதிகள் வழியே 4 கிலோ மீட்டர் தொலைவில் தங்கச்சிமடம் அருகே உள்ள பேயக்கரும்பு என்ற இடத்தை இறுதி ஊர்வலம் சென்று அடைந்தது. அப்துல்கலாமின் உடல் நல்லடக்கத்திற்காக அமைக்கப்பட்டிருந்த குழியின் அருகே உடல் இறக்கி வைக்கப்பட்டது. மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தி உடலை சுற்றிவந்து கும்பிட்டார். நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தமிழக கவர்னர் ரோசையாவும் அஞ்சலி செலுத்தினார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் .பி.பன்னீர்செல்வம் தமிழக நிதியமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திரமோடி, அப்துல்கலாம் அவர்களின் அண்ணனிடம் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார். அப்துல்கலாமின் உடல் 11-மணிக்கு மேல் முழு அரசு மரியாதையுடன் 21 இராணுவ குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைத்து தேசியக்கொடி நட்டு வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி:
பிரதமரிடம், விஜயகாந்த் கோரிக்கை:
அப்துல்கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பிரதமர் நரேந்திரமோடியிடம், அஞ்சலி செலுத்த வந்த தே.மு.தி.. நிறுவன தலைவர் விஜயகாந்த் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் இது தொடர்பாக தே.மு.தி..வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அப்துல்கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடியிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு உலகத்தையே குறிப்பாக தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்துல்கலாம் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் பிறந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பதவிக்கு புதிய அடையாளத்தை கொடுத்தவர்  அப்துல்கலாம். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மாணவர் சமூகத்துக்காக அர்பணித்தவர். அவரது பிறந்த நாளை (அக்டோபர்- 15) நாட்டின் இளைய சமுதாயமான மாணவர் சமுதாயம் கொண்டாடும் வகையில்தேசிய மாணவர் தினமாகஅறிவிக்க வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment